அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே நாளைய பேராசிரியர் கனவுகளோடு இருக்கக்கூடிய தோழர்களே அனைவருக்கும் வணக்கம்.
நமது சங்கம் 2015ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நம்முடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை அதைத் தொடர்ந்து 5 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளை மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது.
தற்போது புதிய ஆட்சி அமைந்துள்ளது ஆட்சியாளர்கள் நேர்மையான அதிகாரிகளை நியமித்து ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த மதிப்புமிகு உதயசந்திரன் IAS அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப் பட்டபோது நிச்சயம் பரிசீலிக்கிறேன் உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி தந்தார்.
அப்போது அவர் எத்தனை உதவி பேராசிரியராக தகுதி உடைய எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற பட்டியலையும் கேட்டிருந்தார். அந்த காலகட்டத்தில் நம் கையில் இருந்த பட்டியல் அவரிடம் வழங்கப்பட்டது தற்போது அவர் முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கிறார். அவரை விரைவில் சந்தித்து நம்முடைய கோரிக்கையை மீண்டும் அவருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் அமைச்சர் மற்றும் முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தங்களுக்கு உறுதி அளிக்கின்றேன். இதையெல்லாம் செய்வதற்கு அனைத்து தகுதி பெற்ற ஆசிரியருடைய ஒத்துழைப்பு மிக அவசியம். நாம் அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையோடு செயல்படும்போது நம்முடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அடுத்தகட்டமாக நம்முடைய (உறுப்பினர் பட்டியல்) நெட் செட் பிஎச்டி முடித்த ஆசிரியர்களின் முழுமையான பட்டியல் தயார் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
அந்தப் பட்டியலை தயார் செய்யும் பொருட்டு இக் கடிதத்துடன் அதற்கான கூகுள் பார்ம் (Google Form) அனுப்பி வைக்கின்றேன் அதை விரைந்து பூர்த்தி செய்து submit செய்யவேண்டுமென்று தங்களை தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் தங்களுக்கு அறிவிக்கப்படும்.
நன்றி : முனைவர் பா ஜவகர். மாநிலத் தலைவர்.
உறுப்பினர் சேர்க்கை Google Form: http://www.tnspta.com/2021/05/tnspta-membership-form-2021-22_15.html