தமிழக முதலமைச்சராக வரும் 7-ஆம் தேதி பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும்7-ம் தேதி பதவியேற்க உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில்நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில்வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.


இந்நிலையில்வரும் 7-ம் தேதி திமுகதலைவர் மு.க. ஸ்டாலின்பதவியேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர்பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில்நடைபெறவுள்ளது.

சென்னைகொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70-ஆயிரத்துக்கும்மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பின்னர் வெற்றி சான்றிதழை எடுத்துக்கொண்டுமெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதிநினைவிடங்களுக்குச் சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணி வெற்றிக்குவித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு


ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தேர்தல் அறிக்கையில் அளித்தவாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். கொரோனா நோய் பரவல்காரணமாகப் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்” என அவர் கூறியிருந்தார்.







0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive