அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்வெளியிடப்பட்டுள்ளன.
பொறியியல்படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகள், பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில்
தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாகபுகார் எழுந்ததால், மறுத்தேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில்மறுத்தேர்வு மற்றும் ஏப்ரல் / மேமாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வதுசெமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுநெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
* தேர்வுகள்பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பு நடைபெற்றதை போல3 மணி நேரம் ஆஃப்லைன் முறையில், பேனா மற்றும் காகித முறையில்நடைபெறும்.
* வீட்டிலிருந்தேதேர்வு எழுத மாணவர்கள் தயாராகஇருக்க வேண்டும்.
* முன்னதாகமாணவர்கள் தேர்வுத் தாளைப் பதிவிறக்கம் செய்ய, கணினி / மடிக்கணினி / மொபைல்போன் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணையவசதியுடன் வைத்திருக்க வேண்டும்.
* மாணவர்கள்தேர்வு எழுதத் தேவையான பேனா, பென்சில், அழிப்பான், ஏ4 தாள்கள் உள்ளிட்டதேவையான அனைத்து உபகரணங்களையும் தயாராகவைத்திருக்க வேண்டும்.
* ஹால்டிக்கெட்டை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் அந்தந்த தேர்வுக் கட்டுப்பாட்டுஅலுவலகம் மூலம் மாணவர்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.
* தேர்வுதொடங்குவதற்கு அரை மணி நேரம்முன்னதாகக் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாகமின்னஞ்சல் / கூகுள் கிளாஸ்ரூம்ஸ் / மைக்ரோசாப்ட்டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.
* தேர்வுகாலை, பிற்பகல் என 2 பிரிவுகளாக 3 மணிநேரம் நடத்தப்படும். காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை5.30 மணி வரை தேர்வுகள் இருக்கும்.
* வினாத்தாளைப்பெறுவதற்கு 9 முதல் 9.30 வரையிலும், தேர்வுகளை எழுத 9.30 முதல் 12.30 வரையிலும் விடைத்தாளை ஸ்கேன் செய்து பதிவேற்றம்
செய்ய 12.30 முதல் 1.30 வரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோலபிற்பகல் வேளையில் 2 முதல் 2.30 வரை வினாத்தாளைப் பெறவும்2.30 முதல் 5 மணி வரை தேர்வுஎழுதவும் 5.30 முதல் 6 மணி வரைவிடைத்தாள்களை ஸ்கேன் செய்து அனுப்பவும்நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* வினாத்தாளைப்பதிவிறக்கம் செய்து, தனி வெள்ளைத்தாளில் நீலம் மற்றும் கருப்புநிற மையால் மட்டுமே தேர்வுஎழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. ஒருவேளை பக்கம் எழுதப்படாமல்இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.
* ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வெழுதவேண்டும்.
* தேர்வுஎழுதி முடித்தவுடன் விடைத்தாளை ஸ்கேன் செய்து பிடிஎஃப்வெர்ஷனாக அனுப்பி வைக்க வேண்டும்.
* தேர்வுமுடிந்த ஒரு மணி நேரத்திற்குள்விடைத்தாளை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் விடைத்தாள் நிராகரிக்கப்படும்.
* விடைத்தாளைஎடுத்து நூலில் கட்டி, விரைவுத்தபால், பதிவுத் தபால் அல்லதுகொரியர் மூலம் அந்தந்தக் கல்விநிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமேஅனுப்ப வேண்டும்.
* நேரடியாகக்கல்வி நிறுவனத்திற்குச் சென்று விடைத்தாளைத் தரக்கூடாது.
* ஒவ்வொருதாளின் மேல்புறத்திலும் மாணவரின் பெயர், பாடக் குறியீட்டுஎண், தேர்வின் பெயர், பதிவு எண்ஆகியவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும்.
* ஒவ்வொருதாளின் கீழ்ப்புறத்திலும் தேர்வு தேதி, பக்கம்எண், மாணவர்களின் கையொப்பம் ஆகியவை இருக்க வேண்டும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அந்தந்தக்கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம்சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.