பிளஸ்2 தேர்வுகள் ரத்தாகுமா: மனுவை வரும் 31ல் விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்


'கோவிட் பரவலால் பிளஸ்2 பொதுத் தேர்வுகளை நடத்தாமல் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வரும் 31-ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் மம்தா சர்மா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்19 பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பிளஸ்2 தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லாதது. ஆன்லைனில் அல்லது நேரடியாகத் தேர்வு மையத்துக்கு வந்து தேர்வு எழுத மாணவர்களை எழுதச் செய்வதும் கடினமானது. இந்த தேர்வுகளை நடத்தாமல் தள்ளிப் போடுவதும்; முடிவு ஏதும் எடுக்காமல் இருப்பதும் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும்பட்சத்தில் அது அவர்களது கல்வியை பாதிக்கும்.

10ம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, பிளஸ்2 தேர்வுகள் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது மாணவர்களுக்கு மன உளைச்சலை அதிகரிக்கும். அதனால், பிளஸ்2 வகுப்புத் தேர்வுகளை ரத்துசெய்ய மத்திய அரசுக்கும், சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.


இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வர் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அமர்வு, 'இந்த வழக்கை வரும் 31-ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறோம். பிளஸ்2 தேர்வுகள் குறித்து ஜூன் 1-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ ஏதேனும் முடிவுகள் எடுக்கலாம். அதனால் திங்கள் கிழமைக்குள் ஏதும் நடக்காது' எனத் தெரிவித்துள்ளனர்.








0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive