கொரோனா தொற்று பாதிப்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் தேர்வுகள்:சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாநில முதல்வர் 10 மற்றும் 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்தார். சத்தீஸ்கர் கல்வி வாரியம் முன்னதாக 10ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் மாதத்திலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே மாதத்திலும் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டது. தற்போது கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருவதால் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் அவர்கள், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலை தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உயர்கல்வித்துறை அதிகாரிகள் இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தேர்வுகள் திட்டமிட்டபடியே அதே தேதிகளில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்தும் கல்வி வாரியம் ஆலோசித்து வருகிறது. அப்படி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டால் மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Top Ad
Friday, April 23, 2021
Home
Unlabelled
ஆன்லைனில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் – சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு!!