ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கருத்து - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, May 20, 2021

ஆசிரியர்களின் ஊதியம் சார்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கருத்து


  *ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின்ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்குவழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில்கருத்துகள் பரவும் நிலையில்,'


பள்ளிக்கல்வித்துறை ஏதேனும் திட்டம் வைத்துள்ளதா?* என்ற கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிஇன்று பதில் அளித்தார்.

📌மணப்பாறை அரசுமருத்துவமனை, அரியமலங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிஆகியவற்றைப் பள்ளிக்


கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று(மே 20) நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

📌சத்திரம் பேருந்துநிலையத்தில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிகூறுகையில், "சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிகள்2 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டப் பணிகள்ஜூன் மாத இறுதியில் நிறைவடையும்என்றும், 2-ம் கட்டப் பணிகள்3 மாதங்களிலும் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

📌பள்ளிக் கல்விஇயக்குநர் பணியிடத்தை ஆணையராக மாற்றியது


தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார்.

📌கரோனா தொற்றுகுறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.

📌ஓராண்டாக வேலையின்றிஉள்ள ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கரோனா முன்களப் பணியாளர்களுக்குவழங்க வேண்டும் என்று கருத்துகள் பரவிவரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஏதேனும்திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக நானும் சமூக வலைதளத்தில்பார்த்தேன். இதுகுறித்து, முதல்வருடன் ஆலோசித்து, அவர் கூறும் ஆலோசனையின்படிஅறிவிக்கப்படும்" என்றார்.

📌அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிகூறும்போது, "அரியமங்கலம் குப்பைக்


கிடங்கு பிரச்சினை தொடர்பாக, சட்டப்பேரவையில் பல முறை பேசியுள்ளேன். அரியமங்கலம் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கு ஓராண்டுக்குள்தீர்வு காணப்படும்" என்றார்.

📌முன்னதாக, மணப்பாறைஅரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் முடிந்த பிறகுவாக்கு எண்ணிக்கை வரை கிடைத்த நாட்களை, கரோனா பரவலைத் தடுக்க முந்தையகாபந்து அரசு சரியாகப் பயன்படுத்தத்தவறிவிட்டது. ஆனால்,


  திமுக ஆட்சிக்குவந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. கரோனா பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும்தொலைநோக்குப் பார்வையுடன் தீவிரமாகக் களப் பணியாற்றி வருகிறது. நகர்ப்புறங்களில் நடத்தப்படுவதுபோல், கிராமப்புறப் பகுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்துமாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கைஎடுக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

📌ஆய்வின்போது மாவட்டஆட்சியர் சு.சிவராசு, கரூர்எம்.பி. எஸ்.ஜோதிமணி, எம்எல்ஏக்கள் மணப்பாறை பி.அப்துல்சமது, திருச்சிகிழக்கு எஸ்.இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன்உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







Post Top Ad