பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ்பொய்யா மொழி கரூர் மாவட்டத்தில்அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில்திறன்மிகு வகுப்பறைகள், கழிப்பறைகள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்ட
கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆங்காங்கேநடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளைநேரில் ஆய்வு செய்தார் .
🦚 ஆய்வில், பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.. மேலும், அரசுப் பள்ளிகளில்மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும், கற்பித்தலை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைகளை வழங்கினார் .
🦚 நரிகட்டியூர் ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையின் மகன் ஹர்ஷத்தை, அதேபள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்த்தஆசிரியைக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
🦚 பள்ளி வளாகங்களில்மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தார். கரூரில் உள்ள மாவட்டமைய நூலகத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேவையான வசதிகளைத் தயக்கமின்றி எந்த நேரத்திலும் தன்னிடம்கேட்குமாறு கூறினார்.
🦚 ஆய்வின் போதுகரூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்றஉறுப்பினர்கள், மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரகல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்டஅலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள்மற்றும் பெற்றோர்கள் உடனிருந்தனர்
CLICK HERE TO VIEW PHOTO COLLECTION-PDF.