சட்டமன்ற தேர்தலுக்காக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர்களுக்கு வகுப்புகளும் நடைபெறவில்லை.
ஆனால் பொதுத்தேர்வு இருப்பதால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடைபெறும், தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது.
அதன்படி மே மாதம் 3ஆம் தேதி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதனிடையே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் வைரஸ் பாதிப்பு இருந்தாலும் கூட நாளை முதல் +2 வகுப்புகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதனால் தமிழகம் முழுவதும் +2 மாணவர்களுக்கான வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவினால் தேர்தல் ஆணையம் வகுப்பறைகளை பயன்படுத்திய நிலையில், தற்போது கிருமி நாசினி தெளித்து சுத்தும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தேர்தல் காரணமாக ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கேள இருப்பதால் நேரடி வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
அதனால் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்கள் தொடங்கி ஆசிரியர்கள் வரை பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் எடுத்துள்ளன.