1 முதல் 9ம் வகுப்பு வரை வீட்டில் திறனறிதல் தேர்வு


ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வீட்டில் வைத்து தேர்வு நடத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நாடு முழுதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. தமிழகத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,மீண்டும் அமலுக்கு வந்துள்ளன.இதன் ஒரு கட்டமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கவும், தேர்வு எழுதவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு எழுத வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

மற்ற மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, 'ஆல் பாஸ்' என்ற, அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒவ்வொரு பள்ளி யிலும், புதிதாக பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த பயிற்சி புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்த கங்களில் உள்ள கேள்விகளுக்கு, மாணவர்கள் வீட்டில் இருந்தே விடை எழுத வேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள்அறிவுறுத்தியுள்ளனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive