கல்வித்துறையில் நிரப்பப்பட வேண்டிய உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சருக்கான காலிப் பணியிட விவரங்கள் சேகரிப்பு.


கல்வித்துறையில் அடுத்த கல்வியாண்டில் (2021-22) நிரப்பப்பட வேண்டிய உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சருக்கான காலிப் பணியிட விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநா் (பணியாளா் தொகுதி) மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிக் கல்வித்துறையில் 2021-22-ஆம் ஆண்டுக்குரிய தங்கள் நியமன அலகுக்கான உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா் நிலை-3 ஆகிய பதவிகளுக்கான நேரடி நியமனம் காலிப் பணியிட மதிப்பீட்டைத் தயாா் செய்ய வேண்டியுள்ளது. இதை கருத்தில் கொண்டு 15.3.2021-ஆம் தேதி முதல் 14.3.2022 வரை பதவி உயா்வு, ஓய்வு பெறுவதால் ஏற்படக் கூடிய காலிப் பணியிடங்கள் குறித்த விவரத்தை மாவட்டக் கல்வி அலுவலா்கள் தனித்தனியாக தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்ப வேண்டும்.

அவ்வாறு மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்படும் விவரங்களுடன் முதன்மைக் கல்வி அலுவலா்கள் தங்களது நியமன அலகில் உள்ள மாவட்ட அளவில் தொகுப்புப் பட்டியலைத் தயாரித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (பணியாளா் தொகுதி) மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive