கோவிட் -19 பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 10.05.2021 முதல் 24.05.2021 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதன் காரணமாக , தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு , மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி , மாண்புமிகு அமைச்சர் , மின்சாரம் , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அவர்கள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் நடத்திய கலந்தாய்வில் வெளியிட்ட வழிமுறைகள் கீழ்வருமாறு ::
அ ) தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.05.2021 முதல் 24.05.2021 வரை இருக்குமாயின் , அத்தொகையினை செலுத்த 31.05.2021 வரை மின் துண்டிப்பு / மறு இணைப்புக் கட்டணமின்றி காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது .
ஆ ) மேலும் , ஏற்கனவே மின்நுகர்வோர்களுக்கு வழங்கியுள்ள இணையதளவழி மூலம் வலைதள வங்கியியல் , கைபேசி வங்கியியல் , பேமண்ட் கேட்வே , பிபிபிஎஸ் ( BBPS ) முதலிய வழிகள் மூலம் பணம் செலுத்தி மின்கட்டண கவுண்டர்களுக்கு வருவதை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு தாழ்வழுத்த மின்நுகர்வோர்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கேட்டுக் கொள்கிறது .
இ ) 10.05.2021 முதல் 24.05.2021 வரையிலான காலத்தில் ( அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60 வது நாள் இந்த காலத்தில் இருப்பின் ) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் , மே 2019 - ம் ஆண்டில் ( கோவிட் இல்லாத காலம் என்பதால் ) கணக்கீடு செய்யப்பட்ட தொகையினையே கணக்கீட்டுத் தொகையாக கருதி அந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் .
புதிய நுகர்வோர்கள் அல்லது அவ்வாறு கணக்கீடு இல்லாதவர்கள் மே 2021 - க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி அதாவது மார்ச் 2021 - ன் கணக்கீட்டுப்படி மின்கட்டணம் செலுத்தலாம் . இவ்வாறு செலுத்த வேண்டிய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது .
அதாவது மே 2021 - ற்கான கட்டணம் சூலை 2021 - ல் முறைபடுத்தப்படும் . மே 2021 - ற்கான கணக்கீட்டுத்தொகை விபரம் மின்நுகர்வோர்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் . மேலும் மின்நுகர்வோர்கள் இந்த விபரத்தினை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளத்திலிருந்தும் தெரிந்து QerreiroGuru ( www.tangedco.gov.in ) ,