தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வினை நடத்தபட்ட கருத்து கணிப்பில் 60 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் 12 வகுப்பு தேர்வு ண்டும் ஒத்திவைக்கப்படுமா..? என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் , இன்றும் நாளையும் கருத்து கேட்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் +2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பில் கல்வியாளர்கள் பெற்றோர்கள் 60 % பேர் தேர்வை நடத்த வேண்டும் என தெரிவித்ததாக பள்ளி கல்விதுறை தெரிவித்துள்ளது.
கருத்து கேட்பு நிறைவடைந்ததும் அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை மாலை வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.