கொரோனா பரவல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மே 1 முதல் ஜூன் 13 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
624 தற்காலிகப் பணியிடங்களுக்கு (G.O.No.47, Dated:20.03.2013) ஏப்ரல் - 2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வெளியீடு
கோடை விடுமுறை:
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்ப ஊரடங்குகளை அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவும் கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என உலக சுகாதாரத்துறை கூறுகிறது. அதனால் இந்திய அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. பல மாநில அரசுகள் ஊரடங்குகளை அறிவித்தும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றன. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மஹாராஷ்டிரா அரசு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் கோடை கால விடுமுறையாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் மஹாராஷ்டிராவில் மே 1 முதல் ஜூன் 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு
மேலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போதைய சூழல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்த பிறகு அப்போதைய கொரோனா பரவல் நிலையை கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மஹாராஷ்டிரா மாநில அரசு தெரிவித்துள்ளது.