இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன.
இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 28 ஆக இருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை, 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: http://ignou.ac.in/userfiles/Common-Prospectus-English.pdf