ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும். ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.
புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.
உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம்.
இந்த நிலையில், உங்கள் ஆதார் அட்டைக்கு புதிய தோற்றத்தை அளித்துள்ள UIDAI, பி.வி.சி ஆதார் அட்டை என்று அழைக்கப்படும் கார்டை அறிமுகம் செய்துள்ளது.
முந்தைய ஆதார் அச்சிடப்பட்ட வடிவத்தில் மட்டுமே கிடைத்தது, ஆனால் இப்போது புதிய மாற்றத்தின் கீழ், டிஜிட்டல் அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது, இது எளிதாக எடுத்து செல்ல உதவுகிறது.
மேலும் இதில் ஒரே ஒரு மொபைல் எண்ணைக் கொண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது பெயரையும் பதிவு செய்ய முடியும். இதற்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்து பணத்தை காட்டினால் உங்கள் பி.வி.சி ஆதார் அட்டை உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்.
பி.வி.சி ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது?
* UIDAI-ன் போர்ட்டலில் resident.uidai.gov.in உள்நுழையவும்.
* my aadhaar -> order aadhaar pvc card என்பதை கிளிக் செய்யவும்.
* இப்போது தோன்றும் புதிய வலைத்தள பக்கத்தில் ஆதார் அட்டை எண், பதிவு எண் மற்றும் virtual அடையாள எண்ணை கவனமாக உள்ளிடவும்.
* பின்னர் கேப்சாவை உள்ளிட்டு sent OTP என்பதை கிளிக் செய்யவும், பின்னர் உங்கள் தொலைபேசிக்கு வந்த நம்பரை என்டர் செய்யவும்.
* உங்கள் அட்டையை ஆர்டர் செய்ய குறைந்தபட்சம் ரூ .50 செலுத்தவும். உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிக்கு கார்டு வந்துவிடும்.
உங்களுடைய மொபைல் எண் உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை எனில், நீங்கள் செய்ய வேண்டியது :
* https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.
* உங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்யுங்கள்.
* அடுத்து உங்கள் security code-ஐ உள்ளிடவும். மேலும் 'my mobile not registered' என்பதைக் கிளிக் செய்க.
* உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்ட பிறகு 'send OTP' என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு OTP வரும். பின்னர் OTP ஐ உள்ளிடவும்.
* இப்போது நீங்கள் ரூ. 50 செலுத்தினால் நிறைவடைந்துவிடும். 2 வாரங்களுக்குள் நீங்கள் பதிவு செய்துள்ள முகவரிக்கு உங்கள் பி.வி.சி ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படும்.