மத்திய அரசின் ஆணையத்தில் Clerk பணியிடங்கள்-10th ,ITI, DEGREE, ENGINEERING NOTIFICATION
மத்திய அரசின் ஆணையத்தில் Clerk பணியிடங்கள்-10th ,ITI, DEGREE, ENGINEERING- NOTIFICATION AVAIL
நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கட்டணம் வசூலிக்கலாம் - உயர்நீதிமன்றம்
* கொரோனாவால் வருவாய் இழந்தவர்களிடம் 75%
* 6 தவணைகளில் செலுத்தலாம்
* சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு இல்லாத அரசு ஊழியர்களிடம் 85 சதவீத கட்டணமும், வருவாய் இழந்து தவித்த பெற்றோர்களிடம் 75 சதவீத கட்டணத்தையும் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை முறையே 40, 35 சதவீதம் என்று இரு தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த வழக்குகள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் சேவியர் அருள்ராஜ், சிலம்பண்ணன், இ.விஜய் ஆனந்த், எம்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஆஜராகினர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அரசு வக்கீல் ஆ.செல்வேந்திரன், சிபிஎஸ்இ தரப்பில் நாகராஜன் ஆஜராகினர்.
அப்போது, தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘பள்ளிகள் 85 சதவீத கட்டணத்தை வசூலித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் பள்ளிகளில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். கட்டண சலுகை கோரும் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்றார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடப்பு (2021-22) கல்வியாண்டிலும் 2019-20ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீத கட்டணத்தை வசூலிக்க அனுமதியளித்து ஜூலை 5ம் தேதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழகத்துக்கு பொருந்தாது. தமிழகத்தை பொறுத்தவரை கட்டண நிர்ணய குழு அளித்த பரிந்துரைகளையே அரசு பரிசீலிக்கும். கட்டண நிர்ணய குழுவில் உள்ள காலியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும்’ என்று உறுதியளித்தார். அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணமே பொருந்தும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: கொரோனா ஊரடங்கால் வருமானம் பாதிப்பு அடையாத ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், வணிகம் செய்பவர்களிடம் கடந்த 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் 85 சதவீதத்தை தனியார் சுயநிதி பள்ளிகள் 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும்.
கடைசி தவணையை பெற்றோர்கள் 2022 பிப்ரவரி 1ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஊரடங்கால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடம் 2019-20ம் கல்வி ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை 6 தவணைகளில் வசூலிக்க வேண்டும். இந்த தவணையின் கடைசி தவணை 2022 பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டும். வேலை இழப்பு போன்ற காரணங்களால் கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளிடம் கட்டண சலுகை குறித்து கோரிக்கை வைக்கலாம்.2020-21ம் ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்களிடம் அந்த தொகையை தவணை அடிப்படையில் பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம்.
ஒட்டுமொத்த கட்டணத்தையும் ஏற்கனவே செலுத்தியவர்கள் அந்த கட்டணத்தை திரும்ப கோர முடியாது. கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதை பள்ளி நிர்வாகங்கள் தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரர் பள்ளிகள் மாணவர்களுக்கு கூடுதல் கட்டண சலுகை வழங்குவதற்காக எந்த முறையையும் கையாளலாம்.
பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் கல்வி கட்டணம் தொடர்பாக ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் பெற்றோர்கள் மாவட்ட கல்வி அதிகாரியிடம் மனு கொடுக்கலாம். மாணவர்களை எந்த சூழ்நிலையிலும் 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகளில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. இதை சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு அதே பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் அந்த மாணவர்களுக்கு அரசு பள்ளியிலோ, மாநகராட்சி பள்ளியிலோ, ஊராட்சி பள்ளியிலோ இடம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் 25 சதவீத மாணவர்களுக்கான கட்டணத்தை மாநில அரசு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
சிபிஎஸ்இ பள்ளிகள் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான கட்டணம் வசூல் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட இணைய தளத்தில் 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். கட்டண நிர்ணயத்தில் ஏதாவது பிரச்னை இருந்தால் பள்ளி நிர்வாகங்கள் கட்டண நிர்ணய குழுவை அணுகி தீர்வு பெறலாம். பள்ளியிலிருந்து விலக விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த மாணவர்கள் புதிதாக சேரவுள்ள பள்ளிகள் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் கட்டாயம் என்று கூறாமல் சேர்க்கை வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான கல்வி கட்டண நிர்ணய குழுவில் காலியாக உள்ள பணியாளர் இடங்களை நிரப்பி குழு முழு அளவில் செயல்பட மாநில அரசு 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகள் குறித்து பள்ளிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான புதிய சுற்றறிக்கையை தமிழக அரசு 2 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை
கட்டணத்தை கட்டாத மாணவர்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்பதையோ பள்ளி நிர்வாகங்கள் தடுக்க கூடாது. கட்டணத்தை காரணம் காட்டி அந்த மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றோ, தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர் என்றோ தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 31.07.2021 முதல். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு.
நடைபெறவிருக்கும் ஆகஸ்ட் 2021 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத , 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதி கருதி விண்ணப்பித்த மாணவர்கள் , தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் , தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
EMIS இணையத்தில் புதிய வசதி - Admission Acknowledgement
Emis Students admission reg : Students --> Students admission வாயிலாக மாணவர்களுக்கு New entry create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை எமிஸ் தளத்தில் common pool பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு admission acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு, பெற்றோருக்கு அளிக்க வசதி தரப்பட்டுள்ளது
Emis Students admission reg : Students --> Students admission வாயிலாக மாணவர்களுக்கு New entry create செய்தபின் (அல்லது) மாணவர்களது விபரத்தை EMIS தளத்தில் common pool பகுதியில் இருந்து admit செய்தபின், மேற்கண்டவாறு admission acknowledgement படிவத்தை பதிவிறக்கம் செய்து பெற்றோர் மற்றும் தலைமையாசிரியர் கையொப்பமிட்டு பள்ளியில் பராமரிக்க வசதி தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யின் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
'எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் கல்வி' என்ற குறிக்கோளுடன் 2002-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இந்தப் பல்கலைக்கழகத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்துவருகின்றனர்.
அவர்களுக்கான செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள், ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை https://exam.tnouniv.com/result21/ என்ற இணையதளத்தில் காணலாம். மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விவரங்களும் அதே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: www.tnou.ac.in
மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் தமிழக திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 80-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற்றுள்ளது. இதன்மூலம் நம் நாட்டில் தொலைநிலைக் கல்வியைத் திறம்படச் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாத சம்பளம் முதல் ATM கட்டணம் அதிகரிப்பு வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் அமலாக உள்ளது. அதில் ATM கட்டணங்கள் உயர்வு, மாத சம்பளம், EMI செலுத்துதல், IPPB வங்கி கட்டணங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படவுள்ளது. இதற்கான முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.
சம்பளம், EMI செலுத்துதல் தொடர்பான மாற்றம் என்ஏசிஎச் ஆகஸ்ட் 1, 2021 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி ஜூன் மாதம் அறிவித்தது.
EMI செலுத்துதல், வட்டி, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற ஒன்று முதல் பல கடன் பரிமாற்றங்களுக்கு பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்.பி.சி.ஐ) உதவுகிறது.
இது மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், பரஸ்பர நிதிகளில் முதலீடு மற்றும் காப்பீட்டு பிரீமியம் ஆகியவற்றுக்கான கட்டணங்களைச் செலுத்த உதவுகிறது.
எனவே இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் (ஞாயிற்றுக் கிழமை உட்பட) மாத சம்பளம், EMI செலுத்துதல் போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலும். ATM கட்டண மாற்றம்
ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கியின் மற்றொரு உத்தரவின் படி, ஏடிஎம்களில் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் ₹ 15 முதல் ₹ 17 ஆக உயர்த்தப்பட உள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்தபடி ஆகஸ்ட் 1 முதல் இந்த உயர்வு அமலில் இருக்கும்.
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பரிமாற்றக் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் ₹ 5 முதல் ₹ 6 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஐபிபிபி வங்கி கட்டணங்களில் திருத்தம் இந்த மாத தொடக்கத்தில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (ஐபிபிபி) தனது கட்டண கொள்கைகளை மாற்றி அமைத்து உள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் வீடு தேடி வரும் வங்கி சேவைகளுக்கு கட்டணம் அமலாக உள்ளது.
ஆனால் முன்னராக இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிஐசிஐ வங்கி கட்டண திருத்தம்
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி ஐசிஐசிஐ தனது உள்நாட்டு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பண பரிவர்த்தனைகள், ஏடிஎம் பரிமாற்றம் மற்றும் காசோலை புத்தக கட்டணங்களின் வரம்புகளை திருத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. கட்டணங்கள் திருத்தம் அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.
வங்கியில் வழக்கமான சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நான்கு இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன.
இலவச வரம்புகளுக்கு மேல் உள்ளவர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ₹ 150 கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு – CEO உத்தரவு!
கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு
பள்ளி மாணவிகளுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சீண்டல்கள் தற்போது அதிகரித்து வரும் சூழலில் இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதன் படி ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமித்து விழிப்புணர்வை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும், 10 மாணவிகளுக்கு incharge ஆக நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்படும் போது மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்க நிலை ஆசிரியர்கள் என பாகுபாடு காட்டக்கூடாது. அந்த வகையில் மாணவிகளை பிரிக்கும் போது ஆசிரியைகளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பிரிக்க வேண்டும். ஒரு படிவத்தில் மாணவிகள் மற்றும் அவர்களின் நியமன ஆசிரியர்கள் பெயரை இணைத்து, பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை மேல் மற்றும் கடைசி பக்கத்தின் அடியிலும் பதிவு செய்து அனுப்ப வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களை, கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், 7373003103 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ள பட்டியலை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட படிவத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு
மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது எப்போது இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தான் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்களன்று பிரதமர் மோடி தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இந்த முடிவு தற்போது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த இளங்கலை மாணவர்கள், 2500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த முதுகலை மாணவர்கள் என மொத்தம் 4000 ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் பயனடைவார்கள். அதேபோல 550 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், மற்றும் மேற்படிப்பில் 1000 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் பலன் கிடைக்கும். எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ்., டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு நடப்பு ஆண்டிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும்: மத்திய அரசு
மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய பிரிவில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது எப்போது இந்த இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக தான் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திங்களன்று பிரதமர் மோடி தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இந்த முடிவு தற்போது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த இளங்கலை மாணவர்கள், 2500 ஓ.பி.சி பிரிவை சேர்ந்த முதுகலை மாணவர்கள் என மொத்தம் 4000 ஓ.பி.சி பிரிவு மாணவர்கள் பயனடைவார்கள். அதேபோல 550 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள், மற்றும் மேற்படிப்பில் 1000 பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் பலன் கிடைக்கும். எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ்., டிப்ளமோ, பிடிஎஸ், எம்டிஎஸ் படிப்புகளில் நடப்பு கல்வியாண்டு முதல் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM கார்டில் PIN உருவாக்கம்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலமாக ATM இயந்திரங்களில் செயல்படுத்தப்படும் PIN எண்ணை உருவாக்கும் IVR அழைப்பு சேவைகளை தற்போது எளிதாக்கியுள்ளது.
PIN உருவாக்கம்
கொரோனா நோய் தொற்று காலத்தில் SBI வங்கி, தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல விதமான சேவைகளை ஆன்லைன் வழியே நிறைவேற்றி கொள்ள அனுமதி அளித்துள்ளது. இது தவிர வயது முதிர்ந்தவர்களுக்கான சில சேவைகளை வீடு தேடி சென்று வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ATM பரிமாற்றத்தின் போது பயன்படுத்தப்படும் PIN நம்பரை உருவாக்குவதற்கான IVR அழைப்பு சேவைகளை எளிதாக பெற்றுக்கொள்ளும் புதியதொரு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள விரும்பினால், அதற்கு முதலில் வங்கி கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு கால் செய்யவும். அதில் தானியங்கி குரல் மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு ATM மற்றும் டெபிட் கார்டு சேவைகளுக்கான எண் 2 ஐ அழுத்த வேண்டும். பின்னர் புதிய PIN எண்ணை உருவாக்குவதற்காக மீண்டும் எண் 1 ஐ அழுத்தவும்.
இதில் குறிப்பாக வங்கி கணக்குடன் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணிலிருந்து கால் செய்தால் அதற்கு மட்டும் எண் 2 ஐ அழுத்த வேண்டும். இதையடுத்து உங்களுடைய ATM கார்டின் கடைசி 5 இலக்க எண்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு மீண்டும் எண் 1 ஐ அழுத்தவும். தொடர்ந்து எண் 2 ஐ திரும்பவுமாக அழுத்தி ATM அட்டையின் கடைசி ஐந்து இலக்க எண்களை பதிவு செய்து உறுதிப்படுத்தவும். மீண்டுமாக உங்கள் SBI வங்கி கணக்கின் கடைசி ஐந்து இலக்க எண்களை பதிவிட்டு எண் 1 ஐ அழுத்தி உறுதி செய்யவும். பிறகு 2 ஐ அழுத்தி வங்கிக் கணக்கின் கடைசி 5 இலக்கங்களை மறுபடியும் பதிவு செய்யவும். இந்த செயல்முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் இவற்றை கவனமாக செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும். இந்த வழிகளை தொடர்ந்து நிறைவேற்றினால் உங்கள் SBI வங்கியின் ATM அட்டைக்கான கிரீன் PIN உருவாக்கப்படும். இந்த PIN எண்ணை நீங்கள் மாற்ற விரும்பினால் SBI வங்கியின் ATM மையத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.
பொறியியல் மேற்படிப்புகளுக்கான GATE நுழைவுத் தேர்வு – பிப்ரவரி மாதம் துவக்கம்!
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கான GATE நுழைவுத் தேர்வு, 2 புதிய கூடுதல் படிப்புகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
GATE தேர்வு:
பொறியியல் படிப்புகளுக்கு முதன்மையானதாக விளங்கும் IIT மற்றும் IISC போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் GATE நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வானது நாடு முழுவதும் உள்ள 7, IIT கல்வி நிறுவனங்களால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அகில இந்திய அளவில் நடத்தப்படும் 2022 ஆம் ஆண்டுக்கான GATE நுழைவுத் தேர்வை IIT காரக்பூர் நடத்துகிறது.
மேலும் இத்தேர்வுகள் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என தற்பொழுது அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக IIT காரக்பூர் இயக்குநர் வி.கே.திவாரி கூறுகையில், ‘மத்திய கல்வி நிறுவனங்களில் சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை GATE நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனுடன் புதிதாக புவிசார் பொறியியல் (GE) மற்றும் கடற்படை கட்டிடக்கலை மற்றும் கடல்சார் பொறியியல் (NM) உள்ளிட்ட 2 பாடங்களுக்கும் GATE நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய நிபுணத்துவம் தேவைப்படுவதால் GATE தேர்வுகளை நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த 2 பாடங்களை சேர்த்து மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு பிப்ரவரி மாதம் 5, 6, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்வுகளில் பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் பட்டப்படிப்பு முடித்தவர்களும் கலந்து கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார்.
இன்றைய ( 29..07.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.
தமிழகத்தில் ( 29.07.2021 ) இன்று 1,859 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை - 21,207
12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : 110
சென்னையில் இன்று ஒரே நாளில் 181 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:
கோவை - 188
ஈரோடு - 166
சேலம் - 95
தஞ்சாவூர் - 102
மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.07.2021 )
IMG-20210729-WA0036
மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,145
இன்றைய உயிரிழப்பு : 28 ( 33,996 )
சென்னை மட்டும் - 1
இணைநோய் இல்லாதவர் - 7
ஆசிரியர்கள் அனைவரும் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகளுக்கு வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள்
தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் _02.08.2021_ முதல் 100% பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்
கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகள் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கைப் பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக , ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை மாணவர்கள் பயன்படுத்துவதற்கான அறிவுரைகள் , ஒப்படைப்புகள் வழங்குதல் மற்றும் ஒப்படைப்புகளை மதிப்பீடு செய்து பதிவேடுகளில் பதிவு செய்து பராமரிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே பல்வேறு மாவட்டங்களில் , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுடன் , தாமே தன்னார்வத்துடன் தமது பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்திடும் வகையில் Google Meet , Zoom , Teams , Whatsapp , Telegram போன்ற இணைய வழி கற்பித்தல் முறையினை கையாண்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியதாகும் . இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள் ஆவர்.
தற்போது மாணவர்கள் சேர்க்கைப் பணி , பள்ளிக் கால அட்டவணை தயாரித்தல் , விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல் , பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல் , மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் ( Assignments ) வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்த விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 02.08.2021 முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிவதற்கு தேவையான அறிவுரைகளை அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலமாக வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் , புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் , இருதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளவர்கள் , மற்றும் ஆல் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் முதலான ஆசிரியர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் , சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே சார்ந்த ஆசிரியர் பள்ளிக்கு தினமும் வருகை புரிவதிலிருந்து விலக்கு அளித்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி!
அரசுப்பள்ளிகள் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? - அமைச்சர் பேட்டி!
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை அடுத்த கள்ளபெரம்பூர் செங்கழுநீர் ஏரியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: 9வது முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். பள்ளிகளில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பின்னர் தான் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். அரசுப்பள்ளிகள் இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு வரும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் :அடுத்த வாரம் வழங்க திட்டம்
பத்தாம் வகுப்பில், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்ட மாணவர்களுக்கு, அடுத்த வாரம் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன.
பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.பிளஸ் 2 மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொது தேர்வு மற்றும் பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அவர்களின், 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 மற்றும், பாலிடெக்னிக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. தேர்ச்சி சான்றிதழுடன் மதிப்பெண் பட்டியலும் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி சான்றிதழை, அடுத்த வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சான்றிதழ் வழங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பருவத் தேர்வு 28-ம் தேதி தொடக்கம்
பிஎட், எம்எட் படிப்புகளுக்கான பருவத் தேர்வுவு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட், எம்.எட் படிப்புகளில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், முதலாமாண்டில் அரியா் வைத்திருக்கும் மாணவா்களுக்கும் தேர்வுவு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வுவு கட்டணத்தைச் செலுத்துவதற்கான அவகாசம் நாளை திங்கள்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்தநிலையில், தேர்வுவுக்கான அட்டவணையை ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஎட், எம்.எட் 2-ஆம் ஆண்டுக்கான தேர்வுவு மற்றும் அரியா் பாடங்களுக்கான தேர்வுவு வரும் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது. மாணவா்கள் தேர்வுவுக்கான அட்டவணையை http://www.tnteu.ac.in/admin/file_storage/cms/FINAL%20TIME%20TABLE%202021.pdf.pdf என்ற லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொடக்க பள்ளிகளில் 5 லட்சம் பேர் 'அட்மிஷன்'
தமிழகத்தில் கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்ட பெற்றோர் பலர், தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளிகளில் இருந்து மாற்றி, அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை, ஐந்து லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக, தொடக்க கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் மாணவர்கள்: இதுதான் காரணமா?
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் முன்னெப்போதையும் விட அதிகளவிலான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளில் தான் தரமான கல்வி கிடைக்கும் என்று பொது மக்களின் மனங்களில் கடந்த பல ஆண்டுகளாக இருந்த எண்ணம் மாறத் தொடங்கியிருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் 2,04,379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தனியார் பள்ளிகளிலிருந்து 75,725 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை விவரங்களை கணக்கில் கொண்டால் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்ட பின்னர் 2011ஆம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை 1,00,320ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 88,000 முதல் 95,000 வரை என்ற நிலையில் இருந்து வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 2021-22-ம் கல்வியாண்டில் மட்டும் 27,311 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதில் 19,000க்கும் அதிகமான மாணவர்கள் தனியார்ப் பள்ளியிலிருந்து வந்தவர்கள். நடப்பு கல்வியாண்டில் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை 1,02,605 ஆக உள்ளது.
அரசுப் பள்ளிகளை நோக்கி பெற்றோர்களும், மாணவர்களும் படையெடுப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானதும் பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வதும் இதுதான். கொரோனா பொது முடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்களது அடிப்படை தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்ட முடியாமல் பல மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாத சூழலில் உள்ளனர். 75 சதவீத கட்டணம் கட்டினால் போதும், மூன்று தவனைகளாக கட்டலாம் என்று அரசு அறிவித்துள்ள போதும் பல பள்ளிகள் முழு தொகையை கேட்டு நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதனாலே பலர் அரசுப் பள்ளிகளை நோக்கி நகர்கின்றனர். ஆன்லைன் மூலம் ஒரு சில மணி நேரங்கள் பாடம் நடத்துவதற்கு ஏன் இவ்வளவு பணம் கட்ட வேண்டும். எனவே மாற்று சான்றிதழ் பெற்று அரசுப் பள்ளிகளில் சேர்கின்றனர். நிலைமை சீரான பின்னர் அடுத்த கல்வி ஆண்டில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் பல பெற்றோர்கள் உள்ளனர்.
ஏதோ ஒரு நிர்பந்தத்தில் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள மாணவர்களை எவ்வாறு தக்கவைப்பது என்பது பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ள பெரிய சவால். அரசுப் பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளை விட தரமான கல்வியை கொடுக்கும் போது இந்த மாணவர்களை தக்கவைப்பதோடு, மேலும் பல மாணவர்களை ஈர்க்க முடியும். இல்லையென்றால் மாணவர்கள் வந்த வேகத்தில் கொரோனாவுக்கு பின் மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி திரும்பிச் செல்லும் ஆபத்தும் உள்ளது.
கிராமப்புற தொடக்க பள்ளிகள் திறக்க அரசு ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தல்
சென்னை:குழந்தைகளுக்கு சத்துணவு கிடைக்க, கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து, அரசு ஆய்வு செய்யலாம் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு சூடான சத்துணவு கிடைப்பதில்லை; எனவே, சத்துணவு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உயர் நீதிமன்றத்தில், 'சிட்டிசன் கன்ஸ்யூமர் சிவிக் ஆக் ஷன் குரூப்' வழக்கு தொடர்ந்தது.
நடவடிக்கை
இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராகி, ''பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் சிலர் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கும் நிதி நெருக்கடி உள்ளது.''அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து, தேசிய மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இங்கும் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக, உணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம்,'' என்றார்.
அரசு தரப்பில், உணவுப் பொருள் வழங்கப்படுவதை தெரிவித்த அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து, அரசின் கருத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார்.ஆலோசனைஇதையடுத்து, கிராமப்புறங்களில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை திறப்பது குறித்து, அறிவியல் பூர்வ ஆலோசனைகளை பெறும்படி, அரசுக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்தும், அரசு ஆலோசிக்க உத்தரவிட்டது.மாநில அரசுக்கு வழிகாட்டும் விதமாக, மத்திய அரசிடம் அறிவியல் ஆலோசனை, புள்ளி விபர வசதிகள் இருப்பதால், இந்தப் பிரச்னையை உடனடியாக எப்படி அணுகலாம் என்பதை மத்திய அரசு தெரிவிக்கவும், முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
Selection Grade Sanction of Selection Grade - after promotion to a Higher post-strict instruction issued Regarding.
Of late it has been brought to the attention of the Government that a person holding a post in Tamil Nadu Government Service who is in the verge of completing 10 years in the lower post and is promoted to a higher post , has continued in the lower post for a few months till completion of 10 years in the lower post , so as to avail monetary benefit on awarding Selection Grade and after that joined in the promoted post . The concerned officials have not relieved the individual from the lower post immediately on promotion and have allowed the individual to continue in the lower post.
Had the authorities relieved the individual from the lower post on promotion the individual would have either joined in the promoted post or relinquished the right for promotion and continued in the lower post . As a result of the lapse on the part of the administration the individual bags two monetary benefits at a time , one for selection grade and another for promotion . This is highly irregular.
2. I am therefore directed to request you to issue clear instruction to your subordinate officers not to give way to such lapses in future and not to allow any person to continue in the lower post without relinquishing the right for promotion , in order to get Selection Grade after getting promotion . If any deviation is noticed in this regard , necessary departmental action should be taken against the concerned officers who are responsible for the lapse.
3. The receipt of this letter may be acknowledged immediately .
SHARE
VISIT WEBSITE
பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - சார்பாக CEO அவர்களின் செயல்முறைகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் : கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22 - ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் , இணையவழி மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் செயலப்பாடுகள் மாவட்ட அளவில் செம்மையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குறுவளமைய அளவில் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குறு வள மைய அளவில் ( CRC Level ) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது. இக்கூட்டத்தில் கொரானா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இணையவழி சமூக வலைதளம் , கல்வி தொலைக்காட்சி , Home visit போன்றவை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் அடைந்ததை உறுதி செய்து , பங்கு பெற்ற மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ள பள்ளிகளை தேர்வு செய்து மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு ஒவ்வொரு குறு வள மையத்திலிருந்தும் சிறந்த பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் புதுமையாக கையாளப்பட்ட TNTP , DIKSHA , Teachmint App , Zoom App , Whattsapp , Google Meet , MS Teams , Youtube மற்றும் இதர கல்வி சார்பான Apps மூலமாக LIVE Class செயல்படுத்தி வருவதை அறிய முடிகிறது. இப்பள்ளிகளை போல மற்ற பள்ளிகளும் கற்றல் , கற்பித்தல் , சிறப்பாக செயல்படும் பள்ளிகளை பின்பற்றி கல்வி தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு உரிய கால இடைவெளிக்குள் முடிக்கப்பட வேண்டும். இவ்வகையான கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த , சென்ற ஆண்டு குறுவளமைய அளவில் Learning outcomes சார்ந்த Worksheet அனைத்து வகுப்புகளுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டின் ஜூன் / ஜூலை மாதங்களில் அந்தந்த பள்ளிகளில் முடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திட்டத்தின்படி , Content Based Learning Outcomes அடைந்ததை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு Worksheets / Book Back Exercises , ஒப்படைவு வழங்குதல் மற்றும் சிறுத்தேர்வுகள் நடத்தப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீட்டு பட்டியலை தயார் செய்து தலைமை ஆசிரியர் பார்வைக்கு வாரந்தோறும் உட்படுத்தி பள்ளிக்கு வரும் ஆய்வு அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி , மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகள் ஏற்படா வண்ணம் மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பாடக் குறிப்பேட்டில் , பாடத்திட்டம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான வகுப்புகளின் பாடப் பொருள் சார்ந்த பாடக்குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதையும் , என Whattsapp குழுவில் மாணவர்களுக்கு வழங்கும் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைமை ஆசிரியர் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து வகுப்புகளின் Workdone பதிவேட்டிலும் கால அட்டவணை பின்பற்றி அம்மாத்திற்கான பாடப்பொருள் உரிய ஆசிரியரால் உரிய நேரத்தில் நடத்தப்பட்டுள்ளதை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலைமை ஆசிரியர்கள் சரி பார்த்து , மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Assignments எத்தனை மாணணவர்களால் முடிக்கப்பட்டுள்ளது. Assessment ல் மாணவர்களின் அடைவுநிலை ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேட்டில் பதியப்பட்டு தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருது - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் தகவல்.
காணொலிக் காட்சி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சார்ந்த விவரம் :
1. மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
அரசு பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும் 2. தொடக்கக் கல்வி இயக்குநர்
2021-22ம் கல்வி ஆண்டில் 1 ம் வகுப்பு முதல் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை EMIS- ல் பதிவேற்றம் செய்யவேண்டும். 2021-22ம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அதில் உதவிப் பெறும் பள்ளிகளில் 1,00,000 பேர் சேர்ந்திருக்கிறார்கள் , 1 கிலோ மீட்டர் தொலைவில் தொடக்க பள்ளிகளும் , 3 கிலோமீட்டர் தொலைவில் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவேண்டும். கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1125 மாணவர்கள் புதியதாக சேர்ந்து இருக்கிறார்கள். அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நரிக்கட்டி பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டும் 450 போர் மாணவர்களை சேர்த்துள்ளார். பெற்றோர்களை அணுகி மாணவர்களின் எண்ணிகையினை அதிகரித்துள்ளார். அதுபோன்று மற்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் பெற்றோர்களை அணுகி மாணவர்களை ஊக்குவித்தும் சேர்க்கையை அதிகரிக்கவேண்டும். தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத சூழ்நிலையில் அவர்கள் அரசு பள்ளியை நாடுகிறார்கள் , அவ்வாறு வரும் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்த்துக்கொள்ளவேண்டும். புதிய - 2021-22ம் கல்வி ஆண்டில் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு கால அட்டவணை தயார் செய்து தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் பாடத்திட்டங்கள் நடைபெறுகிறது என்ற தகவல்களை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் தகவல்களை தெரிவிக்கவேண்டும்.
3.Samagra Siksha
அனைத்து மாவட்டப் பள்ளிகளிலும் Hi - Tech Lab செயல்பாட்டில் இருக்கவேண்டும். இனி வருங்காலங்களில் PFMS மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பள்ளிக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்படாத நிலையில் இருந்தால் விரைவில் கட்டி முடிக்கவேண்டும். பள்ளிகளுக்கு தேவையான கழிவறைகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். 4.ஆணையர் பள்ளிக் கல்வி
2020-2021ம் கல்வி ஆண்டில் SC / ST மாணவர்களை அதிகம் சேர்த்த தலைமையாசிரியர்களுக்கான ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில் பாடங்களை நடத்தி வருகிறது. அது மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்று பார்க்கவேண்டும். தலைமையாசிரியர்களும் , ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களை வீட்டிற்கு சென்று கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் புரிகிறதா அவர்கள் ஆர்வமுடன் பார்க்கிறார்களா என்று பார்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் எடுக்கப்படும் பாடங்களுக்கு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும் , அவ்வாசிரியர்கள் நன்றாக பாடம் கற்பிக்கிறார்களா , அவர் கற்பித்த பாடத்தை அவருக்குநன்கு புரிந்து பாடம் நடத்துகிறா என்று பார்க்கவேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்படும். அரசின் அறிவிப்பின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! 24 மணி நேரத்தில் 43,509 பேர் பாதிப்பு: 640 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.22 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.15 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 43,509 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,28,114 ஆக உயர்ந்தது.
* புதிதாக 640 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,22,662 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,465 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,07,01,612 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,03,840 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் இதுவரை 45,07,06,257 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அகவிலைப்படி உயர்வு
கடந்த 2020 ஆம் ஆண்டு நாடு முழுவதும் உருவான கொரோனா பெருந்தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) தொகை நிறுத்தி வைக்கப்பட்டது. அதாவது கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அகவிலைப்படியை நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்தது.
அந்த வகையில் 3 தவணைகளாக நிறுத்தப்பட்டுள்ள அகவிலைப்படி தொகை திரும்ப கொடுக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த 3 தவணைகளாக நிறுத்தப்பட்டிருந்ததான அகவிலைப்படி தொகை 28% மாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கொரோனா பேரலை காரணமாக அரசுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி (DA) தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி தொகையை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 28% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும், இதனால் அரசுக்கு 2,000 கோடி ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
M.Phil, Ph.D Admission Notification ( Annamalai University )
M.Phil, Ph.D Admission Notification ( Annamalai University )
M.Phil, Ph.D Admission Notification 2021 - 22
Candidate should Register and apply only through online mode by logging onto www.annamalaiuniversity.ac.in The guidelines for registration are available in the Annamalai University Website
Online Application Registration Fee Rs.1000 / - for M.Phil . Programme & Rs.1500 / - for Ph.D. Programme
Important Dates
Online Registration Starts on : 29.07.2021
Closing of Online Registration : 31.08.2021
Date of Entrance Test & Interview will be intimated later
TRB தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி துவக்கம்!
தமிழகத்தில் நடைபெறும் டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.
TRB தேர்வு வினாத்தாள் தயாரிப்பு :
கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றனர். இந்த தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப்படவில்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக எவ்வித தேர்வுக்கும் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி துறை சார்பாக அமைச்சர் பொன்முடி தலைமையில் பொது கூட்டம் நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பல்கலை கழகம் மற்றும் கல்லூரிகளில் பேரரிசியர்கள் மற்றும் அலுவலக பணியர்க்ள நியமனங்களில் உள்ள முறைகேடுகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக டி.ஆர்.பி தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது.
வழக்கமாக வினாத்தாள் தயாரிக்கும் பணி சென்னையில் நடைபெறும் ஆனால் இந்த வருடம் கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. பல்கலை கலைக்கழகத்தில் 150 பேர் பங்கேற்பதற்கான ஐடா வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 31 வரை பணிகள் நடைபெறும் என டி.ஆர்.பி., இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்கள் பெயர் திருத்தம் செய்ய இறுதி வாய்ப்பு - தேர்வுத்துறை அறிவிப்பு.
After +2 Result Release N R Correction - Final C orrection
IMG_20210727_184845
IMG_20210727_184902
மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்டது.
பெயர்ப்பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும் , திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட , சில பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது , மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக்கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரிய வருகிறது.
எனவே , தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட மேல்நிலை இரண்டாமாண்டு ( +2 ) பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியல்களில் தேர்வர்களது தலைப்பெழுத்து , பெயர் , ( ஆங்கிலம் / தமிழ் ) பிறந்த தேதி , புகைப்படம் , பயிற்று மொழி ( Medium ) , மொழிப்பாடம் ( First Language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் , பள்ளியின் பெயரில் ( ஆங்கிலம் | தமிழ் ) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர்பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும் , மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது பல சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே , முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை தலைமையாசிரியர்களுக்கு உணர்த்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளக் கோரி ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கோ அல்லது அரசுத் தேர்வுகள் இயக்கககத்திற்கோ கடிதங்கள் அனுப்பி இருப்பினும் , மீளவும் பள்ளித் தலைமையாசிரியர்கள் பெயர்ப் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களின் விவரங்களை ( மாணவர்களின் தேர்வெண்ணுடன் ) , தெளிவாக பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் 28.07.2021 - க்குள் ஒப்படைக்க வேண்டும் . முதன்மைக் கல்வி அலுவலர்கள் 29.07.2021 பிற்பகல் முதல் 31.07.2021 ஆகிய நாட்களில் அரசுத் தேர்வுத் துறை இணையதளத்தில் தங்களுக்கான User ID மற்றும் Password- ஐ பயன்படுத்தி , தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலை பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட திருத்தங்களை பதிவேற்றம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . தேர்வர்களது நலன் கருதி , பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு , சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி இவ்வலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது . எனவே , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து சுற்றறிக்கை அனுப்புமாறும் , இப்பணிக்கு அதிமுக்கியத்துவம் அளித்து , உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மருத்துவ படிப்பில் இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% வழங்க வேண்டும்: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம்
திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இருக்கும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகிய அனைவருக்குமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் தமிழக அரசு, சமூக நீதிக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், ஏற்கனவே 27 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மட்டும், ஏன் 27 சதவீதம் அளிக்கப்படுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம், இந்திய மருத்துவக் குழுவிடம் கடந்த 2020 ஆண்டே, கேள்வி எழுப்பியுள்ளது. அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், கடந்த 2017 ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாத காரணத்தால், 11,000க்கும் மேற்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., பி.டி.எஸ். மற்றும் எம்.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கு, வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன என்றும், 40க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சங்கங்கள், அப்போதைய ஒன்றிய சுகாதார அமைச்சருக்கு கோரிக்கைகள் அளித்தன. அதன் பின்னரும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?. எனவே, ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உடனடியாக தலையிட்டு, பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதத்தை, அனைத்து இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பெற்றுத் தர, ஆணையிட வேண்டும்.
சென்னை பல்கலை தேர்வு இன்று ‛'ரிசல்ட்' வெளியீடு
சென்னை:சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்ந்த மாணவர்களுக்கு, கடந்த டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.இந்த தேர்வின் முடிவுகள் பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு மேல் வெளியிடப்படும் என, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பாண்டியன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் இணையத்தில் வெளியீடு
சென்னை:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரிகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளை அறிய, முந்தைய ஆண்டின், 'கட் ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு 26ம் தேதி முதல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவுகள் துவங்கியுள்ளன. ஆக., 24 வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், இரண்டு லட்சம் இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதில், இன வாரியாக இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். இந்த தரவரிசை பட்டியலில் குறிப்பிடப்படும் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் ஒதுக்கப்படும்.அந்த வகையில், மாணவர்களின் கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப, எந்த கல்லுாரிகளில் இடம் கிடைக்கும் என்ற தோராயமான நிலையை தெரிந்து கொள்ளும் வகையில், கடந்த ஆண்டு கட் ஆப் மதிப்பெண் பட்டியலை, தமிழகஇன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்டு உள்ளது.
கவுன்சிலிங் கமிட்டியின், www.tneaonline.org என்ற இணையதளத்தில், கடந்த ஆண்டு கட் ஆப் மற்றும் கல்லுாரி ஒதுக்கீட்டு பட்டியலை, மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இதன்படி, தங்களுக்கான இன்ஜினியரிங் வாய்ப்புகளை மாணவர்கள் திட்டமிட்டு கொள்ளலாம் என, கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் எத்தனை பேர்..?; அரசுப் பள்ளிகளில் தரவுகளை சேகரிக்கிறது அரசு..!
எத்தனை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் என்ற தரவுகளை அரசு சேகரித்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நீக்குவது குறித்த மனுவை பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அனில் குமார் உபாத்யாயா விசாரித்தார். அப்போது, அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்காத வரை கல்வி அமைப்பில் பெரிய முன்னேற்றங்கள் இருக்காது என நீதிபதி குறிப்பிட்டார். மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தகவல்களை சமர்பிக்குமாறு பீகார் அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த இடைக்கால உத்தரவின்பேரில் தரவுகளை சேகரிக்கும் பணியில் பீகார் அரசு இறங்கியுள்ளது. பீகாரில் உள்ள 38 மாவட்டங்களிலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட எத்தனை உயர்நிலை அதிகாரிகளின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற தரவுகளை சமர்பிக்க வேண்டும் என ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
ஆகஸ்ட் 4ம் தேதிக்குள் இந்த தரவுகளை சமர்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலர்களும் உதவ வேண்டும் எனவும் கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலர் திரிபுராரி சரண் காணொலி வாயிலாக ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். இது தொடர்பான தரவுகளை சேகரிப்பது நாட்டில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.
9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பா..? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. இதனால் பொது முடக்கத்திலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், பள்ளிகள் திறப்பது குறித்து அரசு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,
தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். இது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.
சி.எஸ்.ஆர் சமூக பொறுப்பு நிதி மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என கூறினார்.
நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை.
நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதி நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பொறியியல் கல்லூரிகளுக்கு கடந்த ஆண்டும், நடப்பு ஆண்டும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடப்பு செமஸ்டரில் கடைசி வேலை நாள் நவம்பர் 30 என்றும், டிசம்பர் 2ம் தேதி முதல் செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் ஜனவரி 19-2022ம் தேதி அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் துவங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை எப்படி? - ஒரு பார்வை
கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிக் கல்வித்துறையில் டிஜிட்டலின் பங்களிப்பு அத்தியாவசியமாகிவிட்ட சூழலில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் டிஜிட்டல் செயல்பாடுகள், தேசிய அளவில் முன்னோக்கி இருப்பது மத்திய அரசின் புதிய தரவுகளின் மூலம் தெரிய வருகிறது.
டிஜிட்டல் வழிக் கல்வியில் தமது முன்னெடுப்புகள் குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய அரசு, "இந்தியாவில் அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE)-ன் படி, 6 முதல் 14 வயதுக் குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் இலவச மற்றும் கட்டாய கல்வியை, சம்பந்தப்பட்ட அரசுகள் வழங்குவதை உறுதி செய்கிறது.
கோவிட் பெருந்தொற்று காலத்திலும், குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக, மத்திய கல்வி அமைச்சகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டன. குறிப்பாக, டிஜிட்டல் முறையில் ஆன்லைன் கல்வி, டி.வி மற்றும் ரேடியோ மூலம் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதற்காக பிரதமரின் இ-வித்யா நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதுமட்டுமின்றி, திக்ஷா (ஆன்லைன்), ஸ்வயம் (ஆன்லைன்), ஸ்வயம் பிரபா (டி.வி), தூர்தர்ஷனின் இதர சேனல்கள், அகில இந்திய ரேடியோ நெட்வொர்க்குகள் மூலம் அனைவருக்கும் கல்வி கொடுக்கப்பட்டது. மேலும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வியைத் தொடர்ந்து வழங்குவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய பிரக்யதா வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. இணைய இணைப்பு இல்லாதவர்களுக்காக, டி.வி, ரேடியோ மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கற்றலுக்கு தீர்வு காண மாற்றுக் கல்வி அட்டவணை உருவாக்கப்பட்டது.
சமுதாய ரேடியோ, நோட்டு - புத்தகங்களை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்குதல், மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் செல்லுதல், சமுதாய வகுப்பறைகள், இலவச போன் எண்கள், எஸ்.எம்.எஸ் மூலம் வேண்டுகோள் விடுத்து ஆடியோ மூலம் கல்வியைப் பெறுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் எடுக்கப்பட்டன" என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
இதனிடையே, மாணவர்களின் கல்விக்காக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்த நடவடிக்கைகளும், பங்களிப்பு தொடர்பாகவும் 'இந்திய டிஜிட்டல் கல்வி - ஜூன் 2020' என்ற ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வியை ஊக்குவிக்க அதிகளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. குறிப்பாக, சிக்ஷா வாணி மூலம் ரேடியோ, சமுதாய ரேடியா, சிபிஎஸ்இ பாடங்களின் ஆடியோ பதிவிறக்கம் போன்றவை மாநிலங்களிடையே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் ‘பார்வையற்ற மற்றும் காதுகேளாத மாணவர்களுக்காக NIOS இணையதளம் / யூடியூப்-ல் சிறப்பு இ-பாடங்கள் மற்றும் சைகை மொழிப் பாடங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், யுஜிசி-யும் தேவையான ஒழுங்குமுறைகளை அறிவித்தது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தின. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வியை உறுதி செய்ய ஸ்வயம், ஸ்வயம் பிரபா, தேசிய டிஜிட்டல் நூலகம் (NDL), மெய் நிகர் ஆய்வுக் கூடம், இ-யந்த்ரா, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி, கல்விக்கான திறந்தவெளி மென்பொருள் போன்ற பலவிதமான டிஜிட்டல் நடவடிக்கைகளையும் மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டது.
இதன்படி, இந்திய மாநிலங்களில், டிஜிட்டல் கல்வியின் அடிப்படையில், ஹிமாச்சலப் பிரதேசமும், மேகாலயா மாநிலமும் முதல் இடத்தில் உள்ளது. டிஜிட்டல் கல்விக்கு எடுக்கப்பட்ட 16 நடவடிக்கைகளிலும் இரண்டு மாநிலங்களில் முழுமையாகப் பங்காற்றியுள்ளன. மூன்றாவது இடத்தில் குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் 16 நடவடிக்கைகளில் 15 நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டைக் கொடுத்துள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 7-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், கல்வி வானொலி சேனல் மட்டும் இல்லை.
அதைத் தவிர்த்து, டிஜிட்டல் வகுப்பறை, ஐ.சி.டி ஆய்வகம், ஆன்லைன் மாணவர் சேர்க்கை, இ-கன்டென்ட் களஞ்சியம், இ-புத்தகங்கள், ஆஃப்லைன் புத்தகங்கள், இன்டராக்டிவ் ரிசோர்சஸ் - ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, கல்வி வானொலி சேனல், வெப் டிவி சேனல்கள், இணையவழி கற்றல் தளம், கணினிவழி கற்றல், மொபைல் செயலி, சிவில் சொசைட்டி பார்ட்னர்ஷிப், போட்டித் தேர்வுகளுக்கான டிஜிட்டல் முன்முயற்சிகள் மற்றும் மற்ற முன்முயற்சிகளில் சிறப்பாக ஈடுபாடு கொடுத்துள்ளது தமிழ்நாடு’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய அறிக்கையில், டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு எடுத்துள்ள முக்கிய சிறப்புகளை எடுத்துக் கொண்டால், இணையவழி கற்றலில், இணையவழி கற்றல் தொடர்பான 10,000 கன்டென்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் டிஜிட்டல் முறையில் 390 பாடபுத்தகங்களும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஒருங்கிணைந்த யூடியூப் வீடியோக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளன என்பதும்; டி.என்.டி.பி (Tamil Nadu Teachers Platform)-ல் 10,000 மின் கற்றல் பொருளடக்கமும், 390 டிஜிட்டல் பாடப்புத்தகங்களும், 980-க்கும் அதிகமான இன்ட்ராக்டிவ் க்விஸ்களும், 2,000+ ஒருங்கிணைந்த யூ-டியூப் வீடியோக்களும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், TN SCERT சேனல் மூலம் 3,390க்கும் அதிகமான யூ-டியூப் வீடியோக்கள் வழங்கப்பட்டு டிஜிட்டல் கல்வி வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றியுள்ளது.
அறிக்கையின்படி டிஜிட்டல் கல்வியில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் சிறப்பாகப் பங்காற்றினாலும் மிசோரம், திரிபுரா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.
MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம்
MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும்.
சாதிச் சான்று, வருமானச் சான்று தேவை.
APPLICATION-PDF
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
CLICK HERE TO DOWNLOAD
சென்னை IIT வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech/ ME/ M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!! -Last date-28.07.2021
சென்னைIIT வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech/ ME/ M.Tech முடித்தவர்கள்விண்ணப்பிக்கலாம்!!
சென்னைஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து காலியாக உள்ளSenior Research Fellow பணிகளுக்குபுதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமும்தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து இப்பணிகளுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமையானவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பல்கலைக்கழகபணியிடங்கள் :
சென்னைஇந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Senior Research Fellow பணிக்கு என ஒரே ஒருகாலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னைIIT கல்வித்தகுதி :
Metallurgical/ Mech பாடங்களில்ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
Metallurgical/ Mech பாடங்களில்BE/ B.Tech தேர்ச்சியுடன்2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்கவேண்டும்.
IITM ஊதியவிவரம்:
பணிக்குதேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வுசெயல்முறை :
விண்ணப்பதாரர்கள்Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாகபெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்முறை :
தகுதியானவர்கள்வரும் 28.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Notification & Online Apply
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://icandsr.iitm.ac.in/recruitment/
தேர்வில்லாமல் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை -Last date to apply -30.07.2021
தேர்வில்லாமல்தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.1,25,000/-
தமிழ்நாடுமெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury), Assistant General Manager மற்றும் Deputy General Manager (Operations / Administration) பதவிக்குபல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TMB வங்கிவயது வரம்பு:
Deputy General Manager (Risk Management), Deputy General Manager (Integrated Treasury) ஆகியபதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது
30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 க்குள்இருக்க வேண்டும்.
Deputy General Manager (Operations / Administration) பதவிக்கு 30.06.2021 தேதியின் படி, அதிகபட்சம் 45 முதல்55 க்குள் இருக்க வேண்டும்.
Assistant General Manager பதவிக்கு30.06.2021 தேதியின் படி, வயதானது அதிகபட்சம்53 க்குள் இருக்க வேண்டும்.
Manager கல்விதகுதி:
அரசால்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate / Post Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுசெயல் முறை:
விண்ணப்பத்தார்கள்நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படஉள்ளனர். குறுகிய பட்டியல் மூலம்தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம்தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம்தகுதியான தேர்வர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.
மாத சம்பளம்:
தேர்வுசெய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.1,25,000/- ஊதியம்வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும்முறை:
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.tmbnet.in/tmb_careers/ என்றஇணைய முகவரி மூலம் 30.07.2021 வரைதங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
2 NOTIFICATION & ONLINE APPLY-LINK
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online
தமிழ்நாட்டில் 95 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல விருப்பம் - ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. கொரோனா குறைந்ததையடுத்து மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 95 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தயாராக இருப்பதாக தன்னார்வ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகளில் 7 சதவீதம் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது, ஆனால் அரசு பள்ளிகளில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் 2.96 சதவீதம் மாணவர்கள் தற்காலிக குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர்.
பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் 38 சதவீதம் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளில் 45 சதவீதம் மாணவர்கள் பற்கேற்பதாகவும், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் 41 சதவீதம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
கொரோனாவால் பள்ளி செல்ல முடியாதாது வருத்தம் அளிப்பதாக 82 சதவீதம் மாணவர்கள் தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறந்தால் பள்ளிகளுக்கு செல்ல 95 சதவீதம் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DISTRICT WISE - ARTS COLLEGE NAME & CODE
DISTRICT WISE - ARTS COLLEGE NAME & CODE
DISTRICT WISE - ARTS COLLEGE NAME & CODE
CLICK HERE TO DOWNLOAD-COLLEGE LIST
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு!
‘
‘இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை’ – மத்திய அரசின் புதிய ஊதிய குறியீடு!
மத்திய அரசு விரைவாக புதிய ஊதிய குறீயிடு குறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஊதிய குறீயிடு
மத்திய அரசு இந்தியாவில் பணிபுரியும் அனைத்து வித ஊழியர்களின் நலன் கருதி “புதிய ஊதிய குறீயிடு” அறிவிப்பு ஒன்றினை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் ஊழியர்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டி இருக்கும். இந்த முறை இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே அமல்படுத்தப்பட இருந்தது. பின்னர், சில காரணங்களால் இந்த முறை அமல்படுத்தப்படவில்லை. ஆனால், வரும் அக்டோபர் மாதம் முதல் இதனை செயல்படுத்த அரசு உத்தரவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய குறீயிடு (New Wage Code) அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் வேலை நாட்கள், வேலை நேரம் மற்றும் சம்பளம் ஆகியவற்றின் தற்போதைய நிலை மாறும். இந்த புதிய ஊதிய குறீயிடு அறிவிக்கப்பட்டால், ஊழியர்கள் இனி 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டி இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு ஒரு பணியாளர் 8 மணி நேரம் வேலை பார்த்தால், அவர் வாரத்தில் 6 நாட்கள் பணி செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்த்தால், அவர் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டி இருக்கும்.
12 மணி நேரம் பணியினை பார்க்கும் ஊழியர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் கண்டிப்பாக விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் விடுப்பை 240 முதல் 300 ஆக உயர்த்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒருவர் தொடர்ந்து 5 மணி நேரம் வேலை பார்க்க கூடாது. அரை மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்றும் புதிய ஊதிய குறீயிடு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பினை மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பம்!
கல்லூரிக் கல்வி இயக்ககம் இன்று (25/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2021- 2022) விண்ணப்பங்களை www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.
நாளை (26/07/2021) முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation centre-AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து 'AFC' மையங்களிலும் போதிய அளவில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பத்தாரர்கள் Debit Card/Credit Card/Net Banking மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும், பதிவு கட்டணமாக 2 ரூபாயும் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai- 6" என்ற பெயரில் 26/07/2021 அன்று அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: செப்.,4ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புகளில் சேர நாளை (ஜூலை 26) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பஇ, பிடெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்பதிவு நாளை துவங்குகிறது. நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆக.,24ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 25ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். செப்., 4ம் தரவரிசை பட்டியல் வெளியீடப்படும். செப்.,7 முதல் அக்., 4 வரை கலந்தாய்வு நடக்கும். அக்., 13 முதல் 16 வரை துணைக்கலந்தாய்வு நடக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அதேபோல், கல்லூரி கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதளங்களில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆக.2 முதல் ஆசிரியா்களுக்கு கணினி பயிற்சி
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஆக.2-ஆம் தேதி முதல் கணினிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆசிரியா்கள் மேற்கொள்ள அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப த் திறன் வளா் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சிக்கான கையேடு, காணொலிகள் மற்றும் மதிப்பீட்டு வினாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதைக் கொண்டு உயா் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மாநில கருத்தாளா்களைக் கொண்டு மாவட்ட அளவிலான பயிற்சி திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும். இந்தப் பயிற்சிக்கு தோவான கருத்தாளா்கள் அருகே உயா்தொழில் நுட்ப ஆய்வகத்தில் சென்று பயிற்சி பெற வேண்டும். இவா்கள் மூலம் பள்ளிகள் அளவில் ஆசிரியா்களுக்கு ஆக.2 முதல் 30-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.
எனவே, தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளியில் உள்ள உயா் தொழில்நுட்ப ஆய்வக கணினிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இது தொடா்பாக தலைமையாசிரியா்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அங்கீகரிக்கப்பட்ட & அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் (NURSING TRAINING ) எவை ?தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு.
அங்கீகரிக்கப்பட்ட செவிலியப் படிப்புகள் எவை ?
அங்கீகரிக்கப்படாத செவிலியப் படிப்புகள் - என்னென்ன ? தமிழ்நாடு செவிலியர் குழுமம் வெளியீடு.
மாணவர்கள் செவிலியர் பயிற்சியில் சேர்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்....
நர்சிங் பயிற்சி என்ற பெயரில் பல பெரிய மருத்துவமனைகள், நிறுவனங்கள் ,பல்கலைக்கழகங்கள் ,கல்லூரிகள், பள்ளிகள்
கீழ்க்கண்ட பெயர்களில் போலி நர்சிங் பயிற்சிகளை நடத்தி நர்சிங் டிப்ளமோ மற்றும் சர்டிபிகேட்டுகளை வழங்குகிறார்கள் .
இந்த சர்டிபிகேட்டுகளை கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது . கல்வி நிறுவனங்களை பற்றிய தகவல்கள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது
பதிவாளர்
தமிழ்நாடு செவிலியர் குழுமம்
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? உணவு வழங்கல் துறை விளக்கம்!
தமிழகத்தில் குடும்பத் தலைவிக்கு ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். ஆனால் இது குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய்: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா நிவாரணத்தொகை, வேலைவாய்ப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை போன்ற வாக்குறுதிகள் முக்கிய அம்சங்களாக இருந்தது. இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்தது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 திட்டங்களில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டார். அதில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் குடும்ப அட்டையில் குடும்ப தலைவியின் புகைப்படம் இருந்ததால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் ஏராளமான பெண்கள் மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இது குறித்து விளக்கமளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர், ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும். இதற்கான தேவையான முன்னேற்பாடுகளை செய்தவுடன் முதல்வர் அறிவிப்பார். அதுவரை பெண்கள் காத்திருக்க வேண்டும் என கூறி உள்ளார்
ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவைகளில் வரப்போகும் மாற்றங்கள் – ஊதியம் முதல் EMI வரை!
இந்திய ரிசர்வ் வங்கி வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் NACH விதிகளை மாற்றியுள்ளது. இதன் மூலம் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் வார இறுதி நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற சேவைகளை செயல்படுத்த முடியும்.
புதிய விதி
RBI ன் புதிய அறிவிப்பின் படி, சம்பளம், ஓய்வூதிய பரிமாற்றம் மற்றும் EMI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி செயல்படும் நாட்களை நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியதில்லை. இந்த சேவைகளை வங்கி வாடிக்கையாளர்கள் இனி வார இறுதி நாட்களிலும் செயல்படுத்திக்கொள்ள முடியும். அதாவது ரிசர்வ் வங்கி, தற்போது தேசிய தானியங்கி தீர்வு (NACH) விதிகளை மாற்றியுள்ளது. அந்த அடிப்படையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் வங்கி செயல்படாத நாட்களிலும், மேலே குறிப்பிடப்பட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இந்த புதிய விதிமுறைகள் மூலம் பணம் செலுத்துவதை எளிதாக்கி, வாடிக்கையார்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் சேவைகளை மேற்கொள்ள முடியும். இதன் காரணமாக, வங்கிகள் செயல்படும் வார நாட்களில் கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற கொடுப்பனவுகளை வார இறுதிகளில் செயல்படுத்த முடியும். பொதுவாக, ஒரு சில நேரங்களில் மாதத்தின் முதல் நாள் ஒரு வார இறுதியாக அமைவதால் அடுத்த வேலை நாளுக்கு சம்பளம் தாமதமாகி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் RTGS மற்றும் NACH சேவைகள் வாரத்தின் 7 நாட்களும் கிடைப்பதாக அறிவித்தார். இந்த NACH சேவைகள் மூலம் வட்டி, சம்பளம், ஓய்வூதியம், மின்சாரம், எரிவாயு, மற்றும் பணம் செலுத்துதல் போன்ற கடன் பரிமாற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர தொலைபேசி, நீர், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், நிதி முதலீடு, காப்பீட்டு பிரீமியம் போன்றவைகளை செலுத்துவதற்கும் இச்சேவைகள் உதவுகிறது.
10 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
10 நிமிடத்தில் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம் இதோ!
புதிதாக பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு வழங்கும் பிறப்பு சான்றிதழ் என்பது கட்டாயமானதாகும். முதன் முதலில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது தேவைப்படும் இந்த முக்கியமான ஆவணத்தை தற்போது 10 நிமிடங்களில் ஆன்லைன் வழியாக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பு சான்றிதழ்:
பொதுவாக ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் சேருவதற்கு, அரசு தரும் கல்வி உதவித்தொகைகளை பெற்றுக்கொள்வதற்கு, வங்கி சேவைகளுக்கு முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டைகள் பயன்படுகிறது. இந்த ஆதார் அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே அரசு வழங்கிய பிறப்பு சான்றிதழ் முதன் முதலில் பள்ளியில் சேருவதற்கு, பாஸ்போர்ட் அப்ளை செய்வதற்கு முக்கியமானதாகும். இந்த பிறப்பு சான்றிதழ் இல்லாமல் எந்தவொரு குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க முடியாது.
இந்த சான்றிதழை நாம் தற்போது ஆன்லைன் வழியாக, சில எளிய முறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக நீங்கள் செலவிடும் நேரம் என்பது வெறும் 10 நிமிடங்களே ஆகும். இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முதலில்,
https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதளத்துக்கு செல்லவும்.
அதில் Birth Certificate என்பதில் Apply Birth Registration ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின்பு கேட்கப்பட்டுள்ள ஒவ்வொரு விவரங்களையும் முறையாக பதிவு செய்யவும். அதாவது மாவட்டம், பஞ்சாயத்து, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்கள் கொடுத்தவுடன், குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், குழந்தையின் பெயர் ஆகியவற்றை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும்.
அதற்கு பிறகு அந்த குழந்தையின் பெற்றோர் விவரங்கள், முகவரி, குழந்தை பிறந்த இடம் ஆகியவற்றை உள்ளிடவும். பிறகு குழந்தையுடைய தாயின் முகவரி, கல்வித்தகுதி, வேலை, திருமணம் செய்த போது இருந்த தாயின் வயது, குழந்தை பிறந்தபோது உள்ள தாயின் வயது, தந்தையின் கல்வித்தகுதி, வேலை, ஏற்கனவே குழந்தைகள் இருந்தால் அதன் எண்ணிக்கை, தற்போது பிறந்த குழந்தையின் எடை, பிரசவ முறை, பிரசவம் செய்தவர்கள், கர்ப்ப காலம் உள்ளிட்ட தகவல்களை சரியாக கொடுக்க வேண்டும்.
கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தையும் சரி பார்த்து Submit கொடுக்கவும்.
பின்னர் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு Acknowledgement எண் அனுப்பப்படும்.
இந்த எண்ணை வைத்து, உங்கள் விண்ணப்ப விவரங்களை நீங்கள் சரி பார்த்து கொள்ளலாம். அதாவது
https://etownpanchayat.com/PublicServices/Home.aspx#! என்ற இணையதளத்தில் Birth Details இருக்கும்.
அதில் Birth Certificate Search ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்படும் தகவல்களை நிரப்பியவுடன் Generate கொடுக்கவும்.
இப்போது உங்கள் பிறப்பு சான்றிதழை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு முடிவு ஒத்திவைப்பு – ராஜஸ்தான் அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்புகளை திரும்ப பெறுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் நாடு முழுவதும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக, ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலை 22 ஆம் தேதி அறிவித்தது. இதனிடையே ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் பள்ளிகளை திறப்பது குறித்த முடிவை திரும்ப பெறுவதாகவும், பள்ளிகளை திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ராஜஸ்தான் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின் படி, ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அன்று பள்ளிகளை மீண்டும் திறக்கும் முடிவை அரசு ரத்து செய்கிறது. மேலும் 5 அமைச்சர்களைக் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். பின்னர் பள்ளிகளை திறப்பதற்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முதல்வர் தெரிவித்த 5 அமைச்சர்கள் கொண்ட சிறப்பு குழுவில் கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, சுகாதார அமைச்சர் ரகு சர்மா, வேளாண் அமைச்சர் லால்சந்த் கட்டாரியா, உயர்கல்வித்துறை அமைச்சர் பன்வர் சிங் பாட்டி மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சர் சுபாஷ் கார்க் ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குழு பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது இந்தியவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதில் கவனம் தேவை என்பதால் அறிவிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்குள் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு போன்றவைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசிரியர்கள் சங்கம் :
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்தாண்டு களில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியும் மற்றொரு புறம் பள்ளிகள் திறப்பதற்குள் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு போன்றவைகளை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை அரசுக்கு கோரிக்கை வைத்து விடுத்துள்ளனர். மேலும் அனைத்து பள்ளிகளிலும் இரவு காவலர்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டும்.
மேலும் தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கையை உருவாக்கி கல்வியை மேம்படுத்த வேண்டும். அரசு பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளை இந்த விடுமுறை காலத்திலேயே செய்து முடிக்க வேண்டும். தமிழகத்தில் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இலவசமாக்கப்பட வேண்டும். அனைவரும் கல்வி கற்கும் வகையில் பாட திட்டங்களை எளிமையாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
10 & 12 மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021
10 & 12 மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு JULY-2021
-ceo proceeding
இராணிப்பேட்டை மாவட்டம் 2021-2022 இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி முதலாம் அலகுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு அலகுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கால அட்டவணைப்படி முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஜூன் , ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை சுருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் அலகுத் தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயார் செய்து உரிய பதிவேட்டில் பதிந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்கிறார்கள். அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதாந்திர அலகுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் சுற்றல் கற்பித்தல் திறனை ஊக்கப் படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
-unit test-1
-Time table std 10
-Time table std 12
-தேர்விற்கான பாடதிட்டம்
மீன்வள உதவியாளா் பணியிடம்: விண்ணப்பிக்க ஆக.2 கடைசி
"மீன்வள உதவியாளா் காலிப் பணியிடத்துக்கு, ஆக.2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் கட்டுப்பாட்டில் சேத்துப்பட்டு ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மீன்வளஉதவியாளா் பணியிடத்தை பொதுப்போட்டி (முன்னுரிமைபெற்றவா்) பிரிவில் தகுதியின் அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 30 வயதுக்குள்பட்ட பொதுப்பிரிவினா் (தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரை) விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவா்கள், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்), சென்னைஅலுவலகம், டி.எம்.எஸ் வளாகம் மூன்றாம் தளம், தேனாம்பேட்டை, சென்னை 600 006 என்ற முகவரிக்கு, ஆக.2-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 044 2432 8596 என்ற எண்ணை அணுகலாம்."
பிளஸ் 2-வில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவா்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
"பிளஸ்2 தோ்வில் மதிப்பெண் குறைவு என கருதும் மாணவா்கள் துணைத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரும் 27-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் அனைத்துப் பாடங்களிலும் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது எழுதவுள்ள தோ்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது. தட்கல் திட்டம்:
வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் ஜூலை 27-ஆம் தேதி வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் தட்கல் திட்டத்தில் ஜூலை 28-ஆம் தேதி ஆன்லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1,000 ஆகும். ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை இந்தத் தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது."