கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கும் போது தவறாமல் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - CEO Proceedings - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Tuesday, June 8, 2021

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கும் போது தவறாமல் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் - CEO Proceedings



 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக , தேசிய பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டு வருகிறது .05.06.2021 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து வரும் மாவட்டங்களின் வகைப்பாட்டில் அரியலூர் மாவட்டம் இடம் பெற்றுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக , அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் கொரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு குறித்து , 06.06.2021 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் , அரியலூர் மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் நடிவடிக்கையின் ஒரு பகுதியாக , கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு , அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை , சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியில் ஈடுபட அழைப்பு விடுக்கும் போது , தவறாமல் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. 



மேலும் , இவ்வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர் / ஆசிரியரல்லாத பணியாளர்களும் கோவிட் -19 தடுப்பூசியினை தவறாமல் 20.06.2021 க்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் , அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களது பெயர்ப்பட்டியலை , தலைமையாசிரியர்கள் / அலுவலகத் தலைவர்கள் 23.06.2021 க்குள் தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 



இந்நேர்வில் , அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பணியில் ஈடுபட அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad