வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்த காட்டு யானைகள் அரசு பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு ேகட்டை உடைத்து நொறுக்கியதால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள் யானைகளை தடுக்க நடவடிக்கைகளை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். குடகு மாவட்டம் சோமவாரப்பேட்டை தாலுகா கணூரு கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதிகளிலிருந்து கிராமத்திற்குள் புகும் காட்டு யானைகள் பொதுமக்களை அச்சுறுத்தியும் விளைபயிர்களையும், வீடுகளையும் நாசப்படுத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று காலை கணூரு கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளியும், பள்ளியின் கேட்டை உடைத்தும் நாசப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்