பஞ்சாப் மாநில பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இனி மாற்றுச் சான்றிதழ் அவசியம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பெற்றோர்களின் சுய அறிவிப்பு மட்டும் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டய கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி – ICAI வாரிய உறுப்பினர் விளக்கம்!!
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் போன்றவை அவசியமாகும். ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர் வேறொரு பள்ளியில் சேருவதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தேவைப்படும். பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படாது. தற்போது பஞ்சாப் மாநில அரசு மாணவர் சேர்க்கைக்கு மாற்றுச் சான்றிதழ் நிபந்தனையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தங்கள் குழந்தைகளின் பள்ளியை மாற்ற விரும்பும் பெற்றோர்களுக்கு இந்த மாற்றுச் சான்றிதழ் ஒரு பிரச்சனையாக இருக்க கூடாது என்ற நோக்கில் தன இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
வங்கிகள் வேலை நேரங்களில் மாற்றம் – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இது தொடர்பாக மார்ச் 19ம் தேதி அன்று பஞ்சாபின் பொது அறிவுறுத்தல் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை ரத்து செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாணவரின் மற்ற விவரங்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்றும், முந்தைய வகுப்பில் மாணவர் தேர்ச்சி பெற்றது உண்மை என்றும் மாணவரின் பெற்றோர்கள் சுய அறிவிப்பு ஒன்றை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.