புதிய தளர்வுகள் என்னென்ன? - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Saturday, June 5, 2021

புதிய தளர்வுகள் என்னென்ன?


தமிழகத்தில் ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பழங்கள், பூக்கடைகளும் செயல்பட அனுமதி.

இறைச்சிக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் நாளொன்றுக்கு 50 டோக்கன் மட்டுமே வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு (HouseKeeping) உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதி.

எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், தச்சர், கணினி பழுது நீக்குவோர் உள்ளிட்ட சுய தொழில் புரிவோருக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகன உதிரிபாக விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

வாகன விநியோகிப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.

வாடகை வாகனங்கள், டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் இ.பதிவுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

வாடகை டாக்சிகளில் ஓட்டுநர் தவிர 3 பேர் பயணிக்க மட்டுமே அனுமதி.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad