சி.ஏ., படிப்புக்கு முதுநிலை பட்டம் அந்தஸ்து



சி.ஏ., போன்ற கணக்கு தணிக்கை படிப்பு முடித்தவர்கள், இனி நேரடியாக, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கல்லுாரிகளில் இளநிலை படிப்பும், பின், முதுநிலை படிப்பும் முடித்தால் மட்டுமே, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும்.இந்நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், சி.ஏ., உள்ளிட்ட கணக்கு தணிக்கை படிப்பை முடித்தவர்களும், முதுநிலை படிப்பை முடித்தவர்கள் போல், ஆராய்ச்சி படிப்புக்கும், போட்டி தேர்வுகளும் எழுதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு வழிவகுக்கும் வகையில், பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை:ஐ.சி.ஏ.இ.,யான கணக்கு தணிக்கையாளர் அமைப்பு; ஐ.சி.எஸ்.ஐ., என்ற நிறுவன செயலர்கள் அமைப்பு; ஐ.சி.ஏ.ஐ., என்ற விலை கணக்கீட்டாளர் அமைப்பு ஆகியவற்றில் இருந்து, கோரிக்கை மனுக்கள் வந்துள்ளன.

அதன்படி, மேற்கண்ட அமைப்புகளின் அங்கீகாரம் பெற்று, சி.ஏ., - சி.எஸ்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய படிப்புகள், இனி முதுநிலை பட்டப் படிப்புக்கு நிகராக கருதப்படும்.இதற்கான ஒப்புதல், யு.ஜி.சி.,யின் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive