2020-21-ம் ஆண்டுக்கான அரசு ஊழியர்களின் சேம நல நிதி கணக்கு அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்
முதுநிலை துணை கணக்காயர் தகவல்
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையின் முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) என்.தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபு ரியும் ஊழியர்களின் பொது சேம நல நிதி, ஆசிரியர் சேம நல நிதி 2020-21-ம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைதளத்தில் (www.agae. tn.nic.in) பதிவேற்றப்பட்டு உள்ளது. பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2020-21-ம் வருடாந்திர கணக்கு அறிக்கையை பத விறக்கம் செய்துகொள்ளலாம். இந்த அலுவலக வலைத்தளத் தில் தங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த பதிவேற்றம் குறித்த எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.