மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி வரும் ஜூலை மாதம் கிடயிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது அவை தள்ளிபோவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
7 வது ஊதியக்குழு:நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR தொகை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2020 ஜனவரி 1, 2020 ஜூலை 1 மற்றும் 2021 ஜனவரி 1 ஆகிய மூன்று தவணைகளுக்கான படிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடைசியாக DA 17% ஆக இருந்தது. ஒவ்வொரு கால தவணைக்கும் DA தொகை குறிப்பிட்ட சதவீதம் அதிகரிக்கப்படுவது வழக்கம். அகவிலைப்படி உயர்வை பொருத்து பணியாளர்களின் ஊதியம் மற்றும் மற்ற சலுகைகளும் மாறுபடும். நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்வு வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இருப்பினும் இன்னும் அவர்களுக்கு உயர்த்தப்படும் DA சதவீதம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. 7 வது ஊதியக் குழு குறித்த ஆலோசனைக் கூட்டம் இம்மாதம் நடக்க இருந்தது. ஆலோசனைக் கூட்டத்தில் ஊதியக் குழு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. மே 8ம் தேதி நடக்க இருந்த ஆலோசனைக் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதியில் கூட்டம் நடக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆலோசனைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் ஜூலை மாதம் முதல் கிடைக்க வேண்டிய அகவிலைப்படி தள்ளிப்போகவும் வாய்ப்பிருப்பதாக அறியப்படுகிறது. மேலும், பயனபடியும் அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஜே.சி.எம் இன் பணியாளர் தரப்புச் செயலாளர் டி.ஏ.சிவ் கோபால் மிஸ்ரா அவர்கள் DA பொதுவாக 25% அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் தான் பயணப்படி அதிகரிக்கும் ஆனால் டிஏ விகிதம் தற்போது 17% ஆக உள்ளது. ஆக தற்போதைக்கு பயணப்படி உயராது என்றும் கூறியிருந்தார்.