தருமபுரி ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்டிருந்த கார்த்திகா, உயர் கல்வித்துறை இணைச் செயலராக நியமனம் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 1, 2021

தருமபுரி ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்டிருந்த கார்த்திகா, உயர் கல்வித்துறை இணைச் செயலராக நியமனம்


தமிழகத்தில் கடந்த வாரம் தமிழக அரசால் மாற்றப்பட்டு, காத்திருப்பில் இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணியிடம் வழங்கி தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். உயர் கல்வித்துறைக்குக் கூடுதலாக இணைச் செயலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பணியிட மாற்றமும் ஐஏஎஸ் அதிகாரிகள் முன்பு வகித்த பதவிகளும் வருமாறு:
1. நிலச் சீர்திருத்தத் துறை ஆணையர் ஜக்மோகன் சிங் ராஜு மாற்றப்பட்டு, டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-1 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட ஆணையர் மதுமதி மாற்றப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் மாற்றப்பட்டு, மீன்வளத் துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 4. சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்து மாற்றப்பட்டிருந்த ராமன், தற்போது தோட்டக்கலைத்துறை மற்றும் தேயிலைத் தோட்டத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்து மாற்றப்பட்டிருந்த சந்திரசேகர் சகாமுரி மாற்றப்பட்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்து மாற்றப்பட்டிருந்த அன்பழகன், சர்க்கரை ஆலை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சமக்ர சிக்‌ஷா கூடுதல் மாநில திட்ட இயக்குநர் பதவி வகித்து மாற்றப்பட்டிருந்த அமிர்த ஜோதி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 8. தருமபுரி ஆட்சியராகப் பதவி வகித்து மாற்றப்பட்டிருந்த கார்த்திகா, உயர் கல்வித்துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சக இணைச் செயலாளராக மத்திய அரசுப் பொறுப்பில் இருக்கும் ஆஷிஸ் சட்டர்ஜி, டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. கடல் வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவராக இருக்கும் கிறிஸ்துராஜ் பொது மற்றும் மறுவாழ்வு மையத் துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் தலைவராக இருந்து மாற்றப்பட்ட சந்திரகாந்த் பி காம்ப்ளே, புதிய திருப்பூர் நகர வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 12. தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து மாற்றப்பட்டிருந்த சுதாதேவி தமிழ்நாடு நீர்நிலை மேலாண்மைத் துறை நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad