தமிழகத்தில் ஜூன் 21ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மேலும் சில தளர்வுகள் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அளவில் பாதிக்க தொடங்கிய காரணத்தால் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் அரசு சில தளர்வுகளை அளித்த போது, மக்களின் அலட்சியத்தினால் தொற்று பரவல் அதிகமாக தொடங்கியது. இதனால் மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தீவிர ஊரடங்கு தளர்வில்லாமல் அமலில் இருந்தது.
அதன்பின்னர், தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. தற்போது கொரோனா நோய் பரவல் விகிதம் தமிழகத்தில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஜூன் 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன்பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படுவது குறித்து முதல்வர் ஆலோசித்து வருகிறார். ஊரடங்கு நீடிக்கப்பட்டாலும், ஒரு சில தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் பரவல் விகிதம் குறைந்து வரும் நிலையிலும், சில காலத்திற்கு மக்களின் நலனிற்காக சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜூன் 21ம் தேதிக்கு பிறகு அளிக்கப்பட உள்ள தளர்வுகள் பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களுக்கு பொருந்தாது. அரசு அளிக்கப்பட உள்ள தளர்வுகளை பற்றி அரசு தரப்பு அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தளர்வுகள்:
கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறுவதற்கு, அதற்கான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் அலுவலகங்கள் திறக்க அனுமதி அழைக்கப்படலாம்.
நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்க படும் என்றும் ஆனால் பெரிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்கிறார்கள். கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகின்றது. மத்திய அரசு இன்று முதல் நாட்டின் தொல்லியல் புராதன சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தற்போதைக்கு சுற்றுலா தளங்கள் அனுமதிக்கப்படாது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.