பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் பாலிடெக்னிக் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, டிச., முதல் பிப்., வரை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 2.28 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப் பட்டன. அதில், 91.63 சதவீதமான, 2.09 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 574 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்களை, www.tndte.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் 'அரியர்' தேர்வு நடத்தப்படும்.
நடப்பு செமஸ்டர் மாணவர்களுக்கு, ஜூன் 14 முதல், ஜூலை 14 வரை தேர்வு நடத்தப்படும். இவற்றில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வரும் 4 முதல், 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இந்த தகவலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment