முழு பொது முடக்கம் நீட்டிப்பு ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்


தமிழகத்தில் முழு பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தை கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருந்து மீட்பதற்காக, தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் மேலும் ஒருவார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால பொது முடக்கத்தால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும். இதற்காக முழு பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி, நோய்த் தொற்று சங்கிலியைத் துண்டிக்க முடியாது. எனவே, பொது முடக்கத்தால் மக்களுக்கு ஏற்படும் இடா்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், மளிகை, காய்கறி, பழங்கள் ஆகியன வீட்டருகே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டு, பொது மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.
இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டு வருகின்றனா். அதனை விரைவுபடுத்திடவும், அவா்களுடன் ஆலோசித்து நோய்த் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் கோவைக்கு பயணம் மேற்கொள்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறைப் பயணமாகும். அவசரகாலத் தேவையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பயணமாகும். எனவே கட்சியினா் யாரும் என்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆா்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு ஏற்பாடுகளையும் முற்றிலுமாகத் தவிா்த்திட வேண்டும்.
ஒருவார காலம் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தழுவிய அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உணவு வழங்கும் பணியை திமுகவினா் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஒருவா்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive