அனைத்து மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசிக்காக ரூ.1,000 சாஸ்த்ரா பல்கலை. வழங்குகிறது - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 21, 2021

அனைத்து மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசிக்காக ரூ.1,000 சாஸ்த்ரா பல்கலை. வழங்குகிறது





தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயிலும் அனைத்துமாணவர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக அவர்களுக்கு தலா ரூ.1,000வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:



தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தனது மாணவர்கள் 2021-22 கல்வியாண்டில் வளாகத்துக்கு வர ஏதுவாக, அவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தலா ரூ.1,000 வழங்க உள்ளது.

இத்திட்டம் அவர்கள் தடுப்பூசிக்கான செலவை ஈடுகட்ட உதவும். இதன்மூலம் நாடு முழுவதும்உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

அரசு உத்தரவு வந்தவுடன் வகுப்புகள் தொடங்கப்படும்போது, அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்புடன் வர இயலும்.

சமீபத்தில் மாணவர்கள் இணையவழி தேர்வு எழுத உதவும் வகையில், இணைய வழி இணைப்பு செலவுக்காக சுமார் 12 ஆயிரம் மாணவர்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது.

இலவச தடுப்பூசி முகாம்

ஏப்ரல், மே மாதங்களில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இலவச தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழக அரசு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த முகாம்கள் மூலம் சுமார் 600 பேர் பயன்பெற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post Top Ad