கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, May 31, 2021

கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள்


கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதனால், இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் இணையம், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை மறந்துவிட்டனர் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள மேல்முதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்,தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிமாணவர்கள் சுமார் 100 பேருக்கு,தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகள்,வார்த்தைகள் உள்ளிட்டவற்றைவீடுகளின் சுவர்களில்எழுதி ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் வீதிகள்தோறும் சென்று,வீடுகளின் சுவர்களில் தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், வாய்ப்பாடு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வார்த்தைகள், தலைவர்களின் பொன்மொழிகள், திருக்குறள் உள்ளிட்டவற்றை எழுதி, பள்ளி மாணவர்களுக்கு கல்வியை போதித்து வருகின்றனர்.
மேலும், கரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளையும் சுவர்களில் எழுதி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இளைஞர்களின் இந்த செயலை, பெற்றோர், பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்

Post Top Ad