Work From Home-ல் பணிபுரிபவர்களுக்கான எச்சரிக்கை!


இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உடல் உழைப்பு இல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் ஆன்லைனில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலை இப்போதைக்கு தவிர்க்க முடியாது. ஆன்லைனில் அதிக அளவு வேலை செய்பவர்கள் உணவு முறையில் சிறு மாற்றத்தை கொண்டு வருவது நல்லது.

அதிலும் மாவு சத்து நிறைந்த உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.மேலும் புரதம், காய்கறி, கீரை வகைகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளலாம். எண்ணெய்யில் பொரித்த உணவுவகைகளை அறவே தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகள், பழங்கள் இவற்றில் சாலட் செய்து சாப்பிடலாம்.

பசிக்கவில்லை என்றால் ஒருவேளை சாப்பிடாமல் இருப்பது தவறில்லை. பசித்த பின் மட்டுமே சாப்பிடப் பழக வேண்டும். இதனைக் கடைப்பிடித்து வந்தால் அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை வரும் முன்னே தடுக்கலாம்.

முளைக்கட்டிய தானியங்கள், எளிதில் செரிமானமாகும் உணவு வகைகளை பசித்தபின் சாப்பிட்டாலே உடல் ஆரோக்கியம் மேம்படும்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Blog Archive