கோயம்புத்தூர் மாநகராட்சி பத்திரிக்கை செய்தி
செ.வெ.எண் :219
நாள்:14.06.2021
கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 5 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்ப்பதற்காகவும், கொரோனா தடுப்பு குறித்து கட்டுப்பாட்டு அறையில் புகார் அளிக்கவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனை பெறவும், நடமாடும் காய்கறி வாகனங்களில் காய்கறிகள் வரத்து, அதிக விலைக்கு விற்பனை செய்தால் புகார் தெரிவிக்கவும் பொதுமக்கள் தங்களது குறைகளை தீர்க்கவும் மாநகராட்சியால் தெரிவிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட தொலைபேசி எண்கள், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.