இன்று உள்ள இக்கட்டான காலகட்டத்தில் நம் மாணவர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளான பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கு பள்ளிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் பெருமளவில் உதவி வருகின்றன. இதனையும் கவனத்தில் கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து, எமது சங்கத்தின் ஆலோசனைகளை பின்வருமாறு தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்ச்சி மட்டும் போதும் என விரும்பும் மாணாக்கர்களுக்கு, தேர்விலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம். பிற்காலத்தில் அம்மாணக்கர்கள் விருப்பினால் மதிப்பெண் உயர்ந்தும் தேர்வும் எழுத வாய்ப்பு தரலாம்.
தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் சுகாதாரத்துறையின் அனுமதியோடு உகந்த சூழ்நிலை ஏற்படும்
காலத்தில் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்தலாம்.
மொழிப்பாடங்களை தவிர்த்து மீதம் உள்ள நான்கு பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தலாம். மொழிப்பாடங்களுக்கு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வின் மதிப்பெண்கன் அளிக்களாம் அல்லது 11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அளிக்கலாம் அல்லது நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண்களை வழங்கலாம் தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் என குறைந்து ஒவ்வொரு பாடத்திற்கும் 5 அல்லது 10 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு 80% விளாக்கள் அதிலிருந்தும் 20% வினாக்கள் பாட இறுதி வினாக்களில் இருந்தோ அல்லது பயிற்சிகளில் இருந்தோ கேட்கலாம். விளாத்தாள் நெகிழ்வந்தன்மை உடையதாக இருக்க வேண்டும். * மாணவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொள்ளவும் அணிகள் பயிலும் பள்ளியே தேர்வு மையாக செயல்படவும் அனுமதிக்கவேண்டும் மாணவர்கள் விரும்புப்பட்சத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளின் தேர்வு எழுத அனுமதிக்கலாம். என எமது தேசிய ஆசிரியர் சங்கம், தெரிவித்துக்கொள்கிறது.