அரசு கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு; 100% மாணவர் சேர்க்கையையும் மத்திய அரசே நடத்துவதா?


நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமார் 4 ஆயிரம்இடங்களும் உள்ளன. இந்த இடங்கள் நீட் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 20 ஆயிரம் இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரம் இடங்களில் 1,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகில இந்தியஒதுக்கீட்டுக்கான 50 சதவீதம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது.

மீதமுள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான 50 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்துகின்றன. 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்த ஆலோசனை கூட்டம் காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மாநிலசுகாதாரத் துறைச் செயலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுபற்றி தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழகத்தில் உள்ள அரசுமருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மேற்படிப்புகளுக்கான 100சதவீத இடங்களுக்கும் மாணவர்சேர்க்கைக்கான கலந்தாய்வை மாநில அரசுதான் நடத்த வேண்டும்என்பதே எங்கள் முடிவு. ஆனாலும், 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

தற்போது, மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறையே கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமையை பறிக்கும் செயலாகும். இப்போதுள்ள நடைமுறையே தொடர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன' என்றனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive