ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) உடனடிபணத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகநிலையான வைப்புத் தொகையின் மீது கடன் வழங்குகிறது.வட்டி விகிதங்கள் அதிகம்கிடைக்கும் என்பதால் நாம் பொதுவாக நம்பணத்தை வைப்புத் தொகையில் முதலீடு செய்கின்றோம். ஆனால்சில நேரங்களில் நம்முடைய அவசரத் தேவைக்கு பணம்
தேவைப்படுகிறது. இத்தகைய அவசர காலங்களில்நீங்கள் உங்களுடைய வைப்புத் தொகை மீது குறுகியகால கடனை பெற முடியும்.
நிலையானவைப்புத் தொகையை உடைக்க வேண்டியஅவசியம் இல்லை. எஸ்பிஐ (SBI)வங்கியில்அவ்வாறு கடன் பெற, வங்கிகிளைக்கு சென்று தேவையான விண்ணப்பத்தைநிரப்பித் தர வேண்டும். குறைந்தபட்சமாக
ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை கடன் பெறமுடியும். அதே சமயம் இந்ததொகையானது நம்முடைய வைப்புத்தொகையில் 90 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிலையானவைப்புத்தொகை மீது எப்படி கடன்பெறுவது?
எஸ்பிஐ(SBI) வங்கியில்நிலையான வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ளதனிநபர் அல்லது கூட்டு வைப்புத்தொகையாளர்கள்கடன் பெற முடியும்
ஆன்லைன்வங்கி கணக்கில் டிடிஆர் அல்லது எஸ்டிடிஆர்முறையில் கணக்கு வைத்திருக்கும் தனிநபர்களும்ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்தலாம்.ஓவர் டிராஃப்ட் கணக்கைவைப்புத்தொகையாளர்கள் மின்னணு முறையிலேயே பயன்படுத்தலாம்.
விண்ணப்பம்வங்கியால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, கூட்டு வங்கிகணக்கு வைத்திருப்பவர்கள் இருவருமே கடன் பெறும் விண்ணப்பத்தில்கையெழுத்திட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் ஒருவர்கையெழுத்திட
வில்லை என்றால் உங்களுடையைவங்கி விண்ணப்பத்தை நிராகரிக்கும். எஸ்பிஐ(SBI) வங்கியில் வரி சேமிப்புக்கான நிலையானவைப்பு கணக்கு வைத்திருந்தால் கடன்பெற விண்ணப்பிக்க முடியாது.
இந்த செய்தியையும் படிங்க...
முக்கியசெய்தி: அனைத்து வங்கிகளின் RTGS சேவை14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ்வங்கி அறிவிப்பு..!
கடனை திருப்பிச் செலுத்தும் காலம்
கடனை திருப்பிச் செலுத்தும் காலம் என்பது பெற்றகடன் தொகைக்கான வட்டி மற்றும் அசலைதிருப்பி செலுத்தும் காலம் ஆகும். கடன்தவணையை செலுத்த காலதாமதம் ஏற்படும்போதுஅதை தவிர்ப்பதற்காக
கடன் பெறுவோர் ஏற்றுக்கொள்ளக்கூடியதிருப்பி செலுத்தும் காலமுறை ஒன்றை வங்கிபரிந்துரைக்கிறது.
கடன் பெறுபவரின் நம்பகத்தன்மையைதீர ஆராய்ந்து இந்த காலமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. எஸ்.டி.டி.ஆர்முறையின் கீழ் கடனை பெற்றவர்கள்கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டு காலம் . அதுவேஇ-எஸ்.டி.டி. முறையின் கீழ்கடனை பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்த3 ஆண்டு காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
நிலையானவைப்புத் தொகையின் மீது கடன் பெறுவதில்உள்ள பலன்கள்
கடனுக்கானவட்டி விகிதங்கள், பொதுவாக உங்கள் வங்கிவைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை விடசுமார் 1 சதவீதம் மட்டுமே கூடுதலாகஇருக்கும். அதேபோல நீங்கள் திருப்பிசெலுத்தும்போது செலுத்த வேண்டிய தொகைகுறையும் பட்சத்தில் அதற்கான வட்டி மட்டும்வசூலிக்கப்படும். நிலையான வைப்பு தொகைமீது கடன்பெறும் வசதி மட்டுமல்லாமல் ஓவர்டிராஃப்ட் வசதியையும் எஸ்பிஐ(SBI) வழங்குகிறது. கடனை முன்கூட்டியே திருப்பிசெலுத்தினாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
எஸ்பிஐ(SBI) எஃப்.டி. மீது ஓவர்டிராஃப்ட்கணக்கு தொடங்குவது எப்படி?
ஓவர்டிராஃப்ட்அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஓவர்டிராஃப்ட் தொகைபெற முடியும். .அருகிலுள்ள எஸ்பிஐ(SBI) கிளையில் ஓவர்டிராஃப்ட் அக்கவுண்ட்டை தொடங்கலாம் அல்லது இணையவழியிலும் தொடங்கலாம்.
மின்னணுமுறையில் எஸ்பிஐ நிலையான வைப்புதொகை மீது ஓவர்டிராஃப்ட் தொடங்கும்முறை
எஸ்பிஐ(SBI) நெட் பேங்கிங் கணக்கில் பயனர்களின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்து உள்நுழைய வேண்டும். அதில் மெனு பிரிவின்உள்ளே e Fixed deposit ஐ கிளிக் செய்யவும். இப்போது overdraft against Fixed deposit ஐ கிளிக் செய்யவும். பிறகுஉங்கள் டெபாசிட் கணக்கு திரையில் வரும்.அதில் ஓவர் டிராப்டுக்குவிண்ணப்பிக்க நீங்கள் விரும்பும் ஒருவைப்புத்தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
அதன் பிறகு 'Proceed' என்பதைக் கிளிக் செய்து, ஓவர்டிராஃப்ட் தொகை, ஓவர் டிராப்ட்டில்பொருந்தக்கூடிய வட்டி விகிதம் மற்றும்காலாவதி தேதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவும். தொடர்ந்து உங்கள் பதிவு செய்யப்பட்டமொபைல் எண்ணில் கடவுச்சொல்லைப் பெறுவீர்கள், தேவையான இடத்தில் அதை Enter செய்து அதை அங்கீகரிக்கவும். தற்போது உங்கள் கணக்கு தொடங்கப்பட்டுவிடும்.