டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரை மீட்டெடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருந்து பாதுகாப்பு துறையின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில், தண்ணீரில் கலந்து குடிக்கும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. 2டிஜி புதிய கொரோனா தடுப்பு மருந்தை மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அறிமுகம் செய்தது. இதனை அடுத்து, இந்த புதிய தடுப்பு மருந்து, நேற்று சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக பத்தாயிரம் பாக்கெட்டுகள் நேற்று சந்தையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஆர்டிஓ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப் இணைந்து தயாரித்துள்ள 2 DG கொரோனா மருந்தின் விலை ரூ.990 என அறிவிக்கப்பட்டுள்ளது.