தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று (7.6.2021) முதல் அமல்!! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Monday, June 7, 2021

தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று (7.6.2021) முதல் அமல்!!



தமிழகத்தில்கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாகமுழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன்14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில்புதிய வசதியை தமிழக அரசு


அறிமுகம் செய்துள்ளது.

இ-பதிவு புதிய வசதி:



தமிழகத்தில்கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாகதற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரகூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள்அனைத்தும் ஜூன் 7 வரை அமல்படுத்தப்படஉள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில்இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் சில தளர்வுகளை அறிவித்துஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும்நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாகவாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோஓட்டுனர்கள் இ-பதிவு செய்துபயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்காகஇ-பதிவு இணையதளத்தில்புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன்மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம்செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிநபர், குழு என மாவட்டங்களுக்குஇடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாகசெல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்புஇன்றிலிந்து இ-பதிவு இணையதளத்தில்தொடங்கப்பட்டுள்ளது.




Post Top Ad