அஞ்சல்துறையில் 4368 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


அஞ்சல்துறையில் காலியாகவுள்ள 4368 காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிக்க மே 29 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல்துறையில் காலியாகவுள்ள 4,368 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் 2482 ஜி.டி.எஸ் காலிப் பணியிடங்களும், பீகாரில் 1940 காலிப் பணியிடங்களும் உள்ளன. தகுதியான நபர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. www.appost.in. என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு மாநிலங்களிலும் கொரோனா பரவல் தொற்று அதிகரித்திருக்கும் நிலையில், இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணபிப்பதற்கான கால அவகாசத்தை இந்திய அஞ்சல் துறை நீடித்துள்ளது. 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் வரும் மே 29 ஆம் தேதி வரை இந்திய அஞ்சல்துறை இணையதளத்துக்கு சென்று காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலை வாய்ப்பு; இந்திய அஞ்சல் துறை
பணியிடம் ; மகாராஷ்டிரா, பீகார்
காலிப் பணியிடங்கள்; 4,368 GDS Posts
விண்ணப்பிக்க கடைசி தேதி ; மே 29,2021
கல்வித் தகுதி ; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை:

* தகுதியான நபர்கள் www.appost.in என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்

• முகப்பு பக்கத்தில் இருக்கும் Apply online link -ஐ கிளிக் செய்ய வேண்டும்

• பதிவு எண்ணையும், எந்த வட்டத்துக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்

• முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்துக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்

• மீண்டும் ஒருமுறை விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்பிக்கவும்

• விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான உறுதி செய்யப்பட்ட பக்கத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

விண்ணப்ப கட்டணம்:

UR/OBC/EWS வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100 விண்ணப்பக்கட்டணம். பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி, பெண்கள் மற்றும் PWD வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பக்கட்டணம் முழுவதும் நெட்பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட்கார்டு வழியாக ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.

வயது வரம்பு:

10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், 18 வயது முதல் 40 வயதுள்ளவர்கள் விண்ணபிக்கலாம். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் உட்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் இல்லை

ஊதிய விபரம்:

மேற்கூறிய காலிப் பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் ரூ. 14,500 வரை வழங்கப்படும். பணியிடத்தின் அடிப்படையில் ஊதியம் மாறுபடும்.





Related Posts:

0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

3105930

Code