கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளின் ஒவ்வாமையால், கொரோனா நோயாளிகள் பலருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று என்ற கண்கள் சார்ந்த பிரச்சனை உறுதி செய்யப்பட்டு வருகிறது. கேரளா, ஹரியானா, ஒடிசா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று என்று அழைக்கப்படும் Black Fungus தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழவு நோயாளிகள், சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகளாக கண் மற்றும் கண்களை சுற்றிலுள்ள பகுதிகளில் ஏற்படும் வலி மற்றும் கண்கள் சிவந்துபோகுதல், முகத்தில் வலி, கண்களை சுற்றியுள்ள பகுதிகளின் நிறம் மாறுதல், திடீர் பார்வையிழப்பு, கண்கள் வெக்கமாகுதல், கருவிழி துருத்திக்கொண்டு இருப்பது, கருவிழி அசையாமல் இருப்பது, கண்களின் தசைகளுக்கு வலுவளிக்கும் நரம்புகள் செயலிழத்தல், காய்ந்த தீப்புண் போல கண்களில் கருப்பு நிற புண், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் மூக்கில் நீர் அல்லது இரத்தம் வடிதல் போன்றவை கூறப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ள நபர்களாக இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரில்விட்டு நோயாளிகள், கொரோனா சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டவர்கள், உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைதல், வைரஸின் தீவிரம், வைரஸின் தீவிரத்தால் எடுத்துக்கொள்ளப்படும் மருந்தால் ஏற்படும் கணைய பாதிப்பு, இரத்த சர்க்கரை அதிகரிப்பு போன்றவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படலாம்.
கருப்பு பூஞ்சை தொற்றை தொடக்க நிலையில் கண்டறிந்துவிட்டால் காது, தொண்டை, கழுத்து, கண் மற்றும் நரம்பியல் மருத்துவர்களை உடனடியாக சந்திக்க வேண்டியது அவசியம் ஆகும். கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து தப்பிக்க உடலின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, மருத்துவரின் அறிவுரையின் பேரில் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனைப்போன்று உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுயமான முறையில் மருந்துகள் எடுத்துக்கொள்ள கூடாது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.