கார் வாங்க அதிரடி ஆஃபரில் லோன் தரும் எஸ்பிஐ வங்கி! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, April 7, 2021

கார் வாங்க அதிரடி ஆஃபரில் லோன் தரும் எஸ்பிஐ வங்கி!


கடன் வழங்குவதில் பல்வேறு சலுகைகளை தரும் எஸ்பிஐ வங்கி தற்போது கார் லோன் தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 7.5 சதவீத வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த கடனுக்காக வாடிக்கையாளர்களிம் இருந்து எந்த ஒரு செயலாக்கக் கட்டணத்தை வங்கி வசூலிப்பதில்லை.

இந்த தகவலை எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் +91 7208933141 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ பிரதிநிதி அழைப்பார் என்றும் அவரிடம் விபரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

அதே போல் இந்த கார் லோன் குறித்து தெரிந்து கொள்ள 7208933141 என்ற எண்ணுக்கு 'எஸ்எம்எஸ் கார்' என்று எஸ்எம்எஸூம் அனுப்பலாம். மேலும் எஸ்பிஐ தனிப்பட்ட கடன்கள், தங்கக் கடன்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் வீட்டுக்கடனுக்கு எஸ்பிஐ வங்கி பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இப்படி கடன் வழங்குவதில் பலவிதமான சலுகைகளை வழங்கி வரும் எஸ்பிஐ வங்கி தற்போது கார் லோனில் கவனம் செலுத்துகிறது.

ஆனால் கடந்த சில மாதங்களில் கார்களின் விலை மிக அதிகமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad