3,550 பட்டதாரி ஆசிரியர் உட்பட 4,970 பணியிடங்களுக்கு 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல் - அரசாணை வெளியீடு.



சுருக்கம் - பள்ளிக் கல்வி - 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என பொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வித் [பக50] துறை அரசாணை (டி) எண்.62
நாள் 26.04.2021 திருவள்ளுவராண்டு 2052, பிலவ வருடம், சித்திரை 13
படிக்கப்பட்டவை : - * * அரசாணை (நிலை) எண்.198, பள்ளிக் கல்வித் (சி2) துறை, நாள் 07.12.2011. அரசாணை (நிலை) எண்.38, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 18.02.2016 அரசாணை (1டி) எண்.320, பள்ளிக் கல்வித் (அகஇ துறை, நாள் 24.05.2017. அரசாணை (1டி) எண்.2018, பள்ளிக் கல்வித் (அகஇ) துறை, நாள் 23.04.2018. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண் 001512/ எல்இ3/ 2021, நாள் 29.01.2021 ஆணை :- | மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2011-12 ஆம் கல்வியாண்டிற்கு 710 ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி, நகராட்சி, நலத்துறை நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும், அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட 710 பள்ளிகளுக்கும், ஒரு உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வீதம் 3,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் வீதம் 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்களும், ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் விதம் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் ஆக மொத்தம் 4,970 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணைகள் வெளியிடப்பட்டன.
2. மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கான 2013-14ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவில் 2011-12ல் அனுமதிக்கப்பட்ட 710 உயர்நிலைப் பள்ளிகளில் 158 பள்ளிகளுக்கான ஒப்புதல் நீக்கம் செய்யப்பட்டது. எனினும், இப்பள்ளிகள் மாணவர்களின் கல்வி நலன் கருதி தொடர்ந்து செயல்பட அனுமதித்தும், இப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான செலவினம் மாநில நிதியில் மேற்கொள்ள அனுமதித்தும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு ஆனை வழங்கப்பட்டதால் மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், இப்பணியிடங்களுக்கான செலவினத்திற்கான கணக்குத் தலைப்புகள் குறித்து திருத்தம் செய்து ஆணை வெளியிடப்பட்டது. 3. மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மேற்குறிப்பிட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 1,550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள், 710 இளநிலை உதவியாளர் அன. இப்பாளிகனான தினவருக்...
பணியிடங்கள் ஆக மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
4.தற்போது இப்பணியிட தொடர் நீட்டிப்பு 31.12.2020 உடன் முடிவடைந்துள்ளதால், இப்பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து ஆணை வழங்கிடுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் அரசினை வேண்டியுள்ளார்.
5. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் நன்கு பரிசீலிக்கப்பட்டு, மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 2011-12ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட 710 உயர்நிலைப் பள்ளிகளுக்கு இவ்வரசாணையின் இணைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தோற்றுவிக்கப்பட்ட 3,550 பட்டதாரி ஆசிரியர் (புதிய ஊதிய விகிதம் : நிலை-16, ரூ.36,400-1,15,700) பணியிடங்க ளும், 710 ஆய்வக உதவியாளர் (புதிய மாதிய விகிதம் = நிலை-5, ரூ.18,200-57,900) பணியிடங்களும், 710 இளநிலை உதவியாளர் (புதிய ஊதிய விகிதம் : நிலை-8, ரூ.19,500-52,000) பணியிடங்களும் என மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது. 6. மேலே பத்தி 5ல் தொடர்நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில் இவ்வரசாணையின் இணைப்பு-1ல் உள்ள 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த 2,760 ஆசிரியர் மற்றும் 1,104 அலுவலக பணியாளர்கள் ஆக மொத்தம் 3854 பணியிடங்களுக்கான செலவினம் முதற்காண் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்பட வேண்டும் : +2202-பொதுக்கல்வி - 02 இடைநிலைக் கல்வி - 109 அரசு இடைநிலைப் பள்ளிகள் - மாநிலச் செலவினங்கள் - KH அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளிகளை நிலை உயர்த்துதல் - 301 சம்பளங்கள்." (த.தொ .கு-2202-02-109-KH-30100)
7. இவ்வரசாணையின் இணைப்பு-1ல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியிடங்களின் சம்பளம் குறித்த செலவினம் கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும் :
*2225- ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஏனைய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சிறுபான்மையினர் நலன் 0-ஆதிதிராவிடர் நலன் 277 கல்வி - மாநிலச் செலவினங்கள் - AA பள்ளிக் கல்வி." 301- சம்பளங்கள். {IFHRMS DPC 2225-01-277-AA-30100).
2. மேலே பத்தி-5ல் தொடர்நீட்டிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள 710 உயர்நிலைப் பள்ளிகளில் இவ்வரசாணையின் இணைப்பு-ல் உள்ள 552 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியிடங்களின் காதியச் செய்வினங்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திலிருந்து உடனுக்குடன் ஈடுசெய்யப்பட்டு, கீழ்க்கண்ட கணக்கு தலைப்பில் வரவு வைக்கப்பட வேண்டும் :
10202 - கல்விப் போட்டி விளையாட்டுகள், கலையும் பண்பாடும் – 01 பொதுக் கல்வி - 102 இடைநிலைக் கல்வி - AL அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் ஏற்படும் செலவுகளை ஈடு செய்தல்" (த.தொ .கு. (02012-01-102-AL-22101).
CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Flash News : மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை



மே 1ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை






2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பெருந்தொற்று பரவலின் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் நாளது வரை ஏற்படவில்லை . 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் துவக்கப்பட்டு கோவிட் -19 நோய் தொற்று அதிகரித்ததால் , 22.03.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன . 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் , 05.05.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட் -19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை . எனினும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும்.



மேலும் , ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு Bridge Course Material மற்றும் Work book வழங்கப்பட்டு , இது தொடர்பான நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது . இந்த சூழ்நிலையில் , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வருகின்ற 01.05.2021 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது . எனினும் , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை ( Guidance ) ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு Bridge Course Material மற்றும் Work book இல் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும் , பயிற்சிகளை மேற்கொள்ளவும் , வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும் , இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் உள்ள அலைபேசி , வாட்ஸ் அப் அல்லது பிற டிஜிட்டல் வழிகள் மாற்று வழிகள் ( Digital / Alternate Modes ) பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் . மாணவர்கள் மேற்காண் வழிகளில் அனுப்பும் பயிற்சிகளுக்கான விடைத்தாட்களை சரிபார்த்து தேவையான வழிகாட்டுதல்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் . அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் பொருட்டும் , அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும் , மாணவர்களுக்கான மேற்கண்ட பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும் 2021 மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் , இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது . மேற்காண் வழிகாட்டுதல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் .

18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் :


 



நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவர்களுக்கான இணையதள முன்பதிவு நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு எந்த நேரத்திலும் நேரடியாக தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், மே 1 முதல் தடுப்பூசி போடப்பட உள்ள 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வசதி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஏற்கனவே, முதல் டோஸ் போட்டவர்களுக்கு இன்னும் 2வது டோஸ் கிடைக்கவில்லை. 18-45 வயதுகாரர்களுக்கும் தடுப்பூசி போடத் தொடங்கினால், தடுப்பூசியின் சப்ளையில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, இந்த வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆல்லைனில் முன்பதிவு செய்து இருந்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களுக்கோ, மருந்துவமனைகளுக்கோ இவர்கள் நேரடியாக சென்றால் தடுப்பூசி போட மாட்டார்கள்.


தமிழக அரசின் உத்தரவை மீறி சேலம் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான தேர்வு!: மாணவர்கள் வரவழைப்பு..!!


சேலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி 10ம் வகுப்பு மாணவர்களை வரவழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.. கொரோனா தொற்றானது அதி வேகமாக பரவி வரும் நிலையில், சேலம் மாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பில் தேறிய மாணவர்கள் 11ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 1 ஆண்டுகளாகவே பள்ளிகள் இயங்கவில்லை. கொரோனா தொற்றின் 2ம் அலையானது மார்ச் மாதத்தில் இருந்து அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

நேற்று ஒரேநாளில் மட்டும் 12,600க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்திலும் நேற்று ஒரேநாளில் 501 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசானது 11ம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் செய்து அறிவித்திருக்கிறது. மேலும் பள்ளிகளை திறக்கக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவையும் பிறப்பித்திருக்கிறது. இந்த நிலையில், சேலம் மாநகரில் 4 ரோடு பகுதியில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேறிய மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுத வரவழைக்கப்பட்டுள்ளனர்.

2 தினங்களுக்கு முன்பு தொலைபேசி மூலமாக அவர்களது பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்ற மாணவர்கள் 11ம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வினை எழுதி அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 11ம் வகுப்புக்கு அனுமதிக்கப்படுவர் எனவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாணவர்கள் வரவழைக்கப்பட்டு தேர்வு வினாத்தாளும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். 

 பிறகு தேர்வு எழுத வந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் மீண்டும் திருப்பி அனுப்பியது. கொரோனா தொற்றுக்கு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலையில், சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவு தேர்வு வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


அடுத்த வாரம் சட்ட பல்கலை ரிசல்ட் வெளியீடு



தமிழக சட்ட பல்கலையின், 'ஆன்லைன் செமஸ்டர்' தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பல்கலையின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ஸ்ரீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளி மற்றும் பல்கலையுடன் இணைப்பு பெற்ற சட்ட கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது.சட்டப் படிப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் - தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவிப்பு.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு, ஜன., முதல், மார்ச் வரை நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள், மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.மாணவர்கள், பல்கலை இணையதளத்தில், ஆன்லைன் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்



கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா நோயாளிகள் சுவாசப் பிரச்னை தீர எளிய வழிமுறை - சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியீடு
தமிழகத்தில் மூன்று வாரங்களாக கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வருகிறது.நாள்தோறும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி மாநிலம் முழுதும் 1.05 லட்சம் பேர் சிகிச்சையில்உள்ளனர்.இந்த எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் இரு மடங்காகும் எனஅஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன. இதனால் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்தாண்டை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் ஐந்தில் நால்வருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.இதனால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
கரோனா நோயாளிகள் சுவாசப் பிரச்னை தீர எளிய வழிமுறை - சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியீடு
சளி காய்ச்சல் குறைவாக உள்ளவர்களும் அறிகுறிகளே இல்லாமல் உள்ளவர்களும் மருத்துவ மனைகளை நாடத் தேவையில்லை.அதே நேரம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவர்கள் டாக்டர்களின் அறிவுரை பெற்றுதான் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.அதற்கும் வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருத்தல் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் எய்ட்ஸ் நோயாளிகள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பல்ஸ், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள்; இரண்டு முக கவசங்கம் அணிவது அவசியம். நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் பெற தனி உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்ப்பு!



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கான பணப்பலன் பெற தனி உத்தரவு பிறப்பிக்க எதிர்பார்ப்பு - அரசின் தடை நாளை முடிவடைகிறது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு *26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது


DIPR-P.R.No.227-Press Release-covid 19 Restriction-Date-24.04.2021.pdf


 கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு 

26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது


ஏப்.26ஆம் தேதி முதல் திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதியில்லை







































காற்றில் கொரோனா வைரஸை அழிக்கும் கருவி !!



இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் மிக அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வேகமாக பரவி மக்களை கொத்து கொத்தாக கொலைசெய்து வருகிறது கொரோனா வைரஸ். அதேநேரத்தில் கொரோனாவுக்கான மருந்துகள், ஆக்ஸிஜன், தடுப்பூசிகளின் தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதனால் என்னசெய்வதன்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் காற்றில் பறக்கும் கொரோனாவை அழிக்க புதிய கருவியை பிரபல நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. காற்றில் உள்ள கொரோனா வைரஸைஅழித்து காற்றை சுத்தப்படுத்தும் கருவியை பாரடே ஓசோன் நிறுவனம் தயாரித்துள்ளது. 
இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

முக்கியமாக ஏசி அறையில் உள்ளவர்களுக்கு கொரோனா தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது. ஏசி அறையில் உள்ள காற்று மீண்டும் குளிரூட்டப்பட்டு உள்ளேயே இருக்கும். கொரோனா வைரஸ் ஏசி அறைக்குள் வந்துவிட்டால் சில மணி நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

எனவே, காற்றில் உள்ள கொரோனா வைரஸை அழிப்பதே ஒரே வழி. இதற்காக அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் R500S மாடல் கருவியை பாரடேஓசோன் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாக வீரியம்மிக்க ஆக்சிஜன் கருவிகளை உற்பத்தி செய்து 50-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. R500S கருவி ஐரோப்பிய உயர்தர சிஇ சான்றிதழை பெற்றுள்ளது. இந்த மாடலை அறையில் பொருத்தினால் அதில் இருந்து வெளிப்படும் அதிதீவிர ஆக்சிஜன் வாயு, ஒரு மேகம் போல ஒவ்வொரு நிமிடமும் வெளிவந்து ஏசி அறையில் உள்ள கொரோனா வைரஸை அழித்துவிடும். பின்னர் அது மனிதர்களுக்கு ஏற்ற ஆக்சிஜன் காற்றாக மாறிவிடும்.

அறையில் உள்ள காற்றை சுத்தப்படுத்தும் கருவி இப்போதுவிற்பனைக்கும், மாத வாடகைக்கும் கிடைக்கும். (தொடர்புக்கு: யார்க் இந்தியா 9790788817), என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் மெசேஜை பாஸ்ட் பார்வேர்டு செய்யும் ஆப்சன் - விரைவில் அறிமுகம்


வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் வெர்சன் மொபைல்களில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜில் பேசுவது மெதுவாகவும் அல்லது பெரிய வாய்ஸ் மெசேஜாக இருந்தால், அதனை பாஸ்ட்பார்வேர்டு செய்துகொள்ளும் வசதியை கொண்டுவரவுள்ளது. 

தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் மொபைல்களுக்கு மட்டும் இந்த ஆப்சன் கிடைக்க உள்ளது. இந்த பாஸ்ட் பார்வேர்டு ஆப்சன் 1x, 1.5x மற்றும் 2x என்ற மூன்று நிலைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்லோவாக கேட்கும் அல்லது பேக்வேர்டு (backward) செய்து பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவில்லை. புதிய அப்டேட் குறித்த முழுவிவரத்தையும் வாட்ஸ்அப் வெளியிடவில்லை. 

விரைவில் இதுகுறித்து முக்கிய அறிவிப்பை பேஸ்புக்குக்கு சொந்தமான நிறுவனமான வாட்ஸ்அப் தனது யூசர்களுக்கு அறிவிக்க உள்ளது. நண்பர்கள் அனுப்பும் வாய்ஸ் மெசேஜானது அவர்கள் அனுப்பும் நார்மல் ஸ்பீடில் இருக்கும். உங்களுக்கு வேகமாக வேண்டும் என்றால் மேனுவலாக செட்டிங்ஸை மாற்றிக்கொள்ள வேண்டும். வாய்ஸ் மெசேஜ் ஸ்பீடை மாற்றிக்கொள்வதற்கான ஐகான் வாட்ஸ்அப் திரையில் தோன்றும். யூ டியூப் மற்றும் டெய்லிமோசன் போன்ற தளங்களில் இருக்கும் கூடுதல் ஆப்சன்களையும் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தலாம் என்றும் யூசர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, வாட்ஸ்அப் நிறுவனம் கோவிட் வைரஸைக் கட்டுப்படுத்தும் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் பங்கேற்றுள்ளது. அதற்காக, உலக சுகாதார மையம் மற்றும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுடன் கரம்கோர்த்துள்ள வாட்ஸ் அப், தங்களது மெசேஜ் தளத்தில் புதிதாக வேக்சின் ஃபார் ஆல் (Vaccines for All') என்ற ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் கரம்கோர்த்துள்ள வாட்ஸ்அப் நிறுவனம், தடுப்பூசி குறித்தும், கோவிட் வைரஸ் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் உதவி எண்களையும் வழங்குகிறது.

தடுப்பூசிக்காக பதிவு செய்வது தொடர்பான தகவல்களையும் வாட்ஸ்அப் வழங்க தொடங்கியிருக்கிறது. புதிய ஸ்டிக்கர்களை பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஸ்டிகர்கள் அனைத்தும் மகிழ்ச்சி, கவலை, தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கோவிட்- லிருந்து மீள்வது குறித்த தகவல்களையும் வாட்ஸ்அப் யூசர்களுக்கு வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்த வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் பரவி வரும் வைரஸ் நிலை குறித்து உலக சுகாதார நிறுவனமும் கவலையை தெரிவித்துள்ளது. உடனடியாக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.



உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள்

சிறைவாசம்அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவிதொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர்புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில்ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவிஇறக்கம் செய்து, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னைஉயர் நீதிமன்றத்தில் புனிதவதி வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்தஉயர் நீதிமன்றம்,


புனிதவதியின் இடமாற்றத்துக்கு தடை விதித்தது. இந்நிலையில், 2008 செப்டம்பர் முதல் 2010 அக்டோபர் வரை கட்டாய காத்திருப்போர்பட்டியலில் வைக்கப்பட்ட புனிதவதி, பிறகு ராமநாதபுரம் மாவட்டத்துக்குமாற்றப்பட்டார்.

இதை எதிர்த்து புனிதவதி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்தஉயர் நீதி

மன்றம், இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறைஆணையர் பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில், புனிதவதி 2014 மே 31-ம் தேதிஓய்வு பெற்றதால், தனது பணியை 2008 முதல்2020 வரை பணிவரன்முறை செய்யக்

கோரி தொடக்கக் கல்வி ஆணையரிடம் மனுஅளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு முன்னிலையில் விசாரணைக்குவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “மனுதாரர் 2020-ம் ஆண்டு கொடுத்தமனுவைப் பரிசீலித்து, 90 நாட்களில் உரிய உத்தரவைப் பிறப்பிக்கவேண்டும்” என தொடக்கக் கல்விஆணையருக்கு உத்தரவிட்டார்.

மேலும், “மனுதாரர் தனது மனு, மொபைல்எண், இ-மெயில் முகவரிபோன்றவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் உடனடி

யாக வழங்க வேண்டும். அவரதுமனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகுறித்து, அந்த அதிகாரி மனுதாரருக்குகுறுஞ்செய்தி, இ-மெயில் அல்லதுபதிவு தபால் மூலம் தகவல்தெரிவிக்க வேண்டும்.

ஒருவேளைஇந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனை அனுபவிக்கவும்நேரிடும்” எனவும் எச்சரித்தார்.





பள்ளி ஆசிரியர்களுக்கு கோடைகால விடுமுறை அறிவிக்க வேண்டும் ஆசிரியர் சங்கம் கோரிக்கை


ஆசிரியர்கள் கொரோனா அச்சத்துடன் பஸ்களில் பயணித்து பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழக அரசு பள்ளி
 ஆசிரியர்களுக்கும் வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவு பிறப்பித்து கோடைகால விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை






ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : பள்ளிக் கல்வித் துறை உத்தரவு



கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய - கடனைத் திரும்பச் செலுத்தாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை : பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.




ஆசிரியர்களே,கூட்டுறவு சங்கத்தை பற்றி தெரிந்துக்கொள்ளவும்.-CLICK HERE

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவருகிறது.


பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் பெரும் நிதி இழப்புஏற்படும் சூழல் உள்ளது என்றுபல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.


ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச் சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள்


உதவி செய்வதாகத் தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.


எனவே, அவ்வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.


அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழிசெய்த தலைமை ஆசிரியர்கள் மீதும்ஒழுங்கு விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை அனுப்ப வேண்டும்.


இனிவரும் காலங்களில் கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையைப் பிடித்தம்செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

CLICK HERE-DIR.PRO






B.Com தேர்ச்சி பெற்றவர்கள், அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ரூ 32,000 - 1,20,000 ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: Notification avail- last date 26.04.2021


B.Com தேர்ச்சி பெற்றவர்கள், அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு ரூ 32,000 - 1,20,000 ஊதியத்தில் BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு: notification avail- last date 26.04.2021

click here - online apply
click here -notification


ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம்


ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பிதழை காண்பித்து பொதுமக்கள் செல்லலாம் - கலெக்டர் தகவல்.
IMG_20210423_172623

மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தம்.


மத்திய அரசு ஊழியர்கள் , ஓய்வூதியதாளர்ளுக்கு நிலுவை அகவிலைப்படி நிறுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தகவல்.
ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிலுவை அகவிலைப்படி வழங்கப்படாது.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக நிதிச்சுமையினை கருத்தில் கொண்டு நடவடிக்கை என தகவல்.


01-07-2021 முதல் திருத்தியமைக்கப்பட்ட வீதத்தில் அகவிலைப்படி வழங்கப்படும் என்று மத்திய அரசு சுற்றறிக்கை.நாள் 23.04.2020
IMG-20210423-WA0010

DSE - ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.



பள்ளிகள் & அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பெற்ற கடன்தொகையை (Through Thrift Society) திரும்ப செலுத்துவது சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்

"Covid-19- Preventive Measures Video"
"Covid-19 Containment Measures Video"


ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் பணி – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு



குருக்ஷேத்ராவில் செயல்பட்டுக் கொண்டுள்ள தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Professor பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுஅறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NIT வேலைவாய்ப்பு விவரங்கள் :
பதிவுதாரர்கள் 26.04.201 தேதியில் குறிப்பிட்ட வயது வரம்பு கொண்டவராக இருக்க வேண்டும்.
Technology, Science, Humanities, Management மற்றும் allied areas ஆகியவற்றில் Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்ட துறைகளில் 10 முதல் 13 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.1,59,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் விரைவில் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
NIT KKR Recruitment Notification PDF

மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் (TC) அவசியம் இல்லை - பஞ்சாப் மாநில கல்வித்துறை உத்தரவு!!



பஞ்சாப் மாநில பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் அவசியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பெற்றோர்களின் சுய அறிவிப்பு மட்டும் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி – ICAI வாரிய உறுப்பினர் விளக்கம்!!
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவை அவசியமாகும். ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் வேறொரு பள்ளியில் சேருவதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தேவைப்படும். பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படாது. தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் நிபந்தனையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தங்கள் குழந்தைகளின் பள்ளியை மாற்ற விரும்பும் பெற்றோர்களுக்கு இந்த மாற்றுச் சான்றிதழ் ஒரு பிரச்சனையாக இருக்க கூடாது என்ற நோக்கில் தன இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
வங்கிகள் வேலை நேரங்களில் மாற்றம் – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இது தொடர்பாக மார்ச் 19ம் தேதி அன்று பஞ்சாபின் பொது அறிவுறுத்தல் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாணவரின் மற்ற விவரங்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும், முந்தைய வகுப்பில் மாணவர் தேர்ச்சி பெற்றது உண்மை என்றும் மாணவரின் பெற்றோர்கள் சுய அறிவிப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் – சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!



கொரோனா தொற்று பாதிப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள்:சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநில முதல்வர் 10 மற்றும் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். சத்தீஸ்கர் கல்வி வாரியம் முன்னதாக 10ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதத்திலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதத்திலும் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருவதால் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலை தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தேர்வுகள் திட்டமிட்டபடியே அதே தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வி வாரியம் ஆலோசித்து வருகிறது. அப்படி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டால் மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாதவர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள்



கணக்குதேர்வு பாகம் 1 10.3.2020 க்கு முன் தேர்ச்சிபெற்று முன்ஊதியஉயர்வு பெறாத அமைச்சுப்பணியாளர்களின் கூடுதல் விபரங்கள் அனுப்பக்கோரி இணைஇயக்குனர் (பணியாளர்தொகுதி) அவர்களின் செயல்முறைகள் 
 

 click here to download


50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – 7வது ஊதியக்குழு !!




50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி – 7வது ஊதியக்குழு !!


7வது ஊதியக்குழு குறித்து வெளியான தகவல்களின் படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் தங்கள்அகவிலைப்படியில் (DA) 28% வரை உயர்வு பெறுவார்கள்.


அகவிலைப்படி உயர்வு:

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டது. வரிவசூல் குறைந்ததால் அரசுக்கும் வருவாய் குறைந்தது. எனவே செலவினங்களை குறைக்க அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இவை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏ.ஐ.சி.பி.ஐ) வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறைந்தபட்சம் டி.ஏ.வை 4 சதவீதம் அதிகரிக்க முடியும். 2020 ஜனவரி முதல் ஜூன் வரை டிஏவில் 3 சதவீதம் அதிகரிப்பு, 2020 ஜூலை முதல் டிசம்பர் வரை 4 சதவீதம் அதிகரிப்பு, ஜனவரி முதல் ஜூன் 2021 வரை4 சதவீதம் அதிகரிப்பு ஆகியவை இதில் அடங்கும். இதனால் மொத்த டிஏ 28 சதவீதமாக உயரும்.




அதேநேரத்தில் மாத சம்பள உயர்வு கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு ஊழியரின் மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.21,000 என்றால், அவரது மாதாந்திர 7வது ஊதியக்குழு சம்பள உயர்வு ரூ.51,400 (ரூ.20,000 x 2.57) ஆகும். 2021 ஜூலை 1 முதல் வரவிருக்கும் அகவிலைப்படியின் எதிர்கால தவணைகளை வழங்குவதற்கான முடிவு எடுக்கப்படும் போது, ​​டிஏ விகிதங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் அமல்படுத்தப்படும். இதுஜூலை 1, 2021 முதல் அமல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் சேர்க்கப்படும்.





ஜூலை 1 முதல் DA இன்எந்த அதிகரிப்பு அந்த நாளிலிருந்து மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். இதன் பொருள், முந்தைய காலத்திற்கு டிஏ திருத்தப்படாததால் ஊழியர்கள் எந்தவொரு நிலுவைத் தொகையும் பெற மாட்டார்கள் என கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவிகித அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 21 சதவிகித அதிகரிப்பு ஆகியவை மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது 2020 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவிருந்தது. தற்போது வரை, மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத டி.ஏ. வழங்கப்பட்டு வருகிறது.


How to Update Bridge course material-TN EMIS App



ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு Bridge Course material and Bridge Course work book வழங்கப்பட்டு வருகிறது அதனை உறுதி செய்யும் விதமாக TN EMIS Mobile App யில் புதிய பகுதி உருவாக்கபட்டுள்ளது.
Bridge Course material and Bridge Course work book மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரத்தினை TN EMIS Mobile App யில் பதிவு செய்வது எப்படி என்பதனை கீழ் காண் காணொலி மூலம் தெரிந்து கொள்ளாம் ?

Update Bridge course material-TN EMIS App - View here

Update You Emis APP Version - 0.0.38


ஓராண்டாக கற்பித்தல் இல்லை ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை


ஓராண்டாக பாடம் எடுக்காததால், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பல பள்ளிகளில், ஆசிரியர்கள் வாரம் இரண்டு நாட்கள் வந்தால் போதும் என, அறிவுறுத்தப் பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா பரவலால், ஓர் ஆண்டாக பள்ளிகள் முழுமையாக இயங்கவில்லை. ஒன்பது முதல் பிளஸ் 1 வரை ஒரு மாதமும், பிளஸ் 2வுக்கு மூன்று மாதங்களும் பள்ளிகள் செயல்பட்டுள்ளன. இந்நிலையில், எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முழுதும், ஒரு நாள் கூட பாடம் நடத்தப்படவில்லை. அனைவரும், 'ஆல் பாஸ்' செய்யப்படும் நிலை உள்ளது.அவர்களுக்கு எந்த வகையிலும் கற்பித்தல் பணியை மேற்கொள்ள, தொடக்கக் கல்வி துறை முயற்சி எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
கொரோனா பரவலால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிப்பு.
மேலும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும், அவர்கள் மாணவர்களின் கற்பித்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும், உரிய வழிகாட்டல் வழங்கப்படவில்லை. பெரும்பாலான நாட்களில் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், மாத சம்பளம் பெறுவதற்காக, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு மட்டும் சென்றுள்ளனர். இந்நிலையில், மேலும் சலுகை வழங்கும் விதமாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு வந்து சென்றால் போதும் என, பல மாவட்டங்களில் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, பல ஆசிரியர்கள், வாரம் இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்து, வருகைப் பதிவில் கையெழுத்திட்டு செல்கின்றனர். பலர் சொந்தமாக தொழில் செய்ய துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் இலவச தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு..!
இதே நிலை நீடித்தால், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிக்கும் போது, தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தேர்ச்சி பெறும் நிலையே ஏற்படும்.அதற்கு முன், தொடக்க கல்வி துறை விழித்துக் கொண்டு, கற்பித்தல் தொடர்பான திட்டங்களை வகுக்க வேண்டும் என, பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


சி.ஏ., படிப்புக்கு முதுநிலை பட்டம் அந்தஸ்து



சி.ஏ., போன்ற கணக்கு தணிக்கை படிப்பு முடித்தவர்கள், இனி நேரடியாக, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கல்லுாரிகளில் இளநிலை படிப்பும், பின், முதுநிலை படிப்பும் முடித்தால் மட்டுமே, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும்.இந்நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், சி.ஏ., உள்ளிட்ட கணக்கு தணிக்கை படிப்பை முடித்தவர்களும், முதுநிலை படிப்பை முடித்தவர்கள் போல், ஆராய்ச்சி படிப்புக்கும், போட்டி தேர்வுகளும் எழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:ஐ.சி.ஏ.இ.,யான கணக்கு தணிக்கையாளர் அமைப்பு; ஐ.சி.எஸ்.ஐ., என்ற நிறுவன செயலர்கள் அமைப்பு; ஐ.சி.ஏ.ஐ., என்ற விலை கணக்கீட்டாளர் அமைப்பு ஆகியவற்றில் இருந்து, கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.

அதன்படி, மேற்கண்ட அமைப்புகளின் அங்கீகாரம் பெற்று, சி.ஏ., - சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய படிப்புகள், இனி முதுநிலை பட்டப் படிப்புக்கு நிகராக கருதப்படும்.இதற்கான ஒப்புதல், யு.ஜி.சி.,யின் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா தாக்குதலில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை! கலெக்டரய்யா...காப்பாத்துங்க! சுழற்சி முறைக்கு வேண்டுகோள்



'கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, வீட்டை விட்டு யாரும் அனாவசியமாக வெளியே செல்லாதீர்கள்...முக கவசம் போடுங்கள்...கை கழுவுங்கள்...!'- இப்படியெல்லாம் மைக் வைத்து பிரசாரம் செய்யும் அரசுதான், மாணவர்களே வராத பள்ளிக்கு, ஆசிரியர்களை வரவழைத்து, கொரோனா பரவலை ஊக்குவிக்கிறது. தொற்றை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம், வேடிக்கை பார்க்கிறது.
Child Psychology பயிற்சி பெற்று , பட்டதாரி கல்வித் தகுதியுடன் , இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கொரோனா தொற்று காரணமாக, கடந்தாண்டு மார்ச் மாதம், பள்ளிகள் மூடப்பட்ட போது, ஆசிரியர்களுக்கும் விடுப்பு அளிக்கப்பட்டது. பின், பத்தாம் வகுப்புக்கு, ரிசல்ட் வெளியிடுவதற்காக, ஜூன் மாதத்தில் இருந்து, ஆசிரியர்கள் சுழற்சி முறையில், பள்ளிக்கு சென்றனர்.ஊரடங்கு கட்டுப்பாடுகள், படிப்படியாக தளர்த்தப்பட்டதால், ஜன.,18ம் தேதியில் இருந்து, அனைத்து ஆசிரியர்களும், பள்ளிக்கு வர ஆரம்பித்து விட்டனர்.இப்போது மீண்டும் தொற்று வேகமாக பரவுவதால், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கற்பித்தல் பணி சுத்தமாக இல்லை. ஆனாலும், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வலுக்கட்டாயமாக வரவழைக்கப்படுகின்றனர். வெவ்வேறு பகுதிகளில் இருந்து, பொது போக்குவரத்து மூலம், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மத்தியில், தற்போது வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் பலர், தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.விடுமுறை வேண்டும்ஆசிரியர்களில் பலர், 50 வயதை கடந்தவர்கள் என்பதால், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதித்தவர்களாக உள்ளனர். ஓய்வு பெறும் வயதை, 58 வயதில் இருந்து 60 ஆக உயர்த்தியதால், இவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.நோய் தொற்றால், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதால், விடுமுறை அறிவிக்க வேண்டும்; வீட்டில் இருந்து ஆன்லைன் கற்பித்தலை தொடர தயார் என்கின்றனர்.தேர்தல் நேர கூட்டங்கள், பிரசாரங்களால் தொற்று பரவிய போது, மவுனம் காத்த அதிகாரிகள், தற்போது அரசு ஊழியர்களுக்கு, தொற்று பரவும் சமயத்திலும், எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுழற்சி முறையிலாவது...இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, '' ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டபோது, ''முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றிதான், தொற்று ஏற்படாமல் காத்து கொள்ள வேண்டும். பிற அரசுத்துறை அலுவலர்களும், பணியில் உள்ளனர். ஆசிரியர்களுக்கு விடுப்பு அளிப்பது குறித்து, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
மாணவர் சேர்க்கை - தயாராகிறது தொடக்க கல்வித்துறை
கோவையில் கொரோனா தொற்று, தினமும் 700ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. இக்கட்டான இவ்வேளையில், தொற்று மேலும் பரவுவதை தவிர்க்க, என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை நடவடிக்கைகளையும், மாவட்ட நிர்வாகம் செய்து, மக்களை காக்க வேண்டும்.அந்தந்த மாவட்டத்தில் நோய் தொற்று பரவும் வேகத்தை பொறுத்து, முடிவு எடுக்கும் அதிகாரம் கலெக்டருக்கு உள்ளது.குறைந்தபட்சம் சுழற்சி முறையிலாவது, பணிக்கு வரவழைத்து, கோவையை தொற்றில் இருந்து காப்பாற்ற வேண்டும்.செய்வாரா நம் கலெக்டர்?

பள்ளிகளுக்கு சி.இ.ஓ., எச்சரிக்கை


'அரசிடம் இருந்து உத்தரவு வரும் வரை, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை இப்போது நடத்தக்கூடாது,'' என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. இவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்த, தெளிவான வழிகாட்டுதல், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அதிக மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவர்கள், அந்தந்த பள்ளி அளவில் பொதுத்தேர்வு எழுதலாம் என சமீபத்தில், சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால், இது உண்மையல்ல என, இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.எனவே, பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண்கள் கணக்கிடுவது, பிளஸ் 1 சேர்க்கைக்கான நடைமுறைகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை பற்றிய, எந்த அறிவிப்பும் இல்லை.
அட்மிஷன் கேட்டு வருபவர்களுக்கு, இவர்களிடம் பதில்  ஆனால், பல தனியார் பள்ளிகள், தங்களிடம் படித்த மாணவர்களுக்கே, பிளஸ் 1 அட்மிஷன் தர மறுப்பதாகவும், உடனே பணம் செலுத்தினால் மட்டுமே, பாடப்பிரிவுகள் வழங்க முடியும் எனவும், பெற்றோருக்கு நெருக்கடி தருவதாக, புகார் எழுந்துள்ளது. கோவை மட்டுமல்லாமல், மாநிலம் முழுக்க, இதே நிலையே உள்ளது. தொற்று வேகமாக பரவும் தற்போதைய சூழலில், வருமானம் குறைந்து வருவதால் பெற்றோர் செய்வதறியாது தவிக்கின்றனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது

''கல்வித்துறையின் உத்தரவை மீறி, தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. பிளஸ் 1 சேர்க்கை தற்போது நடத்த கூடாது. இது குறித்து, சுற்றறிக்கை வாயிலாக, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கேட்டபோது, ''இது தொடர்பாக, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

முதுநிலை ஆசிரியர் பட்டியலை மாற்றி வெளியிட வலியுறுத்தல்!





'முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை, முழுமையாக மாற்றி வெளியிட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



அவரது அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான, போட்டி தேர்வுகள், 2019 செப்டம்பரில் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு துவக்கத்தில், முடிவுகள் வெளியிடப்பட்டன. 



மேல் முறையீடு



வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண் பெற்று, பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமிக்கப்பட்டனர். அதனால், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வாக வேண்டிய, மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு, அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. 



இந்த அநீதியை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவு பணியிடங்களுக்கு தேர்வான, எம்.பி.சி., மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவு பணியிடங்களில், தரவரிசையில் அடுத்த நிலையில் உள்ள, எம்.பி.சி., மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. அதை ஏற்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த, சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை, கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளது.இதற்கு காரணமான, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும்.நடவடிக்கைஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட, எம்.பி.சி., மாணவர்கள், 34 பேருக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க வேண்டும். அதேபோல, தமிழ், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களுக்கான தேர்வு பட்டியலையும் திருத்தி அமைத்து, பாதிக்கப்பட்ட மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பணி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


கொரோனா பணி செய்ய நர்ஸ்கள் 600 பேர் புதிதாக நியமனம் :



Tamil_News_large_2749816


சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மார்ச் முதல் பரவத் துவங்கியது. முதல் அலையை விட, இரண்டாவது அலை அதிவேகமாக பரவுகிறது. தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, சென்னையில் தொற்று பரவலின் வேகம் தீவிரமாக உள்ளது. இதனால், சிகிச்சை அளிக்கும் மருத்துவ மனைகளில், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்காக, சென்னை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வாயிலாக, ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவ துவங்கிய பின், ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களில், பெரும்பாலானோர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். தற்போதும், கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒப்பந்த அடிப்படையில், 600 நர்ஸ்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேவை ஏற்பட்டால், கூடுதல் நர்ஸ்கள், டாக்டர்கள் நியமிக்கப்படுவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்" - தமிழக அரசு



அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்" - தமிழக அரசு






ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.


ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு.




2 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்



 
கூடலூர்: கூடலூர் மாவட்டம் பழங்குடியின மாணவர் அரசு உதவித் தொகையில் கையாடல் செய்ததாக 2 தலைமை ஆசிரியர்கள்

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேவாலா பழங்குடியினர் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியசேனன் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.







BREAKING | தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும்.


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் தேர்வு ஒன்றை பள்ளி அளவில் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல.

தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும.

பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்ற விருப்பமுள்ள மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம் என்றும் இந்தத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது




1 முதல் 9ம் வகுப்பு வரை வீட்டில் திறனறிதல் தேர்வு


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு எழுத வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்த கங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள் வீட்டில் இருந்தே விடை எழுத வேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள்அறிவுறுத்தியுள்ளனர்.

40 வருஷத்தில் நம்ம ஊரு எவ்வளவு மாறிப் போச்சு?: கூகுள் எர்த்தில் புதிய வசதி


 




கடந்த 40 ஆண்டில் உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக கண்கூடாக பார்க்கக் கூடிய, ‘டைம் லாப்ஸ்’ வசதி, கூகுள் எர்த்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். ‘கூகுள் எர்த்’ என்ற இணையதள சேவையை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கியது. இதன் மூலம், புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக்கோள் புகைப்படங்களாக பார்க்க முடியும். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு கூகுள் எர்த்தில் கூகுள் நிறுவனம் மிகப்பெரிய மேம்பாட்டை (அப்டேட்) வழங்கி உள்ளது. அதாவது, கடந்த 37 ஆண்டுகளில் உலகம் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது என்பதை காட்டக் கூடிய, ’டைம் லாப்ஸ்’ என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.


இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கூறுகையில், ‘‘மனித வரலாற்றில் இல்லாத வகையில், கடந்த அரை நூற்றாண்டில் நமது பூமி மிக விரைவான சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்டுள்ளது. கூகுள் எர்த்தின் புதிய டைம் லாப்ஸ் அம்சத்தில் 2.4 கோடி செயற்கைக்கோள் புகைப்படங்கள் சேர்க்கப்பட்டு, கடந்த 37 ஆண்டுகளில் பூமியில் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதுவும், 4டி தொழில்நுட்பத்தில் இதை பார்க்கலாம்,’’ என்றார். இது மிகப்பெரிய அப்டேட் என கூறியுள்ள சுந்தர்பிச்சை, இதன் மூலம் புவிக்கோளத்தை புதிய பரிமாணத்தில் காண முடியும் என தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனாவின் நிலை என்ன? ஆய்வின் அறிக்கை வெளியீடு.






கொரோனாவின் உக்கிரம் வரும் ஜூனில் அதிகமாக வாய்ப்புள்ளதாகவும், அப்போது தினசரி பலி 2,320 வரை உயரும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும்நிலையில், தினசரி இறப்பு 1350க்கும் ேமற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் ‘லான்செட்’ கோவிட் 19 ஆணைய உறுப்பினர்கள் ‘இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலையை நிர்வகித்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் கொரோனாவால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஜூன் மாதம் முதல் வாரத்தில் சராசரியாக 2320 ஆக இருக்கும். 


நோய் பரவல் வேகமாக இருந்தாலும், புவியியல் வரையறைகளை பார்த்தால் இரண்டாம் அலையானது, முதல் அலையுடன் கிட்டதட்ட ஒத்துப் போவதாக உள்ளது. இருப்பினும் நகரங்களிலேயே நோய் பரவல் அதிகமாக காணப்படுகிறது. முதல் 50 சதவீதம் அடங்கிய மாவட்டங்களின் எண்ணிக்கை, முதல் அலையின் போது 40 ஆக இருந்தது. ஆனால், தற்போது 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் 75 சதவீதம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 60 முதல் 100 ஆக இருந்தது. ஆனால் முதல் அலையில் இருந்து இரண்டாவது அலை 2 வழிகளில் வேறுபட்டது. முதல் அலையுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் அலையில், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிக அதிகம். 



பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 40 நாட்களுக்கும் குறைவான காலத்தில் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10,000 என்பதிலிருந்து 80,000 ஆக உள்ளது. ஆனால் கடந்த செப்டம்பரில் இந்த அளவை எட்ட 83 நாட்கள் ஆனது. இரண்டாவது வேறுபாடு என்னவென்றால், தற்போது அறிகுறி இல்லாமல் அல்லது பாதி அளவு அறிகுறி உள்ளவர்களுக்கு தொற்று அதிகம் ஏற்படுகிறது. இறப்பு விகிதமானது மார்ச் 2020ல் 1.3 சதவீதமாக இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் விகிதமும் 2021 துவக்கம் வரை 0.87 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கும். ஆனால் ஏப்ரல் மாத துவக்கத்தில் தினசரி இறப்பு எண்ணிக்கை 664 ஆனது. 



இது ஜூன் மாதம் முதல் வாரத்தில் 2,320 என்ற அளவை எட்டும். 2021ல் சோதனைக்காக 1.7 பில்லியன் டாலர்களை இந்தியா செலவிட்டது. ஆனால் தற்போது கூடுதலாக 7.8 பில்லியன் டாலர்களை செலவிட வேண்டி இருக்கும். ஏப்ரல் 11ம் தேதி கணக்கீட்டின்படி 45 வயதிற்கு மேற்பட்ட 29.6 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஆனால் 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முக்கியத்துவ அடிப்படையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். தற்போது கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் 100 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலும், பாதிக்கும் மேல் பற்றாக்குறை ஏற்படும். 



தேசிய அளவில் லாக்டவுனை அமல்படுத்த தேவையில்லை. மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை 7 நாட்கள் தனிமைபடுத்த வேண்டும். 8வது நாள் ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட வேண்டும். 10 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதற்கு அடுத்த 2 மாதங்களுக்கு தடை விதிப்பதால் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாணவர்களுக்கு கோடை வகுப்புகள், முகாம்கள் நடத்த அனுமதியில்லை.






மாணவர்களுக்கு கோடை காலத்தில் நடத்தும் முகாம்கள், வகுப்புகள் பாதுகாப்பானவை அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 8 மாதங்கள் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பினர்.


இந்நிலையில், தற்போது கொரோனாவின் 2வது அலை தாக்குதல் தொடங்கி நாடு முழுவதும் தினமும் 1 லட்சத்திற்கும் மேல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. தேர்வுகளும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்தது. 



இதனால், பள்ளிகளை படிப்படியாக திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, பல தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் வகுப்புகளை எடுக்க அரசு உத்தரவிட்டது. மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதி தேர்வுகள் நடைபெறும் நிலையில், கோடை விடுமுறையில் நடைபெறும் முகாம்கள், வகுப்புகளுக்கு சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு நீச்சல், யோகா போன்ற பயிற்சிகளை இந்த அமைப்புகள் நடத்தி வருகின்றன.



இந்நிலையில், தாம்பரத்தை சேர்ந்த கோடை முகாம் நடத்தும் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 4 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்காக இந்த கோடை முகாம் நடத்தப்படுகிறது. தினமும் 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் இந்த முகாம்களை கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றியே நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். மற்றொரு அமைப்பை சேர்ந்த முகாம் பயிற்சியாளர் கூறும்போது, இந்த ஆண்டு கோடை வகுப்புகளை நடத்தலாமா, கூடாதா என்பது குறித்து எந்த நிலையான அறிவிப்பும் வரவில்லை. அரசுதான் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார். இதற்கிடையே, இந்த ஆண்டு கோடை முகாம்கள் மற்றும் வகுப்புகளை நடத்துவது பாதுகாப்பானதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 



இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோடை முகாம்கள், வகுப்புகளை நடத்த அனுமதி தரப்படவில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ள ஆணையில் கொரோனா ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. அனைத்து சமூக நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பாடு, விளையாட்டு மற்றும் கலை விழாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடு விதிகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.



கோடை முகாம்கள் என்பது சிறுவர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். சிறுவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி ஆலோசிப்பது, விளையாடுவது போன்றவை நடத்தப்படுவது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுவரை எத்தனை குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. குழந்தைகள் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதனால், இதுபோன்ற வகுப்புகளை நடத்தக் கூடாது, அதற்கு அனுமதியும் இல்லை’’ என்றனர்.



இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மூச்சு ஆராய்ச்சி பவுண்டேசன் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் கூறும்போது, ‘‘14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் எளிதாக கொரோனாவை பரப்பக்கூடியவர்கள். அவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பதே சரியானதாகும்’’ என்றார். கோடை முகாம்கள் சிறுவர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதனால்,

இதுபோன்ற வகுப்புகளை நடத்தக் கூடாது, அதற்கு அனுமதியும் இல்லை.


போலி சான்றிதழ் கொடுத்து சேர்ந்து 22 ஆண்டுகள் பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்



அரக்கோணத்தில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டார கல்வி அலுவலர் இந்திரா நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ஷோபனா. இவர் கடந்த 1999ம் ஆண்டு காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். இதைதொடர்ந்து 2020ம் ஆண்டு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று மின்னல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மாற்றப்பட்டார். 


இதையடுத்து அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் உயர்கல்வி மதிப்பெண் சான்றிதழ் போலி என தெரிய வந்தது. இதையடுத்து போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஷோபனா சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சான்றிதழில் 22 ஆண்டுகளாக அரசு பணியாற்றிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆசிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கு விடைத்தாள் அனுப்புவது துவக்கம்


 சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்வுக்கான வெற்று விடைத்தாள்கள் அனுப்பும் பணியை துவங்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.



தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், நேற்று முன்தினம் துவங்கின. இதில், இரண்டு லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.



இந்நிலையில், பொது தேர்வில் மாணவர்கள் பதில் எழுத வேண்டிய வெற்று விடைத்தாள்களை, மாவட்ட வாரியாக தேர்வு மையங்களுக்கு அனுப்ப, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு மையங்களின் பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், தங்கள் தேர்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, வெற்று விடைத்தாள்கள் மற்றும் பார்கோடு அடங்கிய முகப்பு தாள்களை பெற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை உரிய முறையில் மாணவர்களுக்கு வழங்க, தயார் செய்து வைக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.


பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Ircon-International Ltd நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 74 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: C-02/2021

பணி: Works Engineer/Civil

காலியிடங்கள்: 60

தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் சிவில் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Works Engineer/S & T
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் Electrical, Electronics, Electronics and Communication, Electronics and Instrumentation, Computer Science, Instrumentation and Control பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.36,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ircon.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சமீபத்திய புகைப்படம் கையொப்பம், சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் அமைப்பில் மாற்றி விண்ணப்பிக்க வேண்டும் அல்லது இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DGM/HRM, Ircon-International Ltd, C-4, District Centre, Saket, New Delhi - 110017.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2021

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2021
மேலும் விவரங்கள் அறிய என்ற www.ircon.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படிதது தெரிந்துகொள்ளவும்.

வாட்ஸ் ஆப்' பயனாளிகள் உஷார்

'

'வாட்ஸ் ஆப்' செயலியின் சில மென்பொருள் வாயிலாக பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக 'சைபர்' பாதுகாப்பு அமைப்பான 'செர்ட்இன்' எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

செர்ட்இன் அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

வாட்ஸ் ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலிகளின் சில குறிப்பிட்ட மென்பொருள்கள் வாயிலாக வெகு தொலைவில் இருந்தே பயனாளிகளின் தகவல்களை திருடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

இந்த மென்பொருட்களில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளால் இதற்கு சாத்தியம் அதிகம் உள்ளது தெரியவந்துள்ளது.அதனால் 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்' எனப்படும் செயலிகள் தொகுப்பில் இருந்து மட்டும் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் மற்றும் புதுப்பித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவ பட்டம் பெற்றவர்களுக்கு ஜூன் 18-ல் நுழைவுத் தேர்வு: மே 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


 




வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு ஜூன் 18-ம் தேதிநுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு மே 6-க்குள் விண்ணப்பிக்கலாம்.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவுக்கு வரும் பட்டதாரிகள், இங்கு மருத்துவத் தொழிலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வு (FMGE - Foreign Medical Graduate Examination) என்ற நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் வாரியம் (என்பிஇ) நடத்துகிறது.



அதன்படி, ஏதேனும் ஒரு வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பதிவு எண் பெற விரும்பும் நபர், இந்த தேர்வை எழுதி கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதன்மூலம், விண்ணப்பதாரரின் மருத்துவ திறன் சோதிக்கப்படும்.

இந்நிலையில், 2021-ம் ஆண்டுக்கான எஃப்எம்ஜிஇ தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று (ஏப்.16) தொடங்கியது. அதன்படி, வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த பட்டதாரிகள் https://natboard.edu.in/ என்ற இணையதளம் வழியே வரும்மே 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 18-ம்தேதி தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30-ம் தேதி தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று என்பிஇ அறிவித்துள்ளது.


LIC அலுவலகங்கள் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு


(LIC) அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு

இந்திய அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்.ஐ.சி) ஊழியர்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது.

இனி நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி அலுவலகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு


மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணைய பொதுமேலாளர் பதில்மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. 

தபால்துறை செயலர், தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஆகியோரும் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த சின்னத்துரையின் வழக்கை ஏப்ரல் 28க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது

Breaking Now : 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.

Breaking Now : 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு.


கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. 


* மே 17 அரியர் தேர்வு நடத்தப்படலாம் - தமிழக அரசு

* தேர்வு எழுதாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது - தமிழக அரசு



இதன் மூலம் யுஜிசி உடன் கலந்தாலோசித்து 8 வாரத்துக்குள் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

CBSE - பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி?


நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின்னர் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:-

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். உள் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை எனில் அந்த மாணவர்கள், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் தேர்வு எழுதலாம். இதற்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

அடுத்த 2 வாரம் மிகவும் முக்கியம்: சுகாதார துறை செயலர் எச்சரிக்கை



 'கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளதால், அடுத்த இரண்டு வாரம் மிக முக்கியமான காலம். பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம்; தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்,'' என, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, வளசரவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் அளித்த பேட்டி:கொரோனா தொற்றால், சென்னையில், 18 ஆயிரத்து, 673 பேர் உட்பட, தமிழகம் முழுதும், 49 ஆயிரத்து, 985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில், 81 ஆயிரத்து, 871; 'கோவிட் கேர்' மையங்களில், 28 ஆயிரத்து, 95 படுக்கைகள் என, தமிழகத்தில், மொத்தமாக, 81 ஆயிரத்து, 871 படுக்கைகள் உள்ளன. 

தற்போது, 6,517 வென்டிலேட்டர்களும்; 1 லட்சத்து, 49 ஆயிரத்து, 822, 'ரெம்டெசிவிர்' மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.

தமிழகத்திற்கு, 54 லட்சத்து, 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 40 லட்சத்து, 99 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கொரோனா விதிமீறிலில் ஈடுபட்ட, 2.39 லட்சம் பேரிடம், 5.07 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் வேகம் படிப்படியாக உயரும் என்பதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு, மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

இயல்பாக உள்ளது என்ற எண்ணத்தில், பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். 

பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் சூழலை நிறுவனங்கள் பின்பற்றுவது நல்லது. பொதுமக்கள், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்; பொது இடங்களுக்குச் செல்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மஹாராஷ்டிரா மாநிலம் போன்ற சூழல் தமிழகத்தில் இல்லை. ஊரடங்கு போடுவது குறித்து, அரசு கொள்கை ரீதியாக முடிவெடுக்க வேண்டும். தமிழகம் முழுதும், 3,766 அரசு தடுப்பூசி மையம் உட்பட, 4,795 மையங்கள் உள்ளன. முதல் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று ஏற்படுகிறது; ஆனால், பாதிப்பு குறைவாக உள்ளது.இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை


 

அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு நோய் மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால் அவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் அறிக்கை:பிளஸ் 2 தேர்வு பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி பள்ளிக்கு வருகின்றனர். கொரோனா அதிகம்பரவுவதால் அவர்களின் நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பிளஸ் 2 தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.



மேலும் 50 வயதுக்கு மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு மற்றும் இணை நோய் பாதிப்புடன் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.அவர்களின் நலன் கருதியும் தொடக்க பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள்வரையிலான ஆசிரியர்களுக்கு கொரோனா சூழலை கருத்தில் கொண்டும் கோடை விடுமுறையை உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


SBI RECRUITMENT OF OFFICERS AND CLERKS ON REGULAR/CONTRACT BASIS




SBI RECRUITMENT OF OFFICERS AND CLERKS ON REGULAR/CONTRACT BASIS
Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai. Phone: 022-22820427; Fax: 022-22820411 Recruitment of Officers/Clerks on Regular/Contract Basis Applications are invited from''


 Indian citizens for the following posts: Sr.no. Post Grade Vacancy Advertisement No.

1. Chief Ethics Officer Contractual 1 CRPD/SCO/2021-22/8

2. Advisor (Fraud Risk Management) Contractual

3. Manager (Risk Management) MMGS-III 1

4 Manager (Credit analyst) MMGS-III 2

5. Senior Special Executive (Compliance) Contractual 1

6. Senior Special Executive (Strategy-TMG) Contractual 1 CRPD/SCO/2021-22/1

7. Senior Special Executive -(Global Trade) Contractual 1

8. Senior Executive (Retail & Subsidiaries) Contractual 1

9. Senior Executive (Finance) Contractual 1

10. Senior Executive (Marketing) Contractual

11. Deputy Chief Technology Officer Contractual 1 CRPD/SCO/2021-22/2

12. Manager (History) MMGS-INI 1 CRPD/SCO/2021-22/3

13. Executive (Document Preservation Archives) Contractual 1

14. Pharmacist Clerk 67 CRPD/SCO/2021-22/4


15. Data Analyst MMGS-10 8 CRPD/SCO/2021-22/5

16. Manager (Credit Analyst) MMGS-III 45

17. Manager (Job Family & Succession Planning) MMGS-111 1

18. Manager (Remittances) MMGS-Ili 1

19. Dy. Manager (Marketing - Financial Institution) MMGS-11 1 CRPD/SCO/2021-22/6 20. 20 Dy. Manager (Chartered Accountant) MMGS-11 6

21. Dy, Manager (Anytime Channel) MMGS-11 2

22. Dy. Manager (Strategie Training) MMGS-10 1 CRPD/SCO/2021-22/7

Eligibility criteria (age, qualification, experience, etc.), requisite fees and other details are available, under the respective detailed advertisements mentioned above, on Bank's website https://bank.sbi/web/careers OR https://www.sbi.co.in/web/careers along with a link for online


 submission of application as well as online payment of application fee. Candidates are advised to go through the detailed advertisement so as to ensure their eligibility and other details before applying and remitting fees.

• Date For Filing Online Application & Payment of Fees: 13.04.2021 To 03.05.2021 For any query, please write to us through link "CONTACT US" - "Post Your Query" which is available on Bank's website (URL- https://bank.sbi/careers/psq.htm?action-pquery OR https://sbi.co.in/careers/psq.htm?action-pquery) Place: Mumbai General Manager Date: 13-04-2021 (CRPD)







இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை


இந்துஸ்தான்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை | சம்பளம்: மாதம்ரூ. ரூ.50,000 – ரூ.1,60,000 | கடைசித் தேதி: 15.04.2021

பணி: என்ஜினியர் மொத்த

காலியிடங்கள்: 200

துறைவாரியானகாலியிடங்கள் விவரம்:


1. மெக்கானிக்கல்-120

2. சிவில்-30)

3. எலக்ட்ரிகல்- 25

4. இன்ஸ்ட்ரூமென்டேஷன்- 25

தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பொறியியல்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ. ரூ.50,000 – ரூ.1,60,000

வயது வரம்பு : அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வுசெய்யப்படும் முறை: கணினி வழித்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறன பாளிகள்கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும்முறை:

www.hindustanpetroleum.com என்றஇணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் விவரங்கள் அறிய:

https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/AdvertisementHPCL_2021_Engineering.pdf


என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்லைனில்விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.04.2021 






காய்ச்சலுடன் தேர்தல் பணி தலைமை ஆசிரியை கொரோனாவுக்கு பலி


 

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வந்த 54 வயதான தலைமை ஆசிரியை உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலனின்றி தலைமையில் நேற்று உயிரிழந்தார் தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாக கடுமையான காய்ச்சல் பாதிக்கப்பட்ட தலைமையாசிரியை விடுப்பு அளிக்காமல் தேர்தல் அதிகாரிகள் அவரது தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் .தேர்தல் பணியில் இருந்த போதே அவர் உடல் நிலை மோசமானதால் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





12th Practical Books, Study Materials, Question Papers Download


12th Practical Books, Study Materials, Question Papers Download
12th Internal Exam 2019 - Marks Uploading Instructions with Subject Codes
12th Internal Exam 2019 - Mark Allotment Instructions | DGE
12th Commerce - Internal Exam 2019 - Model Question Paper | Mr. B. Balaji
12th Accountancy - Internal Exam 2019 - Model Question Paper | Mr. B. Balaji
12th Biology - Practical Exam 2019 - Model Question Paper | Mr. S. Vigneshraj
12th Practical Exam 2019 - Instructions & Certificate Issue Details (5.2.2019)
12th Practical Exam 2019 - Renumeration Details for Teachers & Non Teaching Staffs
12th Practical Exam 2019 - Instructions & Date Details (11.1.2019)
Download Here





12th Practical - Marks Allotment GO
12th Practical - Marks Allotment GO - Download Here
(12th Practical - English Medium)

12th Practical Question Papers Download (English Medium)
12th Physics - Practicals Official Model Question Papers with Answer Keys - English Medium Download Here
12th Chemistry - Practicals Official Model Question Papers with Answer Keys - English Medium Download Here
12th Botany - Practicals Model Question Papers with Answer Keys | Mr. M. Balasubramanian - Download Here
12th Bio Botany - Practicals Official Model Question Papers with Answer Keys - English Medium Download Here
12th Bio Zoology - Practicals Official Model Question Papers with Answer Keys - English Medium Download Here
12th Micro Biology - Practicals Official Model Question Papers with Answer Keys - English Medium Download Here
12th Computer Science - Practicals Model Question Paper | Mr. M. Vijayakumar - English Medium Download Here
(12th Practical - Tamil Medium)

12th Practical Question Papers Download (Tamil Medium)
12th Physics - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Chemistry - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Bio Botany - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Bio Zoology - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Micro Biology - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Computer Science - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Practical Study Materials Download (English Medium)
12th Computer Science - Practical Study Material | Mr. S. Bagavath Singh - English Medium Download Here
12th Computer Science - Practical Study Material | Mr. S. Bagavath Singh - Tamil Medium Download Here
12th Physics - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here
12th Practical Study Materials Download (Tamil Medium)
12th Physics - Practicals Official Model Question Papers with Answer Keys - Tamil Medium Download Here






Revised Higher Secondary Public Time Table 2020-2021

IFHRMS - இடைநிலை ஆசிரியர்களின் Level Grade pay UPDATE செய்யப்பட்டுள்ளது.



இன்று IFHRMS இல் இடைநிலை ஆசிரியர்களின் Level 10 Grade pay (2800)இல் ஆசிரியர்களின் ஊதிய விகிதம் ₹65500/- slab(40) லிருந்து அடுத்து slab (41)க்கு UPDATE செய்யப்பட்டுள்ளது.







SBI-நிலையான வைப்புத்தொகை மீது -கடன் பெறுவது எப்படி ?



ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உடனடிபணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகநிலையான வைப்புத் தொகையின் மீது கடன் வழங்குகிறது.வட்டி விகிதங்கள் அதிகம்கிடைக்கும் என்பதால் நாம் பொதுவாக நம்பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால்சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம்


தேவைப்படுகிறது. இத்தகைய அவசர காலங்களில்நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகியகால கடனை பெற முடியும்.

நிலையானவைப்புத் தொகையை உடைக்க வேண்டியஅவசியம் இல்லை. எஸ்பிஐ (SBI)வங்கியில்அவ்வாறு கடன் பெற, வங்கிகிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தைநிரப்பித் தர வேண்டும். குறைந்தபட்சமாக


ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெறமுடியும். அதே சமயம் இந்ததொகையானது நம்முடைய வைப்புத்தொகையில் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நிலையானவைப்புத்தொகை மீது எப்படி கடன்பெறுவது?

எஸ்பிஐ(SBI) வங்கியில்நிலையான வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ளதனிநபர் அல்லது கூட்டு வைப்புத்தொகையாளர்கள்கடன் பெற முடியும்

ஆன்லைன்வங்கி கணக்கில் டிடிஆர் அல்லது எஸ்டிடிஆர்முறையில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்களும்ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தலாம்.ஓவர் டிராஃப்ட் கணக்கைவைப்புத்தொகையாளர்கள் மின்னணு முறையிலேயே பயன்படுத்தலாம்.

விண்ணப்பம்வங்கியால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, கூட்டு வங்கிகணக்கு வைத்திருப்பவர்கள் இருவருமே கடன் பெறும் விண்ணப்பத்தில்கையெழுத்திட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஒருவர்கையெழுத்திட


வில்லை என்றால் உங்களுடையைவங்கி விண்ணப்பத்தை நிராகரிக்கும். எஸ்பிஐ(SBI) வங்கியில் வரி சேமிப்புக்கான நிலையானவைப்பு கணக்கு வைத்திருந்தால் கடன்பெற விண்ணப்பிக்க முடியாது.

இந்த செய்தியையும் படிங்க...

முக்கியசெய்தி: அனைத்து வங்கிகளின் RTGS சேவை14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ்வங்கி அறிவிப்பு..!

கடனை திருப்பிச் செலுத்தும் காலம்

கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்பது பெற்றகடன் தொகைக்கான வட்டி மற்றும் அசலைதிருப்பி செலுத்தும் காலம் ஆகும். கடன்தவணையை செலுத்த காலதாமதம் ஏற்படும்போதுஅதை தவிர்ப்பதற்காக


கடன் பெறுவோர் ஏற்றுக்கொள்ளக்கூடியதிருப்பி செலுத்தும் காலமுறை ஒன்றை வங்கிபரிந்துரைக்கிறது.

 கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையைதீர ஆராய்ந்து இந்த காலமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எஸ்.டி.டி.ஆர்முறையின் கீழ் கடனை பெற்றவர்கள்கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டு காலம் . அதுவேஇ-எஸ்.டி.டி. முறையின் கீழ்கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த3 ஆண்டு காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

நிலையானவைப்புத் தொகையின் மீது கடன் பெறுவதில்உள்ள பலன்கள்

கடனுக்கானவட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கிவைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விடசுமார் 1 சதவீதம் மட்டுமே கூடுதலாகஇருக்கும். அதேபோல நீங்கள் திருப்பிசெலுத்தும்போது செலுத்த வேண்டிய தொகைகுறையும் பட்சத்தில் அதற்கான வட்டி மட்டும்வசூலிக்கப்படும். நிலையான வைப்பு தொகைமீது கடன்பெறும் வசதி மட்டுமல்லாமல் ஓவர்டிராஃப்ட் வசதியையும் எஸ்பிஐ(SBI) வழங்குகிறது. கடனை முன்கூட்டியே திருப்பிசெலுத்தினாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.

எஸ்பிஐ(SBI) எஃப்.டி. மீது ஓவர்டிராஃப்ட்கணக்கு தொடங்குவது எப்படி?

ஓவர்டிராஃப்ட்அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஓவர்டிராஃப்ட் தொகைபெற முடியும். .அருகிலுள்ள எஸ்பிஐ(SBI) கிளையில் ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம் அல்லது இணையவழியிலும் தொடங்கலாம்.

மின்னணுமுறையில் எஸ்பிஐ நிலையான வைப்புதொகை மீது ஓவர்டிராஃப்ட் தொடங்கும்முறை

எஸ்பிஐ(SBI) நெட் பேங்கிங் கணக்கில் பயனர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்து உள்நுழைய வேண்டும். அதில் மெனு பிரிவின்உள்ளே e Fixed deposit ஐ கிளிக் செய்யவும். இப்போது overdraft against Fixed deposit ஐ கிளிக் செய்யவும். பிறகுஉங்கள் டெபாசிட் கணக்கு திரையில் வரும்.அதில் ஓவர் டிராப்டுக்குவிண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒருவைப்புத்தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.

அதன் பிறகு 'Proceed' என்பதைக் கிளிக் செய்து, ஓவர்டிராஃப்ட் தொகை, ஓவர் டிராப்ட்டில்பொருந்தக்கூடிய வட்டி விகிதம் மற்றும்காலாவதி தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்டமொபைல் எண்ணில் கடவுச்சொல்லைப் பெறுவீர்கள், தேவையான இடத்தில் அதை Enter செய்து அதை அங்கீகரிக்கவும். தற்போது உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.


WhatsApp மூலம் மாணவர்களுக்கு திறனறி தேர்வு???



தமிழகத்தில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலை யில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்திறனை அறிய வாட்ஸ் அப் மூலம் சிறப்பு தேர்வு நடத்த திட்டமி டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது . தமிழகத்தில் கொரோனா 2 ம் கட்ட அலை பரவல் மீண்டும் அதிக ரித்துள்ள நிலையில் இந்த ஆண்டும் பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளில் கல்வித்திறன் குறையுமோ என கவலையடைந்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவல் அச்சமும் நீடிக்கிறது. ஒரு சில பெற்றோர் இணையதளம் மூலம் தேர்வுகளை நடத்த வாய்ப்பு இருந்தால் அதுகுறித்து பரிசீலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கின்றனர். 


நடப்பு கல்வியாண்டில் 9,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மிக குறைந்த நாட்களே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்டத்தை இணையதளம் மூலம் கற்பதில் பல மாணவர்களுக்கு சிரமங்கள் உள்ளன. இதனிடையே பொதுத்தேர்வும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறனறி தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் இந்த ஆண்டு கற்ற கல்வியையும் அவர்கள் புரிந்து கொண்டதையும் மதிப்பிட முடியும் என கருதுகின்றனர். மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் கேள்விகளை அனுப்பி பதில்கள் பெற்று அவர்களது திறன் அறியப்படும் எனத்தெரிகிறது. இதனிடையே மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திறனறித் தேர்வுக்காக பயிற்சி வினாக்கள் அடங்கிய புத்தகங்களை தயாரித்து பள்ளிகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாகவும் கூறப்ப இத்தகைய தேர்வு நடத்த முடிவு செய்திருந்தால் ஆசிரியர்கள் , மாணவர் , பெற்றோருக்கு உரிய அவகாசம் கொடுக்கவேண்டும். குறைந்தது ஒன் நரை மாதங்கள் அவகாசம் அளித்து இதை நடத்தினால் மாணவர்கள் மன அழுத்தமின்றி இத்தேர்வை தனியாக எழுத முடியும் என சில பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கல்வித்துறை வட்டாரத் தில் கேட்டபோது இது குறித்த அதிகாரப்பூர்வ தெளிவான உத்தரவு கல்வித்துறையில் இருந்து இன்னும் வரவில்லை . வந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.






வரும் கல்வி ஆண்டுக்கான அரசுப்பள்ளி தரம் உயர்வு பட்டியல் அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.


பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :

ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வியின் ஆண்டு வரைவுத் திட்டத்துக்காக ( 2021-22 ) , தரம் உயர்த்த வேண்டிய அரசுப் பள்ளிகளின் பட்டியல் தேவைப்படுகிறது. எனவே , தர உயர்வுக்குத் தகுதியான நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் பட்டியலைத் தயாரித்து , இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் , தேர்வான பள்ளிகளில் , நிர்ணயிக்கப்பட்ட நிலப் பரப்பு உள்ளிட்ட தகுதிகளைப் பரிசீலித்து , கருத்துரு அடங்கிய அறிக்கையையும் காலதாமதமின்றி அனுப்பிவைக்க வேண்டும் . இதில் , எவ்விதப் புகார்களுக்கும் இடம் அளிக்கக் கூடாது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு.



WANTED LECTURERS For BIOLOGY, PHILOSOPHY, M.F.A., M.A.(Music), P.E.T., LIBRARIAN As per TNTEU and NCTE Norms. Apply Immediately: AL AMIR COLLEGE OF EDUCATION T.VAIRAVANPATTI, THIRUKOSTIUR POST THIRUPPATHUR TALUK Sivagangai District. PIN : 630910 Mobile: 9489904468 E.Mail: alamirbededu12@gmail.com LIK Fenner ) | ஜே.கே.பென்னர் ( இந்தியா ) லிமிடெட் | மிஷின் ஆப்பரேட்டர் தேவை தகுதிகள் : 10 ) +2 | ITI / DIPLOMA ( PASSI FAIL ) முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வயது : 18 முதல் 35 வரை ( ஆண்கள் மட்டும் ) மாத வருமானம் PFI ESI | BONUS உள்பட முதல் 3 மாதங்களுக்கு ரூ .10,561 Per Month 3 மாதங்களுக்கு பின்னர் ரூ .11,078 Per Month 2018-2021 க்குள் டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ .12.0001 இதர வசதிகள் - 1.சலுகை விலையில் கேன்டின் வசதி , தாராளமான டவுன் பஸ் போக்குவரத்து வசதி 3.பயிற்சி முடிந்த பின்பு திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரந்தர பணி கிடைக்க வாய்ப்பு . எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நாள் : 12.04.2021 முதல் 17.04.2021 நேரம் : காலை 9 மணி - 11 மணி வரை இடம் : ஜே.கே.பென்னர் ( இந்தியா ) லிமிடெட் 3.மேலக்கால் ரோடு.கோச்சடை , மதுரை , நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் பயோடேட்டா , கல்விச்சான்றிதழ் அசல் மற்றும் நகல் , 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ , ஆதார் அட்டை , ரேசன்கார்டு , வங்கி பாஸ்புக் முதலியவற்றை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும் . | Mobile : 81110 63332 , 8220052313
( 9 am:5pm ) மனிதவளத்துறை ,
கே.கே பென்னர் இந்தியா லிமிடெட்











ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் - உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு


ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் - உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு.

அரசாணை எண் 11 நாள் 04.01.1989- ன் படி ஊட்டு வகை பணியிடத்தை உறுதி செய்து ஆய்வக உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கலாம் - உயர் நீதி மன்றம் மதுரை கிளை தீர்ப்பு. Judgement Copy pdf - Download here...

மே 3, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனை.


தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்தாண்டு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் 9-ம் வகுப்புக்கு ஆண்டு இறுதித்தேர்வும், 10 மற்றும் 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் திட்டமிட்டபடி மே-3ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது, கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வை திட்டமிட்டப்படி நடத்துவதா? அல்லது தேர்வை ஒத்திவைக்கலாமா?, தேர்வை நடத்துவது என்றால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது? முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ய வேண்டியவை எவை? என்பது குறித்து கல்வித்துறை சார்பில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் முடிவு தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளன. மேலும் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெறுமா அல்லது பொதுத்தேர்வில் வேறு ஏதும் மாற்றங்கள் கொண்டுவரலாமா என இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைனில்' துறை தேர்வுகள்

'

 டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பு:துறைத்தேர்வு நடைமுறையை சீரமைக்க, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜூன் மாதம் நடக்க உள்ள, துறைத்தேர்வுகள், 'ஆன்லைன்' வழியே நடத்தப்பட உள்ளன.



பல்வேறு துறைகளிடம் இருந்து பெறப்பட்ட, கருத்துருக்கள் அடிப்படையில், திருத்தி அமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கொள்குறி வகை தேர்வுகளுக்கான, துறைத் தேர்வுகள், ஆன்லைனில் நடத்தப்படும். விரிந்துரைக்கும் வகையான தேர்வுகள், தற்போதுள்ள நடைமுறையின்படி, எழுத்து தேர்வு வகையிலேயே தொடரும்.ஆன்லைன் தேர்வுகள், ஜூன், 22 முதல், 26 வரை நடக்கும். விரிந்துரைக்கும் வகை எழுத்து தேர்வுகள், ஜூன், 27 முதல் நடக்கும். துறைத் தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள், தேர்வாணைய இணையதளத்தை தொடர்ந்து கண்காணிக்கவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுஉள்ளது.


கொரோனா பரவலால் 2.4 கோடி குழந்தைகள் படிப்பை கைவிடும் அபாயம்




புதுடில்லி: 'கொரோனா வைரஸ் நெருக்கடியால், உலகம் முழுவதும், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடக்கூடும்' என்ற தகவல், ஆய்வில் தெரியவந்துள்ளது.



உலகில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, அனைத்து நாடுகளும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்நிலையில், இந்த கொரோனா நெருக்கடியால், 2.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், பள்ளி படிப்பை கைவிடக்கூடும் என்ற அதிர்ச்சிக்குரிய தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவிலும், ஏராளமான ஏழைக் குழந்தைகள், பள்ளிக்கு மீண்டும் செல்வதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.'ஆன்லைன்'கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால், அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தமுடியாமல், பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக வகுப்புகள் நடப்பதால், அதற்கு தேவையான உபகரணங்கள் இன்றி, ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள், பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால், நிதிச் சுமையில் தள்ளாடும் ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு, பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதாக, சமூக நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.


தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு.



தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.பள்ளிக் கல்வித் துறை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு.




ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.4.2021


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.4.2021

நாளை (13.4.21) & நாளை மறு நாள் (14.4.2021) அரசு விடுமுறை 〽️G.O 554- 2021 ஆம் ஆண்டின் பொது விடுமுறைக்கான அரசாணை.


 தமிழகத்தில் 2021ம் ஆண்டு 21 நாட்கள் பொது விடுமுறை அரசு அறிவிப்பு வெளியீடு.-GOVT HOLIDAYS LIST - 2021-PDF





12 வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா..? ஒத்திவைப்பா..? நாளை முதல்வர் முடிவு எடுக்க தேர்தல் ஆணையம் அனுமதி



தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் முந்தைய நாளின் கொரோனா பாதிப்பை விட ஆயிரம் பேர் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஆறாயிரம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மீண்டும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் தமிழகத்தின் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது குறித்தும் ஆலோசனை நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது குறித்து நாளைய முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களின் ஆலோசனை கேட்ட பின்னர் முதல்வர் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து நாளைய முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டம் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே கூட்டணி கட்சியின் தலைவரான டாக்டர் ராமதாஸ் அவர்கள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 ,25 கிலோ அரிசி தெலுங்கானா அரசு அறிவிப்பு


 தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2000 ,25 கிலோ அரிசி தெலுங்கானா அரசு அறிவிப்பு


TNPSC எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு ஏப்ரல், 17, 18 தேதிகளில் முற்பகல் மற்றும் பிற்பகலிலும் 19-ஆம் தேதி முற்பகலில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக் கூட இணையதளமான https://www.tnpsc.gov.in/ ல் பதிவற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவேற்றம் மூலம் மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் தேர்வுக்கு வருவோருக்கான முக்கியத் தகவல்கள்..
1. தேர்வர்கள் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
2. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பின் எந்த தேர்வரும் தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
3.தேர்வுக் கூடம் அமைந்திருக்கும் இடத்தை அறிய நுழைவுச் சீட்டில் விரைவுத்தகவல் குறியீடு அச்சிடப்பட்டுள்ளது.
4. தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசி கொண்டு வர அனுமதியில்லை என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் இரா. சுதன் தெரிவித்துள்ளார்.

Recent Posts

Total Pageviews

Blog Archive