மதிய உணவில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு’’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

’’

வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகள் 3,197 பேருக்கு விலையில்லா புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், ‘’தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வுசெய்து வருகிறேன். இந்த அறிக்கையினை வரும் ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்பிக்க உள்ளேன். ஆய்வறிக்கையில் வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்கும் வகையில் மாணவர்களின் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது, ஆதிதிராவிட பள்ளி மற்றும் அரசுப்பள்ளிகளில் மாணவ சேர்க்கையினை உயர்த்துவது, இப்பள்ளிகளின் கட்டடங்களின் தரம், கிராமப்புற பள்ளிகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தேவையான குடிநீரை பள்ளி வளாக பைப்புகளிலிருந்து ஓரிரு மாணவ, மாணவிகள் எடுத்து செல்வதனை தவிர்க்கவும், அதற்கான பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்டவைகளும் இடம்பெறும்” எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டாட்சியர் முருகேசன், தலைமையாசிரியர் அன்புசெல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive