அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு ! - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Thursday, June 3, 2021

அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு !


அனைத்து தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு....

 நமது மதிப்பு மிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவுபடியும் பெருமை மிகு முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைபடியும் 2020- 2021 கல்வி ஆண்டிற்கான (1-8 வகுப்புகள்) மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிட ஏதுவாக அனைத்து பதிவேடுகளையும் தயாராக வைக்க வேண்டும்

மதிப்பெண் நோட்டில் வகுப்பு வாரியாக மாணவர்பெயர் எழுத வேண்டும்

💐முதல் பருவம் 💐இரண்டாம் பருவம் 💐மூன்றாம் பருவம் 💐குறிப்பு என பிரித்து கொள்ள வேண்டும்.

 ஒவ்வொரு மாணவனுக்கும் நேரே குறிப்பில் தேர்ச்சி என்று எழுத வேண்டும் 
 
தேர்வு சுருக்கம்* 
வ.எண்
வகுப்பு
பதிவு
தேர்ச்சி
தேர்ச்சி விழுக்காடு என வகுப்பு வாரியாக அட்டவணை படுத்த வேண்டும். 

தேர்வு சுருக்கத்திற்கு கீழே அந்தந்த
வகுப்பு ஆசிரியர் கையொப்பம் இட வேண்டும்.

தலைமையாசிரியர் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு சுருக்கம் எழுதவேண்டும். 

தேர்ச்சி விதிகள்* 

1.அரசாணை நிலை (எண்) 48 பள்ளிக்கல்வித் (அ.தே) துறை நாள் : 25.02.2021.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009.

தமிழ்நாடு தொடக்கக் 
கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 6 ந.க.எண்: 004010/ஜெ1/2020 நாள் : 31.05.2021.

🌹குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு–16 ன் படி அனைத்து மாணவர்
களுக்கும் 
(1-8 வகுப்புகள்) தேர்ச்சி அளிக்கப்படு
கிறது என தேர்ச்சி விதிகள் எழுதி தலைமையாசிரியர் மற்றும் தேர்வு குழுவினர் கையொப்பம் இட வேண்டும்.
 
✏️மாணவர் வருகைப் பதிவேட்டில் அனைத்து வகுப்புகளுக்கும் *மே மாதம் மாணவர் பெயர் எழுதி பெயருக்கு நேரே தேர்ச்சி என குறிப்பிட வேண்டும்* 

✏️ இறுதியாக
வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு பதிவேடுகளை
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Post Top Ad