இம்மாதம் நடைபெறுவதாக இருந்த தட்டச்சு, சுருக்கெழுத்து தொழில்நுட்பத்தேர்வுகள் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்தல் 2021 - பணிக்கான மதிப்பூதியம் அனுமதித்து அரசாணை வெளியீடு. ( மதிப்பூதிய விவரம் )
தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தொழில்நுட்பத் தேர்வுகள் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந் நிலையில், 2021-ம் ஆண்டுக்கான தொழில் நுட்பத் தேர்வுகள் ஏப்.10-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறுவதாக தொழில்நுட்பக்கல்வித் துறை அண்மையில் அறிவித்தது.
சட்டமன்றத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை ஊதியம் நிர்ணயம் - தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல்
இந்நிலையில், இத் தேர்வுகள், கரோனா தொற்று அதிகரிப்புகாரணமாக தள்ளிவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.