தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ் தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, June 2, 2021

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ் தேர்வு மட்டும் ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை- கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு


💢 தேசியத் தகுதிமற்றும் நுழைவுத் தேர்வுகளை ரத்துச் செய்யாமல், பிளஸ்தேர்வு மட்டும் ரத்து என்றமத்திய அரசின் அறிவிப்பு மாணவர்களுக்குஎந்த நன்மையும் விளைவிக்கப் போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறுசிக்கல்களை ஏற்படுத்தும் என பிரின்ஸ் கஜேந்திரபாபுஅறிக்கை விடுத்துள்ளார் .
12th class board exam: ‛பிளஸ்2 தேர்வு கட்டாயம் வேண்டும்’ -கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

மாதிரிப்படம்- தேர்வு எழுதும் மாணவர்கள்

💢கொரோனா தொற்றுகட்டுப்பாட்டிற்கு வந்த பின், எழுத்துப்பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒருமாத முன் அறிவிப்போடு நடத்தவேண்டும் என பொதுப் பள்ளிக்கானமாநில மேடை தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்துள்ளது.

💢கொரோனா பரவல்காரணமாக இந்தாண்டு சிபிஎஸ்இ 12ஆம் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மத்திய அரசு நேற்றுஅறிவித்தது. இந்நிலையில், மாநில கல்வித்திட்ட 12ஆம்வகுப்பு தேர்வு குறித்துதல்வர்மு.க.ஸ்டாலின் இன்றுஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்ச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர்.

💢இந்நிலையில், எழுத்துப்பூர்வமான +2 பொதுத் தேர்வை ஒருமாத முன் அறிவிப்போடு நடத்தவேண்டும் என பொதுப் பள்ளிக்கானமாநில மேடை


கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.💢அதில், தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளைரத்துச் செய்யாமல், +2 தேர்வு மட்டும் ரத்துஎன்ற மத்திய அரசின் அறிவிப்புமாணவர்களுக்கு எந்த நன்மையும் விளைவிக்கப்போவதில்லை. உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் பல்வேறுசிக்கல்களை ஏற்படுத்தும்.

💢எனவே, தமிழ்நாடு அரசு, மாநில மக்களின்நலனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் எதிர்காலம்பாதிக்கப்படாமல், நோய்த் தொற்று கட்டுப்பாட்டிற்குவந்த பிறகு எழுத்துப் பூர்வமான+2 பொதுத் தேர்வை ஒரு மாதமுன் அறிவிப்போடு நடத்த வேண்டும்.

💢மாணவர்கள் இருக்கும்பகுதிக்கு அருகிலேயே தேர்வு எழுத வாய்ப்புகளைஉருவாக்கலாம். ஆசிரியர்களும் இருக்கும் பகுதியிலேயே தேர்வு பணிகளை மேற்கொள்ளலாம். தமிழ் நாடு அரசு உருவாக்கியுள்ளவலுவான பள்ளிக் கல்வி கட்டமைப்பைசரியாக பயன்படுத்தி பாதுகாப்பாக தேர்வை நடத்த இயலும்.

12th class board exam: ‛பிளஸ்2 தேர்வு கட்டாயம் வேண்டும்’ - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

💢மாணவர்கள் குழப்பம்அடையாமல் தங்களின் பயிற்சிகளை தொடரும் வகையில், தேதியைபின்னர் அறிவித்தாலும், தேர்வு நடக்கும் என்றஉறுதியான அறிவிப்பை தமிழ் நாடு அரசுஉடனடியாக வெளியிட வேண்டும் என்றுபொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசைக் கோருகிறது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

💢பிளஸ் 2 பொதுத்தேர்வுகுறித்து நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் உடன் முதல்வர்ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பின் அமைச்சர், சிபிஎஸ்இதேர்வை பொறுத்தே தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வுநடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனக்கூறினார். சிபிஎஸ்இ தேர்வு குறித்து அறிவிப்புவெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு குறித்துஅறிவிக்க வேண்டியுள்ளது. இதனால் இன்றைய ஆலோசனைக்குபின் அது தொடர்பான அறிவிப்பவெளியாகலாம். பெரும்பாலும், அது மத்திய அரசின்முடிவை ஒட்டிய முடிவாகவே இருக்கும்என எதிர்பார்க்கப்படுகிறது.



Post Top Ad