ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால், தில்லையடி வள்ளியம்மை பள்ளிக்கு வரும் 15ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கதிர்காமம் தில்லையடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியை ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து வரும் 15ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியான ஆசிரியை கொரோனா பரிசோதனை செய்து தனிமையில் இருக்காமல் பள்ளிக்கு வந்தார். இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.