மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு நாட்டிலேயே முதன்முறையாக புதிதாக பச்சை பூஞ்சை நோய் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கும் அளிக்கும் விதமாக உள்ளது.
பச்சை பூஞ்சை:
கடந்த 2019 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு பரவ தொடங்கியது. தொடர்ந்து 2020 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நுழைந்து அனைத்து பகுதிகளிலும் பரவியது. கொரோனா என்ற புதிய வகை வைரஸ் நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வந்தது. இதனால் 2020 ம் ஆண்டு இறுதியில் சற்று நோயின் தாக்கம் குறைந்தது. இரண்டு மாத இடைவெளியில் கொரோனாவின் இரண்டாம் அலை நாட்டில் பாதிக்க தொடங்கியது. தற்போது கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் பதிப்புகளில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், கண்டிப்பாக கொரோனாவின் மூன்றாவது அலை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கும் நிலையில், புதிதாக கருப்பு பூஞ்சை என்ற தொற்று நாட்டின் பல பகுதியிலும் பரவ தொடங்கியது. கொரோனா பாதித்தவர்களையே இந்த தொற்று பாதிக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் வீரியம் மிகுந்த ஸ்டீராய்டு ரக மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்பின்னர் வெள்ளை பூஞ்சை நோய் வடமாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. கருப்பு பூஞ்சையை விட வெள்ளை பூஞ்சை அதிக ஆபத்தானது என்று அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர், மஞ்சள் பூஞ்சை நோய் பாதிக்க தொடங்கியது. வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சை ஆபத்தானதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பூஞ்சை நோய்களை பற்றியே இன்னும் முழுவதுமாக தெரியாத நிலையில், தற்போது நாட்டிலேயே புதிதாக ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 34 வயது நபர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து குணமடைந்த நிலையில், வீட்டிற்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் விடாத காய்ச்சலும், மூக்கில் இருந்து ரத்தமும் வந்துள்ளது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர்க்கு புதிதாக பச்சை பூஞ்சை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பிலேயே அவரது நுரையீரல் 90% பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் அதிக பாதிக்கப்ட்டுள்ளார். அவசர சிகிச்சைக்காக மும்பை நகருக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.