ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற பேராசிரியர்கள் மீதான, 'சஸ்பெண்ட்' மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது. வாபஸ் இது குறித்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ணசந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உதவி, இணை பேராசிரியர்கள், 2019 ஜன., 22ல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். இதில் கைது செய்யப்பட்டவர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; பின், அந்த உத்தரவு, 'வாபஸ்' பெறப்பட்டது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு ஏப்.12 முதல் விண்ணப்பிக்கலாம் : தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
அவர்கள் மீது, நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் மீதான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன.ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் மீது தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவை அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அந்த பேராசிரியர்களின் தற்காலிக பணி நீக்க காலங்கள் முறைப்படுத்தப்படுகின்றன. ஆதரவு இது குறித்த விபரங்களை, சம்பந்தப்பட்டோரின் பணி பதிவேட்டில் மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் உபரி ஆசிரியர்களுக்கு பணி: ஐகோர்ட் கிளை உத்தரவு.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், உயர்கல்வித் துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, ஆளுங்கட்சிக்கு ஆதரவானதாக கருதப்படுகிறது.