கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . மேலும் , தற்போது 07.06.21 - ம் தேதி முடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை இணையவழியாக 03.06.2021 அன்று தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் அறிக்கையினை இவ்இயக்ககத்திற்கு அனுப்பிடத் தக்க வகையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தலைமையாசிரியர்கள் மூலமாக அவர்களது பள்ளிகளைச்சார்ந்த மாணவர்கள் , பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் விவரத்தை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.