ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி
அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில்,கல்வி மேம்பாட்டு அமைப்போடு இணைந்து தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல் , வணிகவியல், பொருளியல், கணிதவியல் , இயற்பியல், வேதியியல் துறைகள் நடத்த உள்ள தேசிய, மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இணைய வழிய பயிற்சி வகுப்புகளுக்கான தொடக்க விழா நடந்தது.
கல்வி மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் கிருஷ்ணன், மதுரை கல்லுாரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் பேசினர். முதுநிலை ஆங்கில துறை தலைவர் கல்யாணசுந்தரி நன்றி கூறினார்.
தணிந்துவரும் கொரோனா. ஆலோசிக்கும் முதல்வர். ஆகஸ்டில் பள்ளிகள் திறப்பா?
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டன. முழு கல்வியாண்டும் ஆன்லைன் வகுப்பு மூலமே நடைபெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தொற்று அதிகமானதால் மீண்டும் மூடப்பட்டன.
இதனை தொடர்ந்து இரண்டாவது அலை வேறு வந்துவிட்டதால் பள்ளி, கல்லூரிகள் திறக்க சாத்தியமில்லாமல் போனது. தற்போது இந்தியா முழுவதுமே கொரோனா பரவல் குறைந்துவிட்டது. ஊரடங்கு பிறப்பித்த மாநிலங்கள் படிபடியாக தளர்வுகள் அறிவித்து வருகின்றன. ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற்ற தெலங்கனா அரசு நாளை முதல் 50% மாணவர்களுடன் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அனுமதி அளித்துள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் இதுதொடர்பாக ஆலோசிக்கப் போவதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்திருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்தார். இச்சூழலில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் வரும் ஜூலை 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஆலோசனைக்குப் பின் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. அநேகமாக ஆகஸ்ட்டில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள், மூன்றாம் அலை வந்தால் இளம் சிறார்களை அதிகம் தாக்க வாய்ப்பிருக்கிறது என்றும், ஆகவே மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு திறக்க அனுமதிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஸ்டாலின் என்ன முடிவு எடுக்க போகிறார் என ஜூலை மாதம் தெரியவரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகை வழங்க அரசு சம்மதம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்க மத்திய அரசு சம்மதித்து விட்டதாக மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 26 மற்றும் 27-ந் தேதிகளில், டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். 28 முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதித்தோம்.
ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அதில், நிறுத்தி வைக்கப்பட்ட 3 அகவிலைப்படி உயர்வையும், வருகிற ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வையும் சேர்த்து மொத்தமாக செப்டம்பர் மாதம் வழங்க மந்திரிசபை செயலாளர் ஒப்புக்கொண்டார். இந்த முடிவு, மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Corona Update - இன்றைய ( 30.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 38,891
சென்னையில் இன்று ஒரே நாளில் 257 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 159
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 514
ஈரோடு - 420
சேலம் - 295
திருப்பூர் - 270
மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.06.2021 )
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,537
இன்றைய உயிரிழப்பு : 113
சென்னை மட்டும் - 15
இணைநோய் இல்லாதவர் - 16
G.O-169- NHIS-2021-யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் அமலாக்கம் - அரசாணை வெளியீடு!!
NHIS - 2021 - அரசுத் துறைகள், மாநில பொதுத் துறை நிறுவனங்கள், சட்ட ரீதியான வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் ஊழியர்களுக்கும், அவர்களின் தகுதியான குடும்ப உறுப்பினர்களுக்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய சுகாதார காப்பீட்டு திட்டம் அமலாக்கம் - அரசாணை வெளியீடு!!
Click here to download nhis pdf
தமிழ்நாட்டில் 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு: யார் இவர்கள்?
தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
தமிழகப் பிரதிநிதித்துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.
கரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர்.
இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.
1.கணேஷ், (கணினி சார் வளங்களான வீடியோக்கள், விளையாட்டுகள், interactive apps வாயிலாகக் கணிதம் கற்பிப்பவர், மதிப்பீட்டில் புதிய அணுகுமுறையாக க்யுஆர் கோட் ஸ்கேனர் கொண்டு சில நிமிடங்களில் மதிப்பீடு செய்து கற்பிப்பவர்)
கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
திருவாரூர் மாவட்டம்.
2.மனோகர் சுப்பிரமணியம் (க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டவர்)
வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,
கரூர் மாவட்டம்.
3.தயானந்த் (கற்றல் கற்பித்தலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்குப் புரியும் விதத்திலும் அதேநேரத்தில் எளிமையாகவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 170-க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கியவர், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் பங்காற்றியவர்)
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
திருப்பூர் மாவட்டம்.
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் கணேஷ், மனோகர் சுப்பிரமணியம், தயானந்த்
அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.
அதாவது,
1.ஜெ.செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் 'பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்' அமைத்தவர்)
மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி,
சிவகங்கை மாவட்டம்.
2.தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்)
பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
சேலம் மாவட்டம்.
3.இளவரசன் (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே க்யூஆர் கோடு திட்டத்தைச் செயல்படுத்தியவர்)
வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
சேலம் மாவட்டம்.
ஆகிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய ந
ல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : www.hindutamil.in
கால்நடை மருத்துவக் கல்லூரி : காலி பணியிடங்களுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்!
மாநிலம் முழுவதும் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 49 பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளை முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை www.tanuvas.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என கால்நடை மருத்துவக்கல்லூரி தெரிவித்துள்ளது கல்லூரி பணியிடம் , சம்பள விபரம் உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவக்கல்லூரி பதிவாளர் கூறியுள்ளார்.
தனியார் கல்லூரியில் கட்டணமில்லாமல் படிக்கும் வாய்ப்பு..! விண்ணப்பிக்க நாளை கடைசி..!
தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழ்நிலையில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவர்கள், போன்ற களப பணியாளர்களின் பிள்ளைகள் எவரேனும் 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனம் ஆனது இலவசமாக உயர்கல்வியினை வழங்க ஒரு திட்டத்தினை கடந்த ஆண்டு அமல்படுத்தியது.
களப்பணியாளர்கள் பிள்ளைகள் 12 தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் உள்ள 50 மேற்பட்ட இளங்கலை பாடப்பிரிவுகளில் இதில் வேண்டுமானாலும் சேருவதற்கான இலவச அறிவிப்பினை வேல்ஸ் கட்டணமில்லா கல்வி என்ற பெயரில் அமல்படுத்தியது. கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது போன்று இந்த ஆண்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த கல்வி உதவித்தொகைக்கான சிறப்பு தேர்வு தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது வரும் ஜூலை 02 ஆம் தேதி முதல் 07 வரை நடைபெற உள்ளது.
தேர்வில் கலந்து கொள்பவர்கள் இந்த தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களுக்கு உகந்த 45 நிமிடங்களில் இந்த தேர்வினை எழுதலாம். தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 10%, 25%, 50%, 75%, 100% சதவீத அடிப்படையில் டியூஷன் பீஸ் கட்டணமின்றி படிக்கலாம்.
தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு இந்த http://www.velsuniv.ac.in/ லிங்கில் தெரிந்து கொள்ளவும்.
நீட் பாதிப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
நீட் தேர்வு பாதிப்புகளை கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்த தமிழக அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்தது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கவேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும், அதை ரத்து செய்யக்கோரியும் கே.நாகராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். (இவர் தமிழக பா.ஜ.க.-வின் பொதுச் செயலாளராக இருப்பதாக மனுவில் கூறியுள்ளார்). அந்த மனுவில், நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம், நாடு முழுவதற்கும் பொதுவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வியின் தரத்தை மேம்படுத்த 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது எனவும், அந்த சட்டத்தின் அடிப்படையில், மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனை குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும் எனவும், அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளதாகவும், இது அனுமதிக்கத்தக்கதல்ல என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12th Marks Calculator - Excel Sheet
12th Marks Calculator - Excel Sheet
Click Here For Download
Prepared by Mr. Karthigeyan.
மதிய உணவில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு’’ - அமைச்சர் அன்பில் மகேஷ்
’’
வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் 3,197 பேருக்கு விலையில்லா புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘’தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து வருகிறேன். இந்த அறிக்கையினை வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்பிக்க உள்ளேன். ஆய்வறிக்கையில் வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது, ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவ சேர்க்கையினை உயர்த்துவது, இப்பள்ளிகளின் கட்டடங்களின் தரம், கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீரை பள்ளி வளாக பைப்புகளிலிருந்து ஓரிரு மாணவ, மாணவிகள் எடுத்து செல்வதனை தவிர்க்கவும், அதற்கான பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவைகளும் இடம்பெறும்” எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் முருகேசன், தலைமையாசிரியர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 32,262 பேருக்கும் தேர்ச்சிக்கான மதிப்பெண் - பள்ளிக்கல்வித்துறை திட்டம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து பொதுத் தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவர்களுக்கு ‘ஆல்பாஸ்‘ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்போது தேர்ச்சி மதிப்பெண் வழங்குவதற்கான அறிவிப்பையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மேற்கல்வி ஆண்டில் மொத்தம், 8 லட்சத்து 15 ஆயிரத்து 442 பேர் பிளஸ் 1 தேர்வு எழுதினர். அவர்களில் 32,262 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேற்கண்ட கல்வி ஆண்டில் தேர்வு நடக்கின்ற போது, கொரோனா அறிவிப்பு வெளியிட்டதால் பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வில் ஒரு பாடத் தேர்வு நடத்தப்படாமல் விடுபட்டது. அந்த தேர்வு எழுத இருந்த மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்ச்சி மதிப்பெண்கள் முறையினால், கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 32,262 பேரை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது
PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!
PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!
Click Here & View Video
நாங்கள் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமானது தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019 க்குள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது. நாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வு முடிவுகள் 15.07.2019 க்கு முன்பாகவே வெளியிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட கல்வித் தகுதியினை நாங்கள் அனைவரும் Cut off date 15.07.2019 க்கு முன்னரே பெற்றுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவின்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட நாட்களான 29.10.2019 - 01.11.2019 க்குள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ததுடன் 08.11.2019 மற்றும் 09.11.2019 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்தோம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது முதுகலைப் படிப்பு Cutoff date 15.07.2019 க்கு பிறகு முடித்ததாகக் கூறி எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.
எனவே இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் ஏற்காததால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் (Writ Petition) நாங்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் (Eligible Candidate) என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில் எங்களில் மூன்று நபர்கள் மட்டும் 09.02.2020 மற்றும் 10.02.2020 அன்று பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கான பள்ளியையும் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தீர்ப்பினை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தொடுத்த மேல்முறையீட்டு மனு (Writ Appeal) மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆசிரியர் தேர்வு வாரியமானது எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது.
தகுதியான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும் முறையாக சான்றிதழ் சமர்ப்பித்தும், மாணவர்களின் அறிவுக்கண்களை திறக்கும் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்த நாங்கள் இந்த அசாதாரமாண சூழ்நிலையில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா அவர்கள் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து பணி நியமன ஆணை வழங்க வழிவகை செய்யுமாறு பணிந்து தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
TET லிருந்து விலக்கு வேண்டி மனு - ஏற்கனவே பணி நியமனம் பெற்ற அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்
அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் கடந்த 20/08/2010 முதல் 16/11/2012 வரையிலான காலகட்டத்தில் பணி நியமனம் (சுமார் 1500) செய்யப்பட்ட நிரந்தரமாக பணியிட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் TET லிருந்து விலக்கு கோரி கடந்த பத்து வருடங்களாக அரசிடம் பலமுறை அணுகியும் எங்கள் நிலை பற்றிய புரிதலும் வராமல், தீர்வும் செய்யாமல் மிகுந்த சிரமப்பட்டு பணியாற்றி வருகிறோம். தயவுசெய்து எங்களுக்கு நல்ல விடியல் செய்து தர மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐயாவிடம் இந்த மனுவை அனுப்பி பரிந்துரை செய்து உதவுமாறு தங்கள் பாதம் தொட்டு வணங்கி வேண்டுகோள் விடுக்கிறோம்.நன்றி
தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் - CEO Proceedings
பள்ளிக்கல்வி - தென்காசி மாவட்டம் - தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடத்துதல் உரிய விவரங்களுடன் கலந்து கொள்ளல் - தகவல் தெரிவித்தல் - சார்பு .
பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் ந.க.எண் 06681 / கே 1 / 2020 நாள் 21.06.2021
பார்வையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் சார்ந்து தென்காசி மாவட்ட அரசு / உதவிபெறும் / பகுதி உதவிபெறும் | சுயநிதி / மெட்ரிக் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் கீழ்க்கண்டவாறு நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் உரிய விவரங்களுடன் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CEO Proceedings - Download here...
.
கல்வி தொலைக்காட்சியை நம் Mobile Phone ல் LIVE ஆக ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி? MOBILE APP
கல்வி தொலைக்காட்சியை
நம் Mobile Phone ல் LIVE ஆக
ஒரே நிமிடத்தில் பார்ப்பது எப்படி?
1ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை,
புதிய கல்வியாண்டு
2021-2022 க்கான பாடங்கள்,
கல்வி TV ல், சீரான கால அட்டவணைப்படி ஒளிபரப்பாகிறது..!
அதை Mobile ல் LIVE ஆக பார்க்க வேண்டுமா?
மேலே உள்ள Tamil Cloud என்ற app ஐ play store இல் download செய்து அதில் channel no 14ஐ தேர்ந்தெடுத்து fullscreen இல் உங்கள் பாடங்களை தெளிவாக பார்த்து கொள்ளலாம்.
Exit ஆக back position ஐ இரு முறை அழுத்தி வெளியேறலாம் .
மாணவர்களுக்கு அவசியமான
இப் பதிவினை அனைவருக்கும் "SHARE" செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.singamcloud.cloudtamil
அ.ரெக்ஸ் ரூபஸ் ஆனந்த்,
இடைநிலைஆசிரியர்
கோழிப்பட்டு காணை ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம்.
26.06.2021.
+2- மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு
📱📱மதிப்பெண் வழங்கும் முறை, விளக்க எடுத்துக்காட்டு
🏮10 ஆம் வகுப்பு
உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களின்மதிப்பெண் 70,80,90 எனக்கொண்டால் இவற்றின் சராசரி, அதாவது மூன்றையும்கூட்டி மூன்றால் வகுக்க கிடைப்பது 80 ஆகும். இந்த 80 இல் 50 சதவீதம் 40 ஆகும். இந்த 40 மதிப்பெண்ணை 12 ஆம் வகுப்பில் ஒவ்வொருபாட மதிப்பெண்ணுக்கும் கூட்டிக்கொள்ள வேண்டும்.
🏮11ஆம் வகுப்பு
தமிழில்பெற்ற மொத்த மதிப்பெண் 90 எனில்அக மதிப்பீட்டு மதிப்பெண் 10 போக மீதம் உள்ளது80 ஆகும். இதில் 20 சதவீதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது 80 ஐ 5 ஆல் வகுத்துக்கொள்ள வேண்டும். அப்படியெனில் 16 ஆகும். அதாவது 12 ஆம்வகுப்புக்கு தமிழ் பாடத்தில் சேர்க்கவேண்டிய மதிப்பெண் 16 ஆகும். இதே போன்றுஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட வேண்டும்.
🏮12 ஆம் வகுப்பு
இதில் செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்குசெய்முறைத் தேர்வுக்கு 20 + அக மதிப்பீட்டு மதிப்பெண்ணுக்கு10 என மொத்தம் 30 மதிப்பெண் எடுத்துக்கொள்ள வேண்டும். செய்முறைத் தேர்வு இல்லாத படங்களுக்குஅந்தந்த பாடத்திற்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்ணைமூன்றால் பெருக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாகஒருவருக்கு தமிழ் பாடத்தில் அகமதிப்பீட்டு மதிப்பெண் 8 வழங்கப்பட்டது எனில் அவருக்கு 12 ஆம்வகுப்பில் தமிழ் பாடத்திற்கு 8×3=24 எனஎடுத்துக்கொள்ள வேண்டும்.
🏮12 ஆம் வகுப்பிற்கு மதிப்பெண்வழங்கும் முறை
உதாரணமாகதமிழ் பாடத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
பத்தாம்வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 40, பதினோன்றாம்வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 16, பண்ணிரண்டாம் வகுப்பில் கணக்கிட்ட மதிப்பெண் 24 ஆகிய அனைத்தையும்கூட்ட கிடைப்பது 40+16+24=80. எனவே 12 ஆம் வகுப்பிற்குஅவருக்கு தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண்வழங்கப்படும். இதே முறையை அனைத்துபாடங்களுக்கும் பின்பற்றவும்.
தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போது செய்யப்படுகின்றன. தினமும் 1.30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 36வது நாளாக ஒருநாள் கொரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. மேற்கு மண்டலத்தை சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்கள் உடன் காணொலியில் ஆலோசிக்கப்பட்டது.
மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும் என்றும், மேலும், சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வு 100% ரத்து செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ONLINE INTERVIEW FOR TEACHERS ON CONTRACTUAL BASIS - KV Schools
ONLINE INTERVIEW FOR TEACHERS ON CONTRACTUAL BASIS - KV Schools
Online Interview for appointment of teachers on contractual basis in KV Aruvankadu and KV Wellington for the year 2021-22 , will be conducted as per the schedule given below . For Qualification and other eligibility conditions , kindly refer to the school website www.aruvankadu.kvs.ac.in . Application form may be downloaded from our website and submitted along with all supporting documents through speed post or e - mail ( principalkvavk@gmail.com ) on or before 05.07.2021 upto 5.00 PM . Eligible candidates will be allowed to appear for online interview through google meet .
நடப்பு கல்வியாண்டில் இருந்து M.Phil. படிப்பு கைவிடப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டில் இருந்து M.Phil. படிப்பு கைவிடப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!
ஏற்கனவே M.Phil. படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பயிலலாம்.
- சென்னை பல்கலைக்கழகம்
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ஜூலை 5 முதல் இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: ஜூலை 5 முதல் இணையத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில், இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''2021- 22ஆம் கல்வியாண்டில் சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இணையவழியில் விண்ணப்பங்களைப் பெற்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24ஆம் தேதி முதல் பெறவேண்டும். அதையடுத்து 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் ஜூலை 2ஆம் தேதி வெளியிடவேண்டும்.
பள்ளிகள் ஜூலை 3ஆம் தேதி முதல் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்க வேண்டும். அதையடுத்துத் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். https://rte.tnschools.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிப்பது அவசியம். பள்ளியில் உள்ள இடங்களை விட அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10 அன்று குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதே தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களைப் பள்ளி அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக் கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிடவேண்டும். ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட அளவிலான கல்வி அதிகாரியிடம், சேர்க்கை விவரங்களைத் தனியார் பள்ளிகள் அளிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் எல்கேஜி மற்றும் 1-ம் வகுப்பு சேர்க்கை தொடர்பாக உரிய அறிவிப்பை வெளியிட வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. பெற்றோர்கள் விண்ணப்பிக்கும்போது,
* புகைப்படம்,
* பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம்,
* இருப்பிடச் சான்று,
* வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்),
* வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல்,
* சாதிச் சான்றிதழ்
ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் 8600 பேருக்கு வேலை - கலெக்டர் அழைப்பு
திருச்சியில் 8600 பேருக்கு வேலை
கலெக்டர் அழைப்பு
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையம், ஜமால் முகமது கல்லூரியுடன் இணைந்து நடத்தும் தனியார் வெலை வாய்ப்பு முகம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்க உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8,10,12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பி.எட்., பி.ஈ., வரை படித்தவர்கள் தங்கள் பயடேட்டாவுடன், கல்விச்சான்று, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம். முன்பதிவு செய்ய விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கேட்டுக்கொண்டுள்ளார்.
போனில் சந்தேகம் தீர்க்க ஆசிரியர்களுக்கு உத்தரவு
கல்வி, 'டிவி' வகுப்புகள் குறித்த, மாணவர்களின் சந்தேகங்களை, மொபைல் போன் வழியாக தீர்க்க, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி மற்றும் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கல்வி, 'டிவி' வகுப்புகளின் நேரம் குறித்த அட்டவணையை, மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' முறையில் அனுப்ப வேண்டும். 'ஸ்மார்ட்' போன் வசதி இல்லாத மாணவர்களுக்கு, புத்தகம் வாங்க வரும் போது, 'டிவி' நிகழ்ச்சி அட்டவணை பிரதியை நேரில் வழங்க வேண்டும்.பள்ளிகளில், அட்டவணை விபரத்தை, அறிவிப்பு பலகையில் இடம் பெறச்செய்ய வேண்டும்.
வீட்டில் வகுப்புகளை கவனிப்பதை, ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.ஸ்மார்ட் போன் மற்றும்கல்வி, 'டிவி' பார்க்க வசதியில்லாத மாணவர்களின் விபரங்களை, ஆசிரியர்கள் சேகரிக்க வேண்டும்.வகுப்புகளில் வழங்கப்படும், வீட்டுப் பாடங்களை மாணவர்கள் செய்து, அவற்றை, 'ஸ்மார்ட்' போனில், ஆசிரியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்த வேண்டும்.பாடங்கள் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களை, ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போன் வழியாக தீர்த்து வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும், மொபைல் போன் எண் வழங்க வேண்டும். ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்களின், பெற்றோரை நேரில் பள்ளிக்கு வரவழைத்து, மாணவர்களின், 'அசைன்மென்டு'களை வாங்கி, அதை மதிப்பீடு செய்ய வேண்டும். கல்வி, 'டிவி' மற்றும், 'யூடியூப் சேனலில்' வகுப்புகளை கவனிக்கவும், மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிதல் சார்பாக முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!
மாணவர் சேர்க்கை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிதல் சார்பாக ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!
அரசு பள்ளிகளை மேம்படுத்த புது திட்டம்!
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மாவட்டம் வாரியாக, பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை, மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, பள்ளிகளின் வெளியே, பொதுமக்களுக்கு தெரியும் வகையில், விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டியல்மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்ப, அரசு பள்ளி களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்; உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். நிதி பற்றாக்குறை உள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீட்டை, அரசால் அதிகரிக்க முடியாத சூழல் உள்ளது. இதை சமாளிக்க, மாவட்டம் வாரியாக, தனித்தனியே பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தலாம் என, அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, பள்ளி சீரமைப்பு மாநாடு அறிமுகமாகி, பெரிதாக வெற்றி பெற்றது. அதை மீண்டும் தொடர திட்டமிடப்பட்டு உள்ளது.இந்த மாநாட்டுக்காக, மாவட்டந்தோறும் உள்ள பள்ளிகளின் உள் கட்டமைப்பு தேவைகளை, தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் இணைந்த குழு பட்டியலாக தயாரிக்கும்.பின், மாவட்ட அளவிலான தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் முன்னாள், இந்நாள் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, உதவிகள் பெறப்படும். இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தப்படும். அதில், நன்கொடை யாளர்கள் மற்றும் பள்ளிக்கான சமூக ஆர்வலர்கள் வரவழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவர். நிதியுதவிஇந்த திட்டம், அரசின் எந்த நிதியுதவியும் இன்றி, பொதுமக்களின் முழு பங்களிப்புடன், அந்தந்த ஊர் அரசு பள்ளிகள் பொலிவு பெறுவதற்கானது. எந்த முறைகேடுக்கும் இடமின்றி, நேரடியாக நன்கொடையாளர்களால் நிதியானது செலவிடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
CTET - ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுக்க செல்லும்
மத்திய - மாநில அரசுகளின் சார்பில் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வுகளின் சான்றிதழ்கள், ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லத்தக்கது என்பது, சமீபத்தில் மாற்றப்பட்டது.
அதற்கு பதிலாக, ஆயுள் முழுமைக்கும் செல்லும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., வெளியிட்ட அறிவிப்பில், 'மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான 'சிடெட்' முடித்தவர்களின் சான்றிதழ்கள், அவர்களின் ஆயுள் காலம் முழுதும், பணியில் சேர செல்லத் தக்கது. 'ஏற்கனவே தேர்வு எழுதியவர்களுக்கு, புதிய சான்றிதழ் எதுவும் வழங்கப்படாது' எனக் கூறப்பட்டுள்ளது.
NEET EXAM - கருத்து தெரிவிக்க இன்றே கடைசி
தமிழகத்தில், 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிடம், நீட் தேர்வு தொடர்பான கருத்துகளை, ஒவ்வொருவரும் ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் வாயிலாகவோ, neetimpact2021@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கலாம்.மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்திலும், நேரடியாகவும் தங்களது கருத்துகளை சமர்ப்பிக்கலாம். நீட் தேர்வு குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க, இன்று கடைசி நாள். அதன்பின், அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. நீட் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல் நிறுத்தம்
அரசின் 'நீட்' பயிற்சி ஒருங்கிணைப்பாளர் களுக்கு திடீரென வழிகாட்டுதல்கள் நிறுத்தப் பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு சரியான பயிற்சி கிடைக்காததால், நீட் தேர்வில் முன்னிலை பெற முடியவில்லை.இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்வி துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சி திட்டம், அ.தி.மு.க., ஆட்சியில் அறிமுகமானதால், தி.மு.க., ஆட்சியில் தொடர்வதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர்.'நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம்' என தி.மு.க., கூறி வருவதால், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பயிற்சி அளிக்க உடனடியாக அனுமதி அளிக்கப்படவில்லை; தாமதமாக அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் நீட் இலவச பயிற்சி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். நீட் ஒருங்கிணைப்பாளர்களின் மாநில 'வாட்ஸ் ஆப்' குழுவில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுஉள்ளன.நீட் பயிற்சி குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் நீட் பயிற்சியின் அடுத்தடுத்த வகுப்புகள் குறித்த வழிகாட்டுதல் பெற முடியாமல், ஆசிரியர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தவித்து வருகின்றனர்.இந்த நெருக்கடியான நிலையில், பயிற்சியை தொடர்வதா, நிறுத்துவதா என ஆசிரியர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்குமா? விரைவில் முக்கிய அறிவிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. பல மாநிலங்கள் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த வண்ணம் உள்ளன.
தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக குறைந்துகொண்டிருக்கின்றது. நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள மொத்த மாவட்டங்களும் தொற்றின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் பல புதிய தளர்வுகள் (Lockdown Relaxations) அமலுக்கு வருகின்றன. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிக அளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்று கட்டுக்குள் இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாநிலங்களில் கிட்டதட்ட இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது என்றே கூறலாம்.
தமிழக மாணவர்களின் கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. தொற்றுக்கு மத்தியில் துவங்கியுள்ள கல்வி ஆண்டில் பாடங்கள் இதுவரை ஆன்லைன் முறையிலேயே நடந்து வருகின்றன. பள்ளிகளும் கல்லூரிகளும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மனங்களில் தொடர்ந்து எழும்பி வருகிறது.
இதற்கிடையில், அண்டை மாநிலமான தெலுங்கானாவில் (Telangana) ஜூலை 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தொற்று குறைந்துகொண்டிருக்கும் பிற மாநிலங்களும் இதைத் தொடர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், ஜூலை மாதம் பள்ளிகள் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பள்ளிகளை திறந்தால், மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடும் சூழல் ஏற்படும் என்பதால், இதில் அரசு எந்தவித அவசரத்தையும் காட்டப்போவதில்லை. பள்ளிகள் திறப்பதை பற்றி பரிசீலிக்கப்படும்போது, அரசு இந்த முக்கிய அம்சங்களை மனதில் கொள்ளும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன:
- தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் முதலில் பள்ளிகள் திறக்கப்படலாம்.
- மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் துவக்கப்பட்டு பின்னர் ஒவ்வொரு வகுப்புக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்படலாம்.
- மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்தப்படலாம்.
இதற்கிடையில், தமிழக பள்ளிகளில் இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கிவிட்ட நிலையில், நேற்று முன்தினம், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான இலவச பாடநூல்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சில நாட்களில் பள்ளிகள் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி இந்த செயல்முறை விரைவில் நிறைவுபெறும். மேலும், கல்வி தொலைக்காட்சி வீடியோக்களும் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. புதிய முறைகள் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகளை (TN Schools) திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் இன்னும் சில நாட்களின் வெளிவரக்கூடும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி மணி ஓசை கேட்க மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!!
தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்க ‘பொருளாதார நிபுணர் குழு’ : நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் நியமனம்!
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் ட்ரீஸ், முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். இக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சி பெற செய்து, பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்,என்றார்.
சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை: உச்சநீதிமன்றம் அறிவிப்பு.
டபுள் மாஸ்க் அணியவித்து சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும் என மாணவர்களின் ஒரு தரப்பு கூறியுள்ளனர். சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீடுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மாணவர் தரப்பு வாதம் செய்துள்ளனர். சிபிஎஸ்இயின் மதிப்பெண் முறை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் கூறியுள்ளார். சிபிஎஸ்இ +2 தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஆளுநர் உரையில் அறிவிப்பு.
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் , உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்களை இவ்வரசு வரவேற்கும் . அதே நேரத்தில் , தமிழ்நாட்டு மக்களுக்கு , குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் , அரசுப் பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும் . இந்த நோக்கத்திற்கு மாறாக கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை மாற்றியமைக்கவும் , ரத்து செய்யவும் தேவையான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் , பொதுத்துறை நிறுவனங்களிலும் , தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் இந்த அரசு வலியுறுத்தும்.
DIPR - TNLA - Governor Address -(Tamil)- Date - 21.06.2021.pdf
2016 முதல் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் விவரம் கோரியது பள்ளிக்கல்வித்துறை
2016 முதல் இதுவரை 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர் என பள்ளிக்கல்வித்துறை விவரம் கோரியது. நீட் தேர்வின் தாக்கம் ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு விவரங்கள் தேவைப்படுவதையொட்டி உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் பாதுகாப்பு - குழு அமைத்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
GO 1D NO : 83 , DATE : 17.06.2021 - Download here...
IMG_20210621_170704
பள்ளிக் குழந்தைகளைப்பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பது குறித்த வழிகாட்டுதல் மற்றும் இணையவழிவகுப்புகளுக்கான நெறிமுறைகள் :
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த ( Education Boards ) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.
மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும் , அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும் , ஒவ்வொரு பள்ளியிலும் , " மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு " அமைக்கப்படும்.
இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் , ஆசிரியர் இருவர் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர் , பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர் , ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பர் .
ஒரு மாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும்.
அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி ( Hot Line ) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.
மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் ( Central Complaint Centre - CCC ) தெரியப்படுத்தவேண்டும் . . இந்த மையம் புகார்களைப் பதிவுசெய்வது மட்டுமின்றி , அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும்.
இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர் . இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.
. பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ ( POCSO ) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் ( orientation module ) பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் , சுயத் தணிக்கை ( Self - audit ) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் ( Module ) உருவாக்கப்பட்டு வழங்கப்படும் . . மற்றும் இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக உடை அணியவேண்டும்.
இணையவழிக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு , அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.
• புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் ( Safety Boxes ) வைக்கப்படும் . மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.
• மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு , பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும்.
புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் ( வாய்மொழி உட்பட ) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும் . . அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ' குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம் ' என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
Std 1 to 5 Work done Registers
Std 1 to 5 Work done Registers
First Term Std 1 to 5 Work done Registers are posting below
Std 1 - Work done Register - Download here
Std 2 - Work done Register - Download here
Std 3 - Work done Register - Download here
Std 4 - Work done Register - Download here
Std 5 - Work done Register - Download here
அனைத்து மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசிக்காக ரூ.1,000 சாஸ்த்ரா பல்கலை. வழங்குகிறது
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்துமாணவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அவர்களுக்கு தலா ரூ.1,000வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் வளாகத்துக்கு வர ஏதுவாக, அவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தலா ரூ.1,000 வழங்க உள்ளது.
இத்திட்டம் அவர்கள் தடுப்பூசிக்கான செலவை ஈடுகட்ட உதவும். இதன்மூலம் நாடு முழுவதும்உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
அரசு உத்தரவு வந்தவுடன் வகுப்புகள் தொடங்கப்படும்போது, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்புடன் வர இயலும்.
சமீபத்தில் மாணவர்கள் இணையவழி தேர்வு எழுத உதவும் வகையில், இணைய வழி இணைப்பு செலவுக்காக சுமார் 12 ஆயிரம் மாணவர்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது.
இலவச தடுப்பூசி முகாம்
ஏப்ரல், மே மாதங்களில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழக அரசு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலம் சுமார் 600 பேர் பயன்பெற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தனித் தேர்வர்களுக்கும் தேர்வு கூடாது’ 1,152 சிபிஎஸ்இ மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!
தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தக் கூடாது என 1,152 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கொரோனா 2வது அலையை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், தனித்தேர்வர்களும், கடந்த ஆண்டு குறைந்த மதிப்பெண் பெற்ற கம்பார்ட்மென்ட் பிரிவில் உள்ள மாணவர்களும் கட்டாயம் நேரில் தேர்வு எழுத வேண்டுமென சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கு இந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், எந்த பள்ளியிலும் பதிவு செய்யாமல் தனியாக சிபிஎஸ்இ தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மென்ட் மாணவர்கள் 1,152 பேர் சார்பில் வக்கீல் அபிஷேக் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ‘தற்போதைய கொரோனா சூழலில் எப்போது நேரடி தேர்வு நடத்தப்படும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. நாங்கள் தேர்வு எழுதாமல் எந்த பல்கலைக் கழகத்திலும், கல்லூரியிலும் சேர முடியாது. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் கீழ் எங்களின் படிக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். எனவே, எங்களையும் பள்ளி மாணவர்களாக கணக்கில் கொண்டு, நேரடி தேர்வை ரத்து செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்க குறிப்பிட்ட நடைமுறையை கொண்டு வர அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் - முதுநிலை துணை கணக்காயர் தகவல்
2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்
முதுநிலை துணை கணக்காயர் தகவல்
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) என்.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபு ரியும் ஊழியர்களின் பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி 2020-21-ம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae. tn.nic.in) பதிவேற்றப்பட்டு உள்ளது. பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2020-21-ம் வருடாந்திர கணக்கு அறிக்கையை பத விறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அலுவலக வலைத்தளத் தில் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் மூன்றே நாட்களில் இருக்கைகளைத் தாண்டி 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 3 நாட்களில் இருக்கைகளை தாண்டி 2 மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அரசிடம் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை கேட்டுப் பெற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும்நிலையில், அரசு உத்தரவுப்படி ஜூன் 14 முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளன.
தனியார் பள்ளி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வரும் இக்காலக்கட்டத்தில் ஆச்சரியப்படுத்தும் விதமாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது 6 ஆசிரியர்களும் 218 மாணவர்களும் இருந்தனர். அதே ஆண்டு புதிதாக தலைமைஆசிரியராக பொறுப்பேற்ற ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் 2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.
தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது. கடந்த ஆண்டே 1,490 மாணவர்கள் படித்தனர். 45 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் சேர்க்கை ஜூன் 14-ம் தேதி தொடங்கியது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு மூன்று நாட்களில் 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பலர் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். ஆனால் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்த்து கொள்ள பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ. பீட்டர்ராஜா கூறுகையில், ‘‘ ஆசிரியர்கள், கட்டிட வசதி அடிப்படையில் 6-ம் வகுப்பில் 200 மாணவர்களே சேர்க்க முடியும். இருந்தாலும் இந்தாண்டு அரசு பள்ளிக்கு வருவோர் அனைவரையும் சேர்த்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் விண்ணப்பிக்கும் அனைவரையும் சேர்க்க உள்ளோம். தற்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் பெரிதாக சிரமம் இருக்காது. பள்ளி திறப்புக்குள் கூடுதல் வகுப்பறைகள், ஆசிரியர்களை அரசிடம் கேட்டு பெறவேம்,’’ என்று கூறினார்.
நாட்டிலேயே பச்சை பூஞ்சை நோயால் முதல் நபர் பாதிப்பு – ஷாக் ரிப்போர்ட்!
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு நாட்டிலேயே முதன்முறையாக புதிதாக பச்சை பூஞ்சை நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் விதமாக உள்ளது.
பச்சை பூஞ்சை:
கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு பரவ தொடங்கியது. தொடர்ந்து 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நுழைந்து அனைத்து பகுதிகளிலும் பரவியது. கொரோனா என்ற புதிய வகை வைரஸ் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வந்தது. இதனால் 2020 ம் ஆண்டு இறுதியில் சற்று நோயின் தாக்கம் குறைந்தது. இரண்டு மாத இடைவெளியில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டில் பாதிக்க தொடங்கியது. தற்போது கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் பதிப்புகளில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், கண்டிப்பாக கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கும் நிலையில், புதிதாக கருப்பு பூஞ்சை என்ற தொற்று நாட்டின் பல பகுதியிலும் பரவ தொடங்கியது. கொரோனா பாதித்தவர்களையே இந்த தொற்று பாதிக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் வீரியம் மிகுந்த ஸ்டீராய்டு ரக மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின்னர் வெள்ளை பூஞ்சை நோய் வடமாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை அதிக ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், மஞ்சள் பூஞ்சை நோய் பாதிக்க தொடங்கியது. வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சை ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பூஞ்சை நோய்களை பற்றியே இன்னும் முழுவதுமாக தெரியாத நிலையில், தற்போது நாட்டிலேயே புதிதாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 34 வயது நபர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்த நிலையில், வீட்டிற்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் விடாத காய்ச்சலும், மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர்க்கு புதிதாக பச்சை பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பிலேயே அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் அதிக பாதிக்கப்ட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக மும்பை நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வாட்ஸ் அப் (Whats App) பயனர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு – DP பார்ப்பவர்களை கண்டறிய புதிய வழிமுறை!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் செயலியில், தற்போது பயனர்கள் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்:
தகவல் பரிமாற்றுதலுக்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். இந்த செயலி அனைத்து தரப்பு பயனர்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு பல முக்கிய வழிமுறைகள் குறித்த தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. அவை அனைத்தும் பயனர்களுக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.
தற்போது அந்த வகையில் புதிய வழிமுறை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கின் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய தற்போது ஓர் புதிய வழிமுறை வெளியாகியுள்ளது. இது வாட்ஸ் அப் செயலி பயனர்களை சற்று வியக்க வைத்துள்ளது. இதனை கண்டறிவது மிக எளிது. தற்போது அதனை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. எளிய வழிமுறைகள்:
வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது மொபைலில் Whats Tracker என்னும் செயலியை பதிவு செய்ய வேண்டும்
பின்பு இந்த செயலிக்குள் நுழைந்து தங்களது போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.
பின்பு இந்த செயலி யாரெல்லாம் பயனர்களின் வாட்ஸ் அப் டிபியை பார்க்கிறார்கள் என்னும் தகவலை சேகரிக்கும்.
இதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் பயனர்களின் வாட்ஸ் அப் டிபியை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் அவர்களுடன் பெயருடன் மொபைல் நம்பரை தெரியப்படுத்தும்.
தமிழகத்தில் ஜூன் 21க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள்? – வெளியான தகவல்கள்!
தமிழகத்தில் ஜூன் 21ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மேலும் சில தளர்வுகள் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் பாதிக்க தொடங்கிய காரணத்தால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் அரசு சில தளர்வுகளை அளித்த போது, மக்களின் அலட்சியத்தினால் தொற்று பரவல் அதிகமாக தொடங்கியது. இதனால் மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தீவிர ஊரடங்கு தளர்வில்லாமல் அமலில் இருந்தது.
அதன்பின்னர், தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. தற்போது கொரோனா நோய் பரவல் விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஜூன் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன்பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படுவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருகிறார். ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும், ஒரு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் பரவல் விகிதம் குறைந்து வரும் நிலையிலும், சில காலத்திற்கு மக்களின் நலனிற்காக சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜூன் 21ம் தேதிக்கு பிறகு அளிக்கப்பட உள்ள தளர்வுகள் பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு பொருந்தாது. அரசு அளிக்கப்பட உள்ள தளர்வுகளை பற்றி அரசு தரப்பு அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தளர்வுகள்:
கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு, அதற்கான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் திறக்க அனுமதி அழைக்கப்படலாம்.
நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்க படும் என்றும் ஆனால் பெரிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்கிறார்கள். கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகின்றது. மத்திய அரசு இன்று முதல் நாட்டின் தொல்லியல் புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போதைக்கு சுற்றுலா தளங்கள் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
GPF-பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!
பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / கட்டாயமாக ஓய்வு பெற்ற GPF சந்தாதாரர்களின் அனுமதியை தடைசெய்தல் - பொது வருங்கால வைப்பு நிதி T.N. விதிகளின் விதி 28 (1) திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
General Provident Fund – Debarring the sanction of General Provident Fund Subscribers who had been Dismissed / Removed / Compulsorily Retired / Invalidation from service – Amendment to Rule 28 (1) of the General Provident Fund (TN) Rules – Orders – Issued.
G.O.Ms.No.142, Dated 15th June 2021. IN pdf
இன்றைய ( 16.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் ( 16.06.2021 ) இன்று 10,448 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 1,14,335
சென்னையில் இன்று ஒரே நாளில் 689 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 649
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 1,420
ஈரோடு - 1,123
திருப்பூர் - 608
மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.06.2021 )
IMG_20210616_194855
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 21,058
இன்றைய உயிரிழப்பு : 270 ( 30,071 )
சென்னை மட்டும் - 21
இணைநோய் இல்லாதவர் - 42
பதிவுத் துறை தொடர்பான குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் இனி வாட்சப் மூலமும் அளிக்க தமிழக அரசு சிறப்பு எற்பாடு
பதிவுத்துறை செய்திக் குறிப்பு
நாள் : 16.06.2021
IMG-20210616-WA0016
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்க பதிவுத்துறையில் , பொதுமக்களிடமிருந்து புகார்களை உடனுக்குடன் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு , கட்டுப்பாட்டு அறை இன்று முதல் பதிவுத்துறைத்தலைவர் அலுவலகத்தில் துவங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
16.06.2021 இக்கட்டுப்பாட்டு அறையில் வாயிலாக புகார்களை பெற ஏதுவாக பொதுமக்களிடமிருந்து தொலைபேசி
9498452110
9498452120 வை செய்திகள்
9498452130
What's up Console gesyor ஆகிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் rende igrregpetitioncell_2021 @ tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தங்களது புகார்களை அனுப்பி வைக்கலாம். பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்தி தங்களது பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
Process of Filing ITR-1 under New Income Tax e-Filing Portal 2.0
Process of Filing ITR-1 under New Income Tax e-Filing Portal 2.0
CLICK HERE TO DOWNLOAD - ITR -1 - FILING
கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது? தெரிந்துகொள்வோம்!
இறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
2 கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா?
ஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
3 கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது?
தற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
4 இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா? உதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.
5 இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா?
இல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.
6 கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்? இறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
7 கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம்.
இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.
கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.
வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.
இறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.
8 கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.
9 கருணை அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது?
காலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
10 காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும்?
காலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.
11 என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா? அரசு ஊழியர் மறைந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.
12 என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா?
தட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.
13 கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா? உரிமையுடன் கோரலாமா?
கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03.08.1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.
14 கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள், தற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.
15 திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா?
திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.
16 மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்வு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
கருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).
அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.
மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.
இன்றைய ( 14.06.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் ( 14.06.2021 ) இன்று 12,772 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 1,36,884
சென்னையில் இன்று ஒரே நாளில் 828 பேருக்கு கொரோனா தொற்று.
12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 649
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 1,728
ஈரோடு - 1,295
திருப்பூர் - 781
மாவட்ட வாரியான பாதிப்பு.( 14.06.2021 )
IMG-20210614-WA0017
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 25,561
இன்றைய உயிரிழப்பு : 254 ( 29,801 )
சென்னை மட்டும் - 28
இணைநோய் இல்லாதவர் - 57