மத்திய அரசு ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவர்களை சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் கரோனா தொற் றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியர்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசு ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீட்டில் தனிமைப்படுத் திக் கொண்டும் இருந்தால் அவர்களுக்கு முழு ஊதியத்துடன் 20 நாள்கள் விடுப்பு அளிக்கப்படும். அவர்கள் 20 நாள்களுக்குப் பிற கும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தால் அதற்கான ஆதாரத் தைக் காண்பிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு முழு ஊதி யத்துடன் விடுப்பு அளிப்பது தொடரும். ஊழியர்களின் பெற்றோர் அல்லது அவர்களை சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அந்த ஊழியர்களுக்கு 15 நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக் கப்படும். 15 நாள்களுக்குப் பிறகும் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டி ருந்தால் அவர்கள் வீடு திரும்பும் வரை ஊழியர்கள் விடுப்பில் இருக் கலாம்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர் பில் இருந்தது தெரியவந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட ஊழியர்கள் 7 நாள்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிவோராக கரு தப்படுவர். ஊழியர்கள் கரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி யில் வசிப்பவர்களாக இருந்தால், அந்தப் பகுதி நோய்க் கட்டுப்பாட் டுப் பகுதி அல்ல என அறிவிக்கப்படும் வரை அவர்களும் வீட்டில் இருந்து பணிபுரிவதாக கருதப்படும். இந்த உத்தரவு கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி முதல் முன்தே தியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.